இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவிலுள்ள தேசிய அருங்காட்சியகத்தில் ஹிந்து கடவுட் சிலைகள் பல காணக்கிடைக்கின்றன. அவைகளில் சில:-
மேலும் அந்த நாட்டிலுள்ள தீவுகளில் ஒன்றான “பாலி”யில் நம் பாரதத்தின் தொன்மையான கலாசாரச் சின்னங்கள் பல இன்னும் தெளிவாகத் தெரிகின்றன. நம் ஹிந்து இதிஹாசமான இராமாயண காவியம் நாடகமாக நடத்தப்படுகிறது. அதிலிருந்து சில காட்சிகள்:
இப்படங்களை கிளிக்கியவர் Dan Johansson (datasage) –
இந்தோனேஷியா ஒரு முழு முஸ்லிம் நாடு. ஆனால் அங்கு பலருடைய பெயர்கள் “குணவான்”, “சத்தியவான்” என்றூ முடியும்! ஏன், அந்த நாட்டின் மிகப் பிரபலமான பழைய அதிபர் சுகர்ணோவின் மகள் பெயர் “சுகர்ண புத்திரி”!
இது தவிர அந்நாட்டு விமான சேவையின் பெயர், “கருடா ஏர்வேஸ்”. மேலும் குபேரன்,மேகவதி என்றும் அங்கு பெயர் வைக்கிறார்கள். ஒருமுறை பாகிஸ்தான் நாட்டின் பிரதிநிதி ஒருவர் அவர்களை, “நீங்கள் முஸ்லிம்களாயிற்றே, ஏன் இவ்வாறு பெயர் வைத்துக் கொள்கிறீர்கள்?” என்று கேட்டபோது அவர்கள், “நாங்கள் எங்கள் மதத்தை மட்டும்தான் மாற்றிக் கொண்டோமேயன்றி எங்கள் முன்னோர்களையல்ல. அவர்களை எங்களால் மாற்றிக் கொள்ள இயலாது” என்று பதிலுரைத்தனர்!