தலித்துக்களும் பிராமணர்களும் ஒரே இனம்!

உங்கள் கவனத்திற்கு சில செய்திகள்:-

 • டில்லியிலுள்ள சுமார் 50 பொது கழிப்பிடங்களை கழுவி, சுத்தம் செய்துகொண்டிருப்பவர்கள் முழுதும் பிராமணர்கள்.
 • புது டில்லி இரெயில்வே நிலையத்தில் பணியாற்றும் கூலிகளில் 100-க்கும் மேலானவர்கள் பிராமணர்கள்.
 • காசியிலுள்ள மனிதர்களை ஏற்றி கையாலிழுக்கப்படும் ரிக்ஷாக்கள் பெரும்பாலும் பிராமணர்களால் இழுக்கப்படுகின்றன. இதே நிலைதான் டில்லியிலுள்ள படேல் நகரிலும்.
 • ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை பரம்பரையாய் தாயகமாகக் கொண்ட 4 லட்சம் “பண்டிட்” பிராமணர்கள், முஸ்லிம் தீவிரவாதிகளால் தங்கள் இருப்பிடங்களிலிருந்து துரத்தப்பட்டு இப்போது டில்லிக்கருகே தன் தாய்நாட்டிலேயே அகதிகளாக வாழ்கிறார்கள்.
 • ஆந்திர மாநிலத்தில் வீட்டு வேலை செய்யும் பெண்மணிகளில் 75% பிராமணர்கள்.
 • தென்னகத்தில் புரோஹிதம் செய்யும் பிராமணர்களில் 50 சதவீதத்தினர் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்கின்றனர்
 • ஆலயங்களின் வாயிலில் பிச்சையெடுப்பவர்களில் 50 சதவீதத்தினர் பிராமணர்கள்.
 • பிராமண மாணவர்களுக்கு 90% மதிப்பெண் பெற்றிருந்தாலும் மருத்துவக் கல்லூரியிலோ அரசு பொறியியல் கல்லூரியிலோ இடம் கிட்டுவதில்லை.
 • தமிழகம் மற்றும் பல மாநிலங்களில் மருந்துக்குக் கூட ஒரு பிராமண அரசு ஊழியர் கிடையாது.

இப்போது கூறுங்கள், பிராமணர்களை இன்னும் “ஆதிக்க சாதியினர்” என்று பெயர் சூட்டி, நாட்டில் சாதியின் பெயரால் நடந்தேரும் அனைத்துக் கொடுமைகளுக்கும் பிராமணர்களைக் காரணமாக்குவது சரியா?

உண்மையில் தலித்துக்களை கொடுமை செய்வது யார்?

 • பாப்பாரப் பட்டியிலும், கீரிப்பட்டியிலும் தலித்துக்கள் பஞ்சாயத்துக்களில் பங்கெடுப்பதை தடுப்பது யார்?
 • “இரெட்டைக் குவளை” முறை என்னும் கொடுமையை இருபத்தொன்றாவது நூற்றாண்டிலும் தொடர்ந்து இழைத்துக் கொண்டிருப்பது யார்?
 • தலித்துக்களை சில கிராமங்களில் இன்னும் ஆலயங்களில் நுழைய விடாமல் தடுத்துக் கொண்டிருப்பது யார்?
 • தலித் பெயரைச் சொல்லி அரசியல் நடத்திக் கொண்டு, ஓட்டு வாங்கியபின் தன் சொந்த சாதியினரின் முன்னேற்றத்தையே கவனிப்பவர்கள் யார்?

இவர்களெல்லாம் யார் தெரியுமா?

பிராமண எதிர்ப்பு என்னும் நச்சு விதையை ஊன்றி தமிழ்நாட்டை பின்னோக்கித் தள்ளிய ஈ.வே.ரா மற்றும் அவரைப் பின்பற்றி அரசியல் நடத்தும் “ஆதிக்க சாதியினர்”தான்!

இவர்கள்தான் பிராமணர்களையும், தலித்துக்களையும் ஒருசேர கொடுமைப் படுத்துகிறார்கள்!

ஆம். தலித்துக்களும், பிராமணர்களும் ஒரே இனம்தான்!

உ.பியில் மாயாதேவி உணர்ந்துகொண்டார், பிராமணர்கள்தான் உண்மையான தலித்துக்களின் நண்பர்களென்று. இப்போது பெரும்பானமை சட்டசபை இடங்களைப் பிடித்து ஆட்சியேற்றிருக்கிறார்.

தமிழக முன்னாள் தலித் அமைச்சர் சத்தியவாணி முத்து அம்மையார் அவர்கள் பிராமணர்கள் நம் நலனைக் காப்பார்கள் என்று சூளுரைத்தார்.

ஆம். பிராமணர்களும், மற்ற மேல் சாதியினருடன் சேர்ந்து தலித்துக்களை சமூகத்தில் ஒடுக்கி, கீழ் சாதியினராக மதித்து “பஞ்சமர்” என்று பெயரிட்டு தீண்டாமைக் கொடுமையிழைத்தவர்கள்தான். இது மறுக்க முடியாத சரித்திர உண்மை.

ஆனால். அது பழைய சரித்திரம். பிராமணர்கள் எப்போதோ தம் தவற்றை உணர்ந்துவிட்டனர் (மிகசில பழைய பஞ்சாங்கங்களை தவிர). ஆனால் இன்றும் தலித்துக்களை கொடுமை செய்வதுகொண்டிருப்பது யார்?

இது இன்றைய நிலைமை – பழைய கதை அல்ல!

யார் அவர்கள்?

இனம் கண்டுகொள்ளுங்கள் தலித்துக்களே!

2 Comments


 1. //தமிழகம் மற்றும் பல மாநிலங்களில் மருந்துக்குக் கூட ஒரு பிராமண அரசு ஊழியர் கிடையாது. //
  கிச்சு கிச்சு மூட்டாதீங்க 🙂

  உங்கள் தரவுகளின் தரம் என்னவென்பதை இது ஒன்றே விளக்கி விடும்


 2. நல்ல பதிவு..
  எனக்கு தெரிந்து தலித்துகளை துண்புறுத்துவது மற்ற ஆதிக்க சாதியினர் தான். பிராமணர்களோடு சேர்ந்தால் நம் அறிவு வளரும். மற்றவர்களோடு சேர்ந்தால் :))))

Leave a Reply

Your email address will not be published.