துளித்துளி

சிறு உயிருக்காக வாசலில் கோலமிட்டாள்
பெரு உயிருக்காக வீட்டினுள் கோழி சமைத்தாள்

tradition

0

இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவிலுள்ள தேசிய அருங்காட்சியகத்தில் ஹிந்து கடவுட் சிலைகள் பல காணக்கிடைக்கின்றன. அவைகளில் சில:-

Hindu_idols Hindu_god_at_IndonesiaVandalized_Hindu_God Hindu_Temle_utensil

மேலும் அந்த நாட்டிலுள்ள தீவுகளில் ஒன்றான "பாலி"யில் நம் பாரதத்தின் தொன்மையான கலாசாரச் சின்னங்கள் பல இன்னும் தெளிவாகத் தெரிகின்றன. நம் ஹிந்து இதிஹாசமான இராமாயண காவியம் நாடகமாக நடத்தப்படுகிறது. அதிலிருந்து சில காட்சிகள்:

scene_from_Ramayana_in_Bali Ramayana dance artists Ramayana balle in Indonesia

இப்படங்களை கிளிக்கியவர் Dan Johansson (datasage) – There is a Creative Commons license attached to this image.

இந்தோனேஷியா ஒரு முழு முஸ்லிம் நாடு. ஆனால் அங்கு பலருடைய பெயர்கள் "குணவான்", "சத்தியவான்" என்றூ முடியும்! ஏன், அந்த நாட்டின் மிகப் பிரபலமான பழைய அதிபர் சுகர்ணோவின் மகள் பெயர் "சுகர்ண புத்திரி"!

இது தவிர அந்நாட்டு விமான சேவையின் பெயர், "கருடா ஏர்வேஸ்". மேலும் குபேரன்,மேகவதி என்றும் அங்கு பெயர் வைக்கிறார்கள். ஒருமுறை பாகிஸ்தான் நாட்டின் பிரதிநிதி ஒருவர் அவர்களை, "நீங்கள் முஸ்லிம்களாயிற்றே, ஏன் இவ்வாறு பெயர் வைத்துக் கொள்கிறீர்கள்?" என்று கேட்டபோது அவர்கள், "நாங்கள் எங்கள் மதத்தை மட்டும்தான் மாற்றிக் கொண்டோமேயன்றி எங்கள் முன்னோர்களையல்ல. அவர்களை எங்களால் மாற்றிக் கொள்ள இயலாது" என்று பதிலுரைத்தனர்!

சார்ந்த வகை: பொது :: நாள்: . மறுமொழி இடுக#

7

கதலிவனம்இன்று மனைவிக்கு பிறந்த நாள். மகள் சென்னைஆன்லைன்.காம் மூலமாக அனுப்பியுள்ள மலர்க்கொத்து வந்து சேரவில்லை. ஞாயிற்றுக்கிழமை டெலிவரி கிடையாதாம்.

சரி ஏதாவது புதிதாக செய்வோம் என்று தேடியதில், ஒரு இயற்கை உணவகத்திற்கு சென்றாலென்ன என்று தோன்றியது. நுங்கம்பாக்கத்தில் எங்கும் நிறைந்திருக்கும் "குடிசை", "முக்கு" கடைகளில் கிடைக்கும் ("சார், உங்களுக்காக சிறப்பு சலுகை. இரெண்டு வாங்கினால் ஒரு குட்டியூண்டு வெக்கி இலவசம்") "சப்புச்சரவு" வரட்டி போன்ற பன்ரொட்டிமேல் சீஸால் மெழுகி "பீட்ஸா" என்றழைக்கப்படும் வஸ்து வேட்பாளராக வராமலிருந்தால் சரி என்று நிம்மதியாக இருந்தேன். தவிர "சுத்த சைவ" ஓட்டல்களின் அசுத்தங்களையும், ஐந்து, ஆறு தாரகைகள கொண்ட உணவகங்களில் ஆழுறை நிலையில் (deep freeze) வைக்கப்பட்டு சூடேற்றப்பட்ட உயிரில்லாத "பொஃப்fபே" (வயிற்றுக்கு "பெப்பே") சாப்பாட்டையும் அனவரதமும் உள்ளே தள்ளிச் சலித்த எனக்கு, இயற்கை உணவு ஒரு மாறுதலாக இருக்குமே என்று தோன்றியது. முன்பெல்லாம் இயற்கை உணவு என்று சொன்னால் எங்கோ படித்த "People who eat natural food will die of natural causes" என்ற வாசகத்தை ஒப்பித்துவிட்டு அந்த தத்துவத்தையே கிண்டல் செய்துகொண்டிருப்பேன். ஆனால் இப்போதுள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு, பெட்டர் ஹாஃப் "பிட்டர் ஹாஃப்" ஆவதற்கு முன் "சரி"யென்றேன்.

சரி, சுருங்கச் சொல்வதானால் கேரளத்தைச் சேர்ந்த "ச்சோலையில்" நிறுவனத்தாரின் "சஞ்சீவனம்" நடத்தும் "கதலிவனம்" என்னும் முழுமையான இயற்கை உணவு நிலையத்திற்கு புறப்பட்டேன். இதற்காக காலையில் ஓட்ஸ் கஞ்சி மட்டும் சாப்பிட்டு பக்குவமான பசியைத் தயார் நிலையில் வைத்திருந்தேன்.
மேலும் வாசிக்க…