நான் அடிக்கடி பார்த்து அதிசயிக்கும் படங்களில் இதுவும் ஒன்று!
அண்டத்திலுள்ளதே பிண்டம்
பிண்டத்திலுள்ளதே அண்டம்
அண்டமும் பிண்டமும் ஒன்றே
அறிந்துதான் பார்க்கும் போதே
== திருமூலர்
ஆயிரம் விந்துக்கள் அடிச்சு மோதினாலும் அவற்றுள் ஒன்றுக்கே சினையைத் துளைத்து உட்புகும் அதிர்ஷ்டம் கிட்டியுள்ளது! ஆஹா, அடுத்த நொடியில் தொடங்கிடுதே ஒரு உயிர்ப் பயணம்!.
ஒன்று இரண்டாகி
பின் அது எண்ணிலடங்காப்
பாதி பாதியாய்ப்
பிளந்து பிரிந்து
மரபணுப் (gene) பதிவுகளில் தேடி
பெற்றோரையும் மற்றெல்லா
முன்னோரையும் பிரதியெடுத்து
ஆரம்பமாகுதடா ஒரு
அதிசய விஞ்ஞானம்!!
Is there anything more bizarre and spectacular than this piece of engineering!!
Permalink
athu ennaa sir?
Thanks
STR
Permalink
ஆண் உயிரணுவும் பெண் உயிரணுவும் சேரும் இந்தக் காட்சி மிகவும் அதிசய வைக்கும் படம்தான்.
Permalink
சிறிது மாற்றியமைத்துள்ளேன்!
முன்னமையே வந்து போன விருந்தினரைத் திருப்பி அழைப்பது எப்படி?!
Permalink
ஏற்கனவே பார்த்திருக்கலாம், இருந்தாலும் தொடர்புடைய ஒன்று:
http://kasiblogs.blogspot.com/2003_11_01_kasiblogs_archive.html#107022586007637253
Permalink
//ஆயிரம் விந்துக்கள் அடிச்சு மோதினாலும் அவற்றுள் ஒன்றுக்கே சினையைத் துளைத்து உட்புகும் அதிர்ஷ்டம் கிட்டியுள்ளது!//
மிகவும் வித்தியாசமான பார்வை. ஒரே ஒருவன் வெற்றிபெற 999பேர் தோல்வியடைந்துள்ளனர். அல்லது 999பேரைக் குப்புறத்தள்ளிவிட்டு ஒரே ஒருவன் தொடர் ஓட்டத்தில் வென்றுள்ளான்.
Permalink
ஜீன் என்ற ஆங்கில வார்த்தையை மரபணு/ மரபுக்கூறு என்பதாக எழுதலாம். நுண்ணுயிரி என்பது microbe எனும் வார்த்தைக்கானது.
நல்ல படம், திருமூலர் பாட்டு.
Permalink
நன்றி, சுந்தர வடிவேலரே!
மரபணு ஆங்கே ஏற்றம் கண்டது!
எஸ்.கே