ஒரு அறிவித்தல்

என் வலைப்பூ பற்றிய ஒரு அவசர அறிவித்தல்

வயாக்ரா, பயாக்ரா என்று கொள்ளை கொள்ளையாக வேண்டாத எரிதங்களால் என் பின்னூட்டப் பெட்டிகள் நிரம்பி, என் பேண்ட்விட்தையும் காலியாக்கிய நிலையை மாற்றவேண்டி பலதரப்பட ஸ்பாம் எதிர்ப்பு நிரல்களைப் பாவித்தேன். அவை குதிரைப்படை, யானைப் படை, காலாட்படை சகிதம் வந்து எல்லாக் கதவுகளையும் அடைத்து விட்டன. அதன் விளைவாக நல்ல பின்னூட்டங்களும் தடைபட்டுப் போயின. என் பதிவுகளுக்கு விழும் எதிர்வினைகளே மிகக்குறைவு. அவற்றையும் இந்த “ஸ்பாம் கர்மா”க்கள் அழித்து விட்டால் காற்றுவாங்க வேண்டியதுதான். அது தவிர, கருத்துகளைப் பதிவு செய்தவர்களும் என்னைத் தவறாக எண்ணியிருப்பார்கள். அதனால் உடனே என் தளத்தின் கொல்லைப்புரம் (back end) சென்று எட்டிப் பார்த்தேன். அங்கு “பத்து பின்வினைகளை நான் விழுங்கி விட்டேன்” என்று அந்த எரித எதிர்ப்பு நிரல் எக்காளமிட்டுக் கொண்டிருந்தது. “அடடா, இன்னும் எவ்வளவு போயிருக்குமோ தெரியவில்லையே. இந்த மாமியார்கள் மட்டும் இல்லாமலிருந்தால் டோண்டுவை மிஞ்சியிருக்கலாமே” என்ற கவலையுடன், கிடைத்த பத்தை காப்பியெடுத்து பதிவு செய்துள்ளேன்.

ஆனால் இந்த எரிதங்களும் ஒருவகை நல்ல கைங்கர்யங்களைச் செய்து கொண்டுதான் இருக்கின்றன. “நம்மை யாரும் கண்டுகொள்வதில்லை” என்று எப்போதாவது தனிமையில் வாடிக்கொண்டிருக்கும் நேரத்தில் இந்த எரிதங்களை வாசியுங்கள். உங்கள் மேல்தான் அவர்களுக்கு எத்தனை அக்கறை! “மனம் தளராதீர்கள். இளஞ்சிட்டுக்களுக்கும் நீங்கள் பூர்ண திருப்தி அளிக்கலாம்”, “உங்கள் மனைவி உங்களின் புதிய பரிமாணத்தை அறியப் போகிறார்கள்”, “இன்றோடு உங்கள் கடன் தொல்லை காலி’ – போன்ற தெம்பூட்டும் அறிவிப்புகளை அளிக்க யாரால் முடியும்? உங்கள் அண்ணன் தம்பிகளால் அளிக்க முடியுமா? ஆகையால் “ஸ்பாம்”கள் தாழ்வு மனப்பான்மையைப் போக்குவதில் பெரும் தொண்டு புரிகின்றன என்ற கருத்துடன் எல்லா படைகளையும் வேலையைவிட்டு நீக்கி விட்டேன்.

ஆகையால் கருத்துக் காடவராயர்களே, வாருங்கள், வாருங்கள்!கொட்டுங்கள் உங்கள் திட்டுக்களை! 🙂

( இரயில் சினேகம் -2 வரும். காத்திருங்கள்!)

2 Comments


 1. “இந்த மாமியார்கள் மட்டும் இல்லாமலிருந்தால் டோண்டுவை மிஞ்சியிருக்கலாமே” என்ற கவலையுடன்…”
  டோண்டுவை மிஞ்ச வாழ்த்துக்கள். ஆனால் சிறிது கஷ்டம்தான். டோண்டு எங்கு பின்னூட்டமிட்டாலும் (இதையும் சேர்த்து) அதன் நகலை அவனுடைய இதற்கானப் பிரத்தியேகப் பதிவில் உள்ளிடுவானே. ஆக வாலிக்கு இந்திரன் கொடுத்த மாலையின் கதைதான். இருப்பினும் வாழ்த்துக்கள்.

  அன்புடன்,
  டோண்டு ராகவன்
  ப்ளாக்கர் எண் 4800161
  (எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்)


 2. Dear Kichu,
  The way your comments box is organized, I feel that anybody can comment in anybody’s name. The only remedy is to have the mouseover display the blogger number and the comments box should have only blogger comment option.
  I know what I am talking about. Your present arrangement lends to many avoidable misunderstandings. If any outrageous comments come in my name, please get in touch with me. I pose this request to you in all seriousness.
  Regards,
  Dondu Raghavan
  Blogger profile N. 4800161

Comments are closed.