தொ(ல்)லைக்காட்சி போன்ற ஊடகங்கள் போதாதென்று இப்போது இன்டெர்னெட் மூலமாக சாட்டிங், செல்ஃபோன் வழியாக (பலான) படங்கள் மற்றும் வீடியோக்களின் பரிமாற்றம், அங்கிங்கென்னாதபடி அனைத்து மக்கள் கையிலும் தவழ்ந்து கொண்டிருக்கும் ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸப் – இது போன்ற ஊடுருவிகள் குழந்தைகளின் மனத்தினுள் பலத்த தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. முன்பின் தெரியாத முகமூடிகளுடன் அந்தரங்க விஷயங்களைக் கூட பகிர்ந்து கொண்டு மணிக்கணக்காக சாட் பண்ணுகிறார்கள். இதனால் தெளிவான சிந்தனை உள்ளவர்களின் மனங்கள் கூட சலனப்பட்டு விடுகின்றன. எதையும் ஒரு தடவை முயன்று பார்த்தாலென்ன, அதில் என்ன தவறு – என்பது போன்ற எதிமறை உந்துதல்கள் எழுகின்றன. Children tend to rebel against their parents to fall in line with their peers. அந்த இளம் வயதில் (impressionable age) அவர்களுக்குத் தவறான வழிகாட்டிகள் அமைந்து விட்டால் அவ்வளவுதான் – அவர்களின் வாழ்க்கை மற்றும் அவர்தம் பெற்றோர் மற்றும் உடன்பிறப்புக்கள் வாழ்வும் பெருமளவில் பாதிக்கப்படுகின்றது.
பெண் குழந்தைகள் மட்டும்தான் என்பதில்லை, ஆண் குழந்தைகளுக்குக் கூட ஒவ்வொரு திருப்பத்திலும் வக்கிர ஓநாய்கள் பாய்ந்து குதறக் காத்துக் கிடக்கின்றன!
பெற்றோர்கள் கவனிக்க வேண்டிய இன்னும் சில முக்கிய வழிமுறைகள்:-
- தவறான எண்ணம் கொண்டவர்கள் விடலைப் பருவத்தினர் மற்றும் ஆண்கள் மட்டுமல்ல என்பதை மனத்தில் இருத்திக் கொள்ள வேண்டும். வயதில் பெரியவர்கள், தெரிந்தவர், அறிமுகமானவர், அக்கம் பக்கத்தில் உள்ளவர், உறவினர் (நெருக்கமாக இருந்தால் கூட), ஆன்மீக ஈடுபாடு உள்ளவர், ஊரறிந்த பெரிய மனிதர் – இது போன்றவர்களிடமும கூட நம் சிறார்களை மிக நெருக்கமாகப் பழக அனுமதிக்கக் கூடாது. இப்போது incest போன்ற மிக அருவருப்பான செக்ஸ் வக்ரங்கள் அதிகமாகி விட்டன.
- அதுபோல் யாராவது குழந்தைகளிடம் “ஒரு மாதிரி” நடப்பதாக பெற்றோர் மனதில் தோன்றினால் (அல்லது துளி சந்தேகம் வந்தாலும்) அவர்களை அறவே வெட்டி விடவேண்டும். இதில் நாசூக்கே பார்க்கக் கூடாது. எவ்வளவு பெரியவர்களாகவோ, வேண்டியவர்களாகவோ அல்லது சமுதாயத்தில் அந்தஸ்து மிக்கவர்களாகவோ இருந்தாலும், அவ்வாறான சூழ்நிலையில் நறுக்கென்று உறவைக் கத்தரிக்க வேண்டும். குழந்தைகளின் நலவாழ்வு தான் முக்கியம். மற்றவை அதற்குப் பின்னர் தான்!
- ஆசிரியர்கள், உடற்பயிற்சி மாஸ்டர், கராதே மாஸ்டர், வேன் டிரைவர், பியூன் போன்றவர்கள் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள், அவர்களின் நடை, உடை பாவனைகள் குழந்தைகளின் மனத்தில் எவ்வித தாக்கத்தை ஏற்படுத்துகின்றன போன்றவற்றை subtle-ஆக கவனிக்க வேண்டும். சிறு red flag தென்பட்டால் கூட தகுந்த நடவடிக்கை எடுக்கத் தயங்கக் கூடாது. சமீபத்தில் பெங்களூர் பள்ளிகளில் நிகழ்ந்தவை நினைவிருக்கலாம்.
- நம் குழந்தை சின்னஞ்சிறிசுதானே என்று எண்ணி யாரிடமும் கொஞ்சவோ விளையாடவோ கொடுத்துவிட்டு விலகிச் சென்று விடாதீர்கள். செக்ஸ் வெறியர்கள் பச்சிளம் பாலகர்களைக்கூட விட்டு வைப்பதில்லை என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும் (Beware of pedophiles!). இந்த செக்ஸ் விஷயத்தில் யாரையும் நம்பக் கூடாது. எவரெவர் மனத்துள் எவ்விதமான அழுக்கு குடி கொண்டிருக்கிறது என்பது வெளியில் தெரியாது.
- சிறு குழந்தைகளை தகுந்த துணையின்றி தனியாக எங்கும் அனுப்பாதீர்கள். அதிலும் குறிப்பாக அதிக ஆள் நடமாட்டமில்லாத இடங்கள், காலியாக இருக்கும் லிஃப்ட் – இது போன்றவற்றில் கண்காணிப்பு மிக அவசியம்
- ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் தங்களின் ஃபோட்டோக்களையோ, ஏனைய விவரங்களையோ ஒரு போதும் ஷேர் செய்யக் கூடாது என்று அறிவுறுத்துங்கள். ஏனெனில் they could be misused by pedophiles. குழந்தைகளின் ஆன்லைன் செயல்பாடுகளை கண்காணியுங்கள். யாரிடம் சாட் செய்கிறார்கள், அடிக்கடி யார் அவர்களை அழைக்கிறார்கள் போன்ற விவரங்களை கூர்ந்து கவனியுங்கள். மெயில்களை வாசியுங்கள். ஆனால் அவர்களை குற்றவாளிகளை காவல் நிலையத்தில் விசாரிப்பது போல் செய்யாதீர்கள். தவறு நேராமல் தடுப்பதுதான் நோக்கம். தண்டிப்பது அல்ல.
- எது good touch, எது bad touch போன்ற அறிவுரைகளை பெற்றோர்கள் விவரமாக குழந்தைகளிடம் எடுத்துச் சொல்லி எந்தெந்த முறைகளைக் கையாண்டு அவற்றைத் தவிர்க்க வேண்டும் என்பதை விளக்க வேண்டும்.
- ஆடை விஷயத்தில் எப்போதும் கவனமாக இருக்கப் பழக்க வேண்டும். தூங்கும்போது கூட விலகாமல் பார்த்துக் கொள்வது எப்படி என்று விளக்க வேண்டும்.
- குழந்தைகளை குற்றவாளிகள் (delinquents) போல் நடத்தக் கூடாது. அவர்கள் யார் மேலாவது குறைகளைக் கூறினாலும் தவறு அவர்கள் பக்கம்தான் என்ற mindset-ஐ பெற்றோர் மனத்திலிருந்து ஒழிக்க வேண்டும். திறந்த மனதுடன் அவர்கள் கூறுவதைக் கேட்க வேண்டும். முழுமையாகக் கேட்குமுன்னரே முடிவெடுக்கக் கூடாது. அப்போதுதான் பயமின்றி மனதில் உள்ளவற்றை வெளிப்படுத்துவார்கள். அதன்மூலம் பல மறைக்கப்ப்டும் உண்மைகள் வெளியே வரும்.
- பெற்றோர்கள் நண்பர்கள் போல் பழகி, இறுக்கமின்றி குழந்தைகள் தங்கள் பயங்கள், மனக் குமுறல்கள், தங்களிடம் மற்றோர் நடந்து கொள்ளும் முறைகள், bullies in schools முதலியவற்றைப் பற்றி தயக்கமின்றி வெளியே சொல்லும் சகஜமான சூழ்நிலையை நடைமுறைப் படுத்த வேண்டும். குழந்தைகளோடு மனம் விட்டுப் பேச அன்றாடம் நேரம் ஒதுக்க வேண்டும். இன்று என்ன நடந்தது, யார் யார் என்னென்ன செய்தார்கள் போன்ற leading questions களைக் கேட்க வேண்டும். இல்லாவிடில் அவர்கள் மனம் மிகவும் இறுகிவிடும் (clam shut). தனக்கு ஆதரவு இல்லை என்ற உணர்வு ஆதிக்கம் கொள்ளும். மேலும், போதுமான வழிகாட்டுதல் இன்மையால் தவறான முடிவுகளை எடுத்து விடுவார்கள். இது போன்று மனம் விட்டுப் பேசும் சூழ்நிலையை ஏற்படுத்தாமல் “பயம் ஒன்றே ஆயுதம்” என்று பழைய பஞ்சாங்கமாக இருந்தால் அந்த பயத்தைப் பயன்படுத்தியே பல கயவர்கள் குழந்தைகளை அடிமைப் படுத்திவிடும் அபாயம் உள்ளது.
மேலும், இளம் குழந்தைகள் adults போல் நடந்துகொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். It is incumbent on the parents to adjust to the children, not the other way round.
இவை எல்லாமே ஆண், பெண் இருபாலருக்கும் பொருந்தும்.
விழிப்புடன் இருப்போம், பொறுப்புடன் செயல்படுவோம்!
மனித மிருகங்களிடமிருந்து மழலைச் செல்வங்களைக் காப்போம்!