இந்த நிலையில், திறந்த நிரல் மென்பொருட்களின் பாதிப்பினால் மைக்ரோசாஃப்டின் தன்னிகரில்லாத் தன்மையில் இறங்கு முகம் ஏற்பட ஆரம்பித்து விட்டது. சைனா, தாய்லாந்து, கொரியா, மலேசியா போன்ற கீழை நாடுகள் ஜன்னலை அறைந்து சாத்திவிட்டு லைனக்ஸ் பக்கம் சாய்ந்து விட்டன. எம்.எஸ் கம்பெனியின் வீழ்ச்சியின் தொடக்கம் என்று எல்லோரும் மனதுக்குள் முணுமுணுக்க ஆரம்பித்துவிட்டார்கள். எனவே மைக்ரோஸாஃப்ட் தங்கள் வணிக ரீதியான ஒரு முதல் நிலையை எப்படியாவது தக்க வைத்துக் கொள்ளவேண்டிய சூழ்நிலை. என்ன செய்வது? ஜன்னலின் இன்றைய வடிவமான “Windows XP” ஐ பெரும்பாலோர் சீந்த மாட்டேன் என்கிறார்கள். இன்னும் பழைய 98, 2000 புடவைகளே போதும் என்று அழும்பு செய்கிறார்கள். “பார், பார் – XP பார், கலர் கலர் படம் பார்” என்று விளம்பரங்கள் கொடுத்தாலும், ம்ஹூம் அசருவதைக் காணோம். சரி, இவர்களை ஏதேனும் ஒரு வழியில் இன்னொன்றின் மூலமாக கொக்கி போட்டு வலித்தால்தான் பர்ஸைத் திறப்பார்கள் என்ற தீவிர யோசனைக்குப்பின், ஒரு சகுனித் திட்டதை வெளியிட்டிருக்கிறது.
ஆம். இனிமேல் IE உலாவியியின் பதுகாப்புக்கான கோப்புக்கள் (security enhancements and upgrades) வேண்டுமானால் ஜன்னலின் XP – Service Pack -2 உங்கள் கணினியில் அதற்கான பதிவு என்ணுடன் இருக்க வேண்டும். நீங்கள் 98, 2000 போன்ற முந்தய தளங்களை இயக்கிக் கொண்டிருந்தால் உடனே இரண்டு தோப்புக் கரணம் போட்டு பர்ஸையோ, கிரெடிட் கார்டையோ எடுத்து சமீபத்திய XP+SP2-வை வாங்க வேண்டும். அப்போதுதான் நீங்கள் மேயும் உலாவியான IE மூலம் உங்கள் கணினிக்குள் கன்னம் வைக்கும் கள்ளர்களிடமிருந்து ஓரளவாவது தப்ப முடியும்.
Permalink
விண்டோஸ் லாங்க்கார்ன் (Windows Longhorn) 2006இல் தான் வெளிவரும் என்ற நிலையில் மைக்ரோஸாஃப்டிற்கு இடைப்பட்ட இந்த காலத்தில் வருவாய்க்கு ஏதாவது ஒரு வழி வேண்டும். அதனால் தான் இந்த முயற்சி.
அதே நேரத்தில் நம் ஆட்கள் இதனை எல்லாம் இன்னும் கண்டுகொள்ளாமல் இருப்பது வருந்தத்தக்கது. என் வலைப்பதிவினை வாசிப்பவற்களில் நிறைய பேர் இன்னமும் ‘IE 5.0’ உபயோகிக்கிறார்கள் எனபது தான் உண்மை.