சுகபோகத்தில் திளைக்கும் புருனே சுல்தான்…!

ப்ரூனை சுல்தான்உலகின் மிகப்பெரிய செல்வந்தர் யார் என்று கேட்டால் இப்போது கூட புரூனே சுல்தான் என்றுதான் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கூறுவார்கள். அவர் எவ்வாறு தன் பணத்தை செலவழிப்பார் என்று இது வரை யாருக்கும் தெரியாது.

ப்ரூனை வரைபடம்ஆனால் சமீபத்தில் அவர் மீது நடந்து வரும் ஒரு நீதிமன்ற வழக்கின் தொடர்ச்சியாக அந்த நீதிமன்றம் அவரது செலவுப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த ஆடம்பரங்கள் உலகத்திலுள்ள எந்த பணக்கரரும் கனவில் கூட என்ணிப்பார்க்க இயலாது! Indulgence at its extreme!

உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள திரைப்படத் துறையைச் சார்ந்த நடிகைகளை வரவழைத்து அவர்களைப் “பாராட்டி”, “மனம் குளிர நனைத்து அனுப்புவது” சுல்தானின் பொழுதுபோக்கு திருவிளையாடுகளில் ஒன்று. இந்த பட்டியலில் பிரபல பாப் பாடகிகள் மற்றும் முன்னணி மாடல் அழகிகளும் அடங்குவார்கள்.

இந்த விவரங்கள் வெளிவந்த காரணம் அவருக்கும் அவரது ஆட்சியில் நிதியமைச்சராக இருந்த அவரது சகோதரர் இளவரசர் ஜெஃப்ரிக்கும் இடையே நடந்து வரும் உலகப் பிரசித்திபெற்ற குடும்ப வழக்குதான்!

இவருடைய ஆடம்பரங்களை சற்றே எட்டிப் பார்ப்போம்! 🙄

 • நாட்டின் கஜானாவிலிருந்து கடைசி 4 ஆண்டுகளில் மட்டும் சுமார் 4 பில்லியன் பவுண்டுகள் (சுமார் ரூ. 32,400 கோடி!) சுல்தானின் ஆடம்பர செலவுகளுக்காக அவரது சொந்த கணக்கில் சென்றுள்ள அதிர்ச்சி தகவலையும் நீதிமன்றம் வெளியிட்டுள்ளது.
 • இவரிடம் உள்ள சொகுசு கார்களின் எண்ணிக்கை 5000
 • 115 மில்லியன் பவுண்டுகள் (சுமார் ரூ. 932 கோடி!) செலவில் ஒரு தனி போயிங் விமானமும் உள்ளதாம்.
 • 1788 ஆடம்பர அறைகள் கொண்ட மிகப்பெரிய மாளிகை
 • இவரது குடும்பத்தினர்கள் லண்டன், லாஸ் ஏஞ்சல்ஸ், நியூயார்க் மற்றும் பாரீஸ் நகரங்களில் பல மாளிகளைகளை வைத்திருக்கின்றனராம்.
 • புருனேயை 40 ஆண்டுகள் ஆட்சி செய்த இவருக்கும், இவரது சகோதரருக்குமான குடும்ப சொத்து வழக்கு கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. வழக்கறிஞர்களுக்கான தொகை மட்டும் 200 மில்லியன் பவுண்டுகளாம் (சுமார் ரூ. 1620 கோடி!).

புருனே சுல்தானின் சொத்து ம‌ற்று‌ம் செலவு விவரம்:-

 1. 1788 அறையுடன் மாளிகை, 6- நட்சத்திர விடுதி, ஒரு கேளிக்கை பூங்கா, 5000 கார்கள் மற்றும் விமானங்களை நிறுத்த மிகப்பெரிய ஆடம்பரக் கொட்டகை.
 2. உடம்பைத் தேய்த்து விடும் மசாஜ் அழகிகள் மற்றும் அக்குபங்க்ச்சர் மருத்துவர்களுக்காக 1.25 மில்லியன் பவுண்டுகள் (சுமார் ரூ. 10 கோடி!).
 3. வீட்டு பரமரிப்பு பணியாளர்களுக்கு 13.9 மில்லியன் பவுண்டுகள் (சுமார் ரூ. 112 கோடி!).
 4. 1.26 மில்லியன் பவுண்டுகள் பேட்மின்டன் பயிற்சிக்கு.
 5. பி.ஆர் அலுவலர்கள் ஒவ்வொருவருக்கும் 5.86 மில்லியன் பவுண்டுகள்.
 6. தனது அரிய பறவைகளை பராமரித்து பாதுகாக்கும் காவலருக்கு 48,859 பவுண்டுகள்.
 7. கார்கள் வகையும் எண்ணிக்கையும்…
  • மெர்சிடஸ்- 531
  • ஃபெர்ராரி- 367
  • பென்ட்லீ- 362
  • பி.எம்.டபிள்யூ- 185
  • ஜாகுவார்- 177
  • போர்ஷெ- 160
  • ரோல்ஸ் ராய்ஸ்- 130
  • லம்போர்கினி- 20.
 8. மற்றவை:
  • 747 – 400 ரக ஜம்போ ஜெட்டுகள் உட்பட போயிங் விமானங்கள் 2
  • ஒரு ஏர்பஸ்
  • 6 சிறு விமானங்கள்
  • 2 ஹெலிகாப்டர்கள்.

ஆகா! நம்மளதெல்லாம் என்னய்ய பொழைப்பு! இப்படியில்லையா அனுபவிக்கணும்!!

அந்த கோடிகளில் ஒரு கோடியில் துளிக் கிள்ளி நம்ப பக்கம் போடக்கூடாது!!

(தகவல்: வெப்துனியா)

2 Comments


 1. hi,i read this page and i want to share my facebook account.but i didn’t shown the icon please insert this


 2. Thanks for your comment.
  Sharing with Facebook facility has been added.

  Please make use of it.

  Regards
  S.K

Leave a Reply

Your email address will not be published.