தகடு, தகடு!

நேற்றிரவு கே.வி.ராஜா அவர்கள் என்னிடம் “டி.வி.டி”க்கு நேரான தமிழ்ச்சொல் என்னவென்று கேட்டார். கொஞ்சம் பொறுங்கள், கண்டுபிடித்துச் சொல்கிறேன் என்று வாய்தா வாங்கிக் கொண்டேன். நம் வலைத்தோட்டத்தில் ஒருவர் கையாண்ட DVD-யின் ஒருவித தமிழாக்கத்தை வாசித்த நினைவு லேசாக இருந்ததேயன்றி, அதனை மீண்டும் வெளியே கொண்டுவர இயலவில்லை.

என்னைவிட பன்மடங்கு தமிழறிவு மிக்க நண்பர்களை விளித்து அவர்களையும் இந்தத் தேடலில் புகுத்தினேன். அவர்கள் பல சொற்றொடர்களை “தகடு” சேர்த்து முன்மொழிந்தாலும், அவர்களுக்கே முழுமையாக இன்னும் திருப்தி ஏற்படாததால், இந்தத் தேடுதல் தொடர்கிறது. இதற்கிடையே ராஜா தன் இடுகையில் “மின்னிலக்கக் குறுந்தகடு” எனும் மொழிபெயர்ப்பை பயன்படுத்தியுள்ளார். அது Digital, Disk இரண்டு சொற்களுக்கும் பொருந்துகிறதேயன்றி, “versatile” மட்டும் பாவம்போல தொங்கி நிற்பதாகவே எனக்குத் தோன்றுகிறது.

இந்த இடுகையை வாசிக்கும் தோழர்கள் எவருக்கேனும் வேறு தகடுகள் தோன்றினால் தெரிவியுங்கள். “நச்”சென்று மனதில் அறையும் மொழியாக்கத்துடன் “தக்க பொருள் உரைத்திடுஞ்சொல்” அளிப்போருக்கு, “தகடு தத்தர்” (“தத்தர்” = அளித்தவர்) என்கிற சிறப்புப் பட்டமும், குலுக்கல் முறையில் விழாத பரிசு ஒன்றும் கிட்ட வாய்ப்பிருக்கிறது! 🙂

8 Comments


  1. மருத்துவர் ஐய்யாகிட்ட கேட்டா சொல்லப்போறாரு.


  2. ஜகன் மோகன்,

    கூட்டு, பேரம் என்று படுபிஸியாக இருப்பவரிடம் போய் தகடு, வகிடு என்றால் கடுப்பாகிப் போகமாட்டாரா?

    எஸ்.கே


  3. ‘நுண்தகடு’

    சரியா இருந்தா குலுக்கல் முறையில் விழாத பரிசு குடுங்க. சரியா இல்லாட்டி குலுக்கல் முறையில் விழுந்த பரிசு குடுங்க. சரியா? 🙂


  4. கிரு. க்ருபா,

    இது மாதிரி வல்கரா பேசினா மட்டு உறுத்து உறுத்துன்னு உறுத்துடுவேன்! 🙂

    கொஞ்சம் நல்ல பிள்ளையா நடந்துக்கங்க, இந்த நேரத்தில! 😉

    நுட்பம் நிறைந்த தகடு = நுண் தகடு!

    சரியா?

    உங்க ஸ்பெசல் இங்கிலி பீஸ் படிச்சு நாளாச்சு!

    நன்றி

    எஸ்.கே


  5. நான் வல்கரா எங்க பேசினேன்? ‘வால்’கரா மட்டும்தானே பேசுவேன்?

    நுண்மை+தகடு=நுண்தகடு(ன்னு நெனச்சு சொன்னேன்)


  6. மின்னிலக்கத் திறன் தகடு — திறன்= திறமை வாய்ந்த versatile. மூன்றெழுத்துக் குறுக்கலில் மிதித வை மின் திரை தகடு எனவும் கொள்ளலாம் aka DVD = digital Video Disc

    உங்கள் கணினி நுட்பவல்லமை இவ்வலைப்பக்கம் முழுவதும் நீக்கமற நிறைந்திருக்கிறதே !


  7. மணியன்,

    தங்கள் மனம்திறந்த பாராட்டுதலுக்கு மிக்க நன்றி.

    “மிதத” மிகத் தகுதியான தமிழாக்கம்! 🙂

    அன்புடன்,

    எஸ்.கே


  8. சு.க்ரு,

    அவசரத்தில வயாகரா-ன்னு படிச்சுட்டேன்!

    நுண்மை பகர்வுக்கு நன்றி.

Comments are closed.