வேண்டாமே நாய் வளர்ப்பு

Dog of wolf familyதெரிந்தவர் ஒருவர் வீட்டுக்குச் சென்றிருந்தேன். அவர்களுக்கு 2 பெண்கள். இசையில் நல்ல தேர்ச்சி பெற்றவர்கள். பல பரிசுகளும் வாங்கியிருக்கிறார்கள்.

ஆனால் அந்த வீட்டுப் பெண்மணி தன் குழந்தைகளின் பெருமை பற்றி ஒரு வார்த்தை பேசவில்லை. அவர்கள் வளர்க்கும் நாய் பற்றியே பேசிக்கொண்டு, பேசிக்கொண்டு, பேசிக்கொண்டே…யிருந்தார்.

“எங்க சாயி இருக்கானே, ரொம்ப சமத்து. டேய், இங்க வாடா. நோ நோ, அவர் நம்மவர்டா. பாத்தீங்களா, அவன் just a lamb. பல்லுதான் பெரிசா தெரியுமே விழிஞ்சு, வெறும்ன நக்கிக் குடுப்பான் அவ்வளவுதான்.
பாட்டுன்னா அவனுக்கு அவ்வளவ் இஷ்டம். அப்படியே மடில வந்து படுத்துண்டுடுவான். ஒரு நாள் கொஞ்சல்லைன்னா விசிச்சு விசிச்சு அழுவான்னா பாத்துக்கோங்கோளேன். அவனோட உடம்பை க்ரூமிங்க்குக் கொசரம் எவ்வளவு செலவு பண்றோம் தெரியுமா?…”

“பரலோகத்திலிருக்கும் பரம பிதாவே, என்னால தாங்க முடியல்ல, இந்த நாய் புராணத்திலேந்து காப்பாத்துங்கோ!” என்று பிரார்த்தித்துக் கொண்டு விட்டேன், பிழைத்தேன் (“காபி சப்பிட்டுவிட்டுப் போங்கோ”. “ஐயோ, வேண்டவே வேண்டாம்”) என்று ஓடி வந்து விட்டேன்.

அன்றிலிருந்து நாய் வளர்ப்போர் வீட்டிற்கு இனிமேல் போவதில்லை என்று முடிவு செய்துவிட்டேன்.

(மேலே இருப்பது நான் ஒரு ஆண்டுக்கு முன்பு ஃபேஸ்புக்கில் பதிவிட்டது)

wolves to dogs நாயைப் பற்றி ஒரு முக்கியமான விஷயத்தை எல்லோரும் மனத்தில் இருத்திக் கொள்ள வேண்டும். நாய் ஓநாய் வர்க்கத்தைச் சார்ந்தது (taxonomic family called Canidae). என்னதான் மனிதர்களுடன் வாழப் பழகியிருந்தாலும் அது அடிப்படையில் வேட்டையாடும் இயல்புடையது. அதன் வாயில் தன் இரையின் சதையைக் கடித்து உண்ணுவதற்கேற்ப பற்கள் அமைந்துள்ளன (incisors, canine and carnassial teeth). மேலும் அதன் வாயில் பச்சை மாமிசத்தை ஜீரணம் செய்யத் தேவையான பாக்டீரியாக்கள் நிறைய இருக்கும். அவற்றில் Capnocytophaga canimorsus போன்ற பாக்டீரியாக்கள் மனிதர்களுக்கு பலவித நோய்களை உண்டாக்கும் தன்மை கொண்டவை

According to a study published in the European Journal of Allergy and Clinical Immunology, dog saliva contains at least 12 different allergy-causing protein bands. When dogs lick their fur, the saliva dries, and these proteins become airborne.

தவிர, நாயின் தோலின் மேல் வாசம் செய்யும் parasites – உண்ணிகள் போன்றவை – மனிதர்களுக்கு மிகவும் தீங்கு செய்பவை. நாய்க்கடியினால் ஏற்படும் Rabies மிகமிகக் கொடுமையான நோய். சிலவகை நாய்களிலிருந்து உதிரும் ரோமங்கள் மற்றும் காய்ந்த தோல் சிதில்கள் (dander) மனிதர்களுக்கு (ஆஸ்த்மா போன்ற) ஒவ்வாமை நோய்கள் தோன்றக் காரணமாக அமையும்.

பல ஜாதி நாய்கள் கூட தெருவில் போகும்போது ஒரு சுவற்றையோ, மரத்தையோ, கரண்டு கம்பத்தையோ கண்டவுடன் அதன் அருகில் சென்று பின்னங்கால்களைத் தூக்கி நிறுநீர் கழிப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். அந்தப் பழக்கம் காடுகளில் அவை செய்யும் territorial marking. மேலும் நாய்கள் மலம் கழித்தவுடன் பின்னங்கால்களால் மண்ணைத் தள்ளி அதை மூட முயற்சிப்பதைக் காணலாம். இவை அனைத்துமே நாய்களின் காட்டில் வேட்டையாடும் மிருகங்களின் அடிப்படை மரபணுவில் பதிக்கப்பட்ட குணத்தில் வெளிப்பாடு (instinctive habits). மலத்தின் வாசம் தன் இரைகளுக்கு தெரிந்து, தன் இருப்பிடத்தை அவை உணரக்கூடாது என்பதற்காகத்தான் இந்த செயல்.

அதனால்தான் வேத காலத்திலிருந்து காக்கையை மனிதனின் தோழனாகவும் நாயை எதிரியாகவும் பாவித்திருந்தார்கள்.

How deadly is your dog’s saliva?

Leave a Reply

Your email address will not be published.