எனக்கு எந்த மடத்தின் மீதிலோ சாமியார்கள் மீதோ ஈடுபாடு கிடையாது. ஆனால் ஜயேந்திரர் கைது விஷயமாக இது வரை கிடைத்த செய்திகளைப் பார்க்கும்போது, அவரைச் சுட்டிக்காட்டும் தடயங்கள் எல்லாம் too good to be true என்ற வகையில் தான் இருக்கின்றன..
முதலில், கொசு அளவு மூளை உள்ள ஒருவன் கூட காண்டிராக்ட் கொலைகாரர்களுக்கு பேங்க்கிலிருந்து பணம் எடுத்து , அந்த பாங்க் சீலுடன் கொடுப்பானா. அது தவிர கொலையாளிகளுடன் தன்னுடைய செல் போனில் பேசுவானா. மேலும் உலகமறிந்த எதிரியை இவ்வளவு obvious – ஆக ஒழித்துக் கட்ட முற்படுவானா என்பதெல்லாம் பெரிய கேள்விக்குறிகள். ஜயேந்திரரை இவ்வளவு தூரம் அடிப்படை அறிவில்லாதவராக என் மனதில் சித்தரிக்க இயலவில்லை.
இந்த ரீதியில் சிந்தனை செய்தால் இது மொத்தமே ஒரு frame-up மாதிரிதான் தென்படுகிறது. மேலும் இந்த விஷயம் வெகு நாட்களாக புகைந்து கொண்டிருக்கிறது. மடத்தில் விசாரணைகள் நடந்து கொண்டிருருந்தன. ஆனால் இது பற்றி ஜயேந்திரர் ஏன் ஒரு தன்னிலை விளக்கம் கொடுக்காமலிருந்தார் என்பதும் தெரியவில்லை.
ஜெயேந்திரர் மத மாற்றத்திற்கு மிகவும் எதிர்ப்பு தெரிவித்தார். கோவில்களின் சொத்துக்களை சரியாக நிர்வாகம் செய்ய முற்பட்டார். தலித் மக்களிடம் நேரடித் தொடர்பு கொண்டு தொண்டு செய்ய ஆரம்பித்தார். இந்து மதத்தின் முக்கிய பிரதிநிதியாக அடையாளம் காணப்பட்டார். மிகவும் செல்வாக்கு உள்ளவராக விளங்கினார். இதையெல்லாம் இப்போது யாரும் மறக்கக்கூடாது.
கொலையுண்ட சங்கர ராமன் மடத்தை விட்டு வெளிவந்த பின்னும் அவ்வளவு வேகத்துடன் மடத்துக்கு எதிரியாக செயல்பட்டதற்கு என்ன காரணம்?
கேள்விகள், கேள்விகள்!
“என்னமோ நடக்குது, மர்மமா யிருக்குது”!
Permalink
ஏன், இறைவனையே போற்றி வாழ்ந்த சந்நியாசி பகுத்தறிவிற்கு அப்பால் பட்ட, முட்டாள்தனமான விதத்தில் ஒரு காரியத்தைச் செய்திருக்க முடியாதா? அப்படி செயேந்திரர் அக்கொலையைச் செய்திருந்தால், அதுவே ஒரு முட்டாள்தனமான காரியம்தானே! பின்னர் ஏன், அவர் இக்கொலையைச் சிந்தித்து செய்திருக்க வேண்டும் என்ற வாதத்தை முன்வைகிறீர்? அப்படி எத்தனை சாமியார்கள் அறிவுபூர்வமாக கொலைசெய்து தப்பித்துள்ளனர், இக்கொலையை முட்டாள்தனமானது என்று வர்ணிக்க? உண்மைதான், நீங்கள் கூறுவதுபோல், துறவு புண்ட மடாதிபதியையும் நயவஞ்சக கொலையையும் தொடர்பு படுத்திப் பார்க்க மனம் கூசுகின்றதுதான். ஆனால், அதற்காக, அவர் அத்தகைய காரியங்களைச் செய்யவில்லை என்று என்ன உறுதி. பொறுத்திருந்து பார்ப்போம். சட்டம் தன் வேலையைச் செய்யட்டும். மடாதிபதி முட்டாளோ இல்லையோ, பொது மக்களாகிய நாம் உணர்வுகளுக்கு முதலிடம் கொடுத்து முட்டாளாகிவிடக்கூடாது. என்ன சரிதானே, பெட்டிக்காரரே?
Permalink
ஏன் நம்ம ஆளு இவ்வளவு முட்டாள் தனமாகச் செயல்பட்டிருக்கக் கூடும் என்பதற்கு ஒரு விளக்கத்தை இக்கட்டுரை அளிக்கின்றது: http://www.hindu.com/2004/11/13/stories/2004111307231000.htm
“Two years before Sankararaman met his gory end within the precincts of the Varadarajaperumal Temple of which he was the manager, S. Radhakrishnan, another ex-acolyte of the Kanchi Mutt who had become disenchanted with Sri Jayendra Saraswathi, had been subjected to a murderous knife attack by hired killers at his home in Chennai and survived, along with his injured wife, to tell the tale. But the police investigation into that case seemed to run into a political wall after gaining initial clues.”
ஆக, ஒரு கால் நம்ம ஐய்யாவுக்கு தன் விரோதிகளை ஆள் வைத்து கொலை செய்வது ஒரு சாதாரண விடயமாக இருக்கலாம் அல்லவா? அரசியல்வாதிகள்தான் என் பாக்கெட்டில் உள்ளார்களே. போலிஸ் கண்டுபிடிச்சா என்ன, பிடிக்காட்டி என்ன. அரசியல் பண்ணி தப்பித்துக்கொள்ளலாம் என்று கவனக்குறைவாக இக்கொலையை ஏவி விட்டிருக்கலாம். ஆமாங்கதானே!
எதுக்கும் இரண்டாண்டுகளுக்கு முன்பு தாக்கப்பட்ட இராதாகிருஷ்ணனையும் போலிசார் மீண்டும் விசாரித்தால் நல்லது. பல உண்மைகள் வெளிப்படலாம். இல்லை … என்னமோ கெள்வி எழுப்பரேன்னு சொன்னீங்களே … அதான், கேள்விகள். வேண்டுமென்றால் இன்னும் பல கேள்விகளை நாம் ‘மாடுகள் வீடு திரும்பும் வரை’ எழுப்பிக்கொண்டே இருக்கலாம். 😉