இயற்கை விருந்து

இன்னும் சிறிது இளைப்பாருங்கள்! சிறு படத்தில் சுட்டினால், காட்சிகள் கண்முன்னே படமெடுத்துக் காணும்!

Village vista
9 photos
 


13 Comments


 1. pachai pasel…enakku pudichadhu.!
  Engae edutha padangal ivai?


 2. நன்றி, நாராயணன்.

  திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள ஒரு கிராமத்தில்.


 3. உங்கள் வலைப்பதிவில் உள்ள வைக்கோல் போர் படத்தை தமிழ் விக்கிபீடியா கட்டுரை ஒன்றில் பயன்படுத்த அனுமதி தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் விரும்பினால் பதிப்புரிமை விலக்களித்து தரலாம். இல்லையெனில் அப்படத்தில் இருந்து உங்கள் கட்டுரைக்கு இணைப்பு தரவும் சம்மதமே. நன்றி


 4. ரவிசங்கர்,

  நீங்கள் அந்தப் படத்தை தமிழ் விக்கிபீடியா கட்டுரைக்கு தாராளமாக பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் தயை செய்து அதனின்று என் வலைப் பதிவுக்கு இணைப்பு தரும்படி கோருகிறேன். மேலும், முடிந்தால் அந்த படத்தின் விவரங்களை குறிப்பிடலாம். அது நாகை மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள உம்பளச்சேரி என்னும் கிராமத்தில் எடுக்கப்பட்டது. படம் எடுத்தது என் மகன் கே.கே.ப்ரசாத். தேதி: 2005-05-15.

  நீங்கள் குறிப்பிடும் அந்த விக்கிபீடியா கட்டுரையின் சுட்டியை தெரிவிக்கவும். தமிழ் விக்கிபீடியா முயற்சிக்கு நானும் ஏதாவது பங்களிக்க விரும்புகிறேன்.

  நன்றியுடன்,

  எஸ்.கே


 5. படிமத்தை பயன்படுத்த அனுமதி அளித்து இங்கு மறுமொழி இட்டிருப்பீர்கள் என நீனைத்தேன். அப்படி எதையும் பார்க்க இயலவில்லை. எனினும், எனக்கு நீங்கள் அனுப்பிய மின் மடலையே அனுமதியாக கருதி படிமத்தை பயன்படுத்துகிறேன். உங்கள் படிமம் http://ta.wikipedia.org/wiki/படிமம்:vaikkol.gif என்ற பக்கத்தில் உள்ளது. http://ta.wikipedia.org/wiki/வைக்கோல் கட்டுரையில் இணைக்கப்பட்டுள்ளளது. நன்றி.


 6. நன்றி, ரவி சங்கர்.

  திருவாரூர் மாவட்டம் என்பதே சரி. நாகை என்று என் முந்தைய பின்னூட்டத்தில் தவறாகக் குறிப்பிட்டுள்ளேன்.

  நிரல் பொதியில் ஏற்பட்ட சிறு குழப்பத்தால் என் பதில் இங்கு பதிவாகவில்லை. இப்போது சரி செய்துவிட்டேன்.

  விக்கிபீடியா கண்டேன். சிறப்பான முயற்சி. அதில் பங்களிக்க என்ன செய்யவேண்டும் என்பதை ஆராய்கிறேன்.


 7. http://ta.wikipedia.org/wiki/படிமம்:vaikkol.gif பக்கத்தில் நீங்கள் கடைசியாக கொடுத்த தகவல்களையும் சேர்த்துள்ளேன். விக்கிபீடியாவுக்கு பங்களிப்பது குறித்து அங்குள்ள உதவிப்பக்கங்கள பார்த்தாலே எளிதில் அறிந்து கொள்ள முடியும். ஐயம் இருந்தால் எனக்கு மின் மடலிடுங்கள். கண்டிப்பாக என்னால் இயன்றதை செய்கிறேன். உங்களை போன்று இணையத்தில் தமிழ் பயன்படுத்த தெரிந்த பலரும் விக்கிபீடியாவுக்கு பங்களிக்க வேண்டும் என்பது என் ஆவல். உங்கள் வலைப்பதிவு முயற்சி சிறக்க வாழ்த்துக்கள்


 8. தற்பொழுது விக்கிபீடியாவுக்கு தமிழ் நாடு, தமிழக கிராமங்கள் தொடர்புடைய பல புகைப்படங்கள் தேவைப்படுகின்றன. உங்களுக்கு புகைப்படக்கலையில் ஆர்வம் இருக்கும் பட்சத்தில் எங்களுக்கு புகைப்படங்கள் எடுத்து தந்து நீங்கள் உதவலாம். அனைத்துப் படங்களுக்கும் உங்கள் பெயரை குறிப்பிட்டு உங்கள் வலைப்பதிவுக்கு இணைப்பு தர மகிழ்ச்சியே. சம்மதம் என்றால் சொல்லுங்கள். என்னென்ன படங்கள் தேவை என சொல்லுகிறேன். உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது படங்களை எடுத்து எனக்கு அனுப்பலாம். நான் தற்பொழுது வெளி நாட்டில் இருப்பதால் என்னால் நேரடியாக இந்தப் படங்களை எடுக்க முடியாத நிலைமை. நன்றி.


 9. ரவிசங்கர்,

  நிறைய படங்கள் தஞ்சை, திருவாரூர் பக்க கிராமங்களில் எடுத்திருக்கிறேன். அவற்றை Flickr.com தளத்தில் வலையேற்றியபின் அதன் இணைப்போ அல்லது உங்களுக்கு நேரடியாகவோ அனுப்புகிறேன்.

  அந்த வைக்கோல் போர் படிமத்தின் விவரத்தில் “என் மகன்” என்ற குறிப்பை நீக்கிவிடவும். அது உங்கள் கவனத்திற்காக சொல்லப்பட்டது. அந்த இடத்தில் அந்த சொற்றொடர் பொருள் ஏதும் பெறவில்லை.

  விக்கிபீடியாவில் இந்த வாரமுடிவில் இறங்குகிறேன்! 🙂


 10. முக்கியமான விஷயத்தை மறந்துவிட்டேன்.

  உங்களுக்கு என்னென்ன விதமான படங்கள் வேண்டும் என்று சொல்லுங்கள். தீபாவளி நேரத்தில் கிராமங்களுக்குச் செல்ல வாய்ப்பிருப்பதால் புகைப்படங்களை எடுத்து அனுப்புகிறேன்.

  எஸ்.கே


 11. பொதுவாக கிராமத்தில் இருக்கக்கூடிய பல விடயங்களின் புகைப்படங்கள் தேவைப்படுகின்றன. கீழ் வரும் பொருட்கள் மட்டும் closeupல் இருக்குமாறு மனிதர்களோ பிற distractionகளோ இல்லாமல் படம் வந்தால் நன்றாக இருக்கும்.

  1.உரல்
  2.உலக்கை
  3.அஞ்சறைப்பெட்டி
  4.தூபக்கால் (சாம்பிராணி தூபம் போட பயன்படுவது)
  5.குத்துவிளக்கு
  6.குதிர்
  7.முடையப்பட்ட தென்னை ஓலை
  8.பஞ்சாரம் (கோழி அடைக்கப் பயன்படுத்துவது)
  9.மத்து
  10.அதிரசம், பனியாரம், மிக்சர், பூந்தி, முறுக்கு, பாயாசம், கேசரி. பூரி போன்று தமிழகத்தில் காணக் கிடைக்கும் எந்த ஒரு இனிப்பும் உணவும்.
  11.சும்மாடு (அதை அணிந்திருகும் பெண் அல்லது ஆணும் புகைப்படத்தில் இருக்கலாம்)
  12.அம்மிக்கல்
  13.குழவிக்கல்
  14.ஆட்டாங்கல்
  15.சுமைதாங்கிக்கல்
  16.குளத்து மடை அல்லது மதகு
  17.தூண்டில்
  18.முறம்
  19.புண்ணாக்கு
  20.தவிடு
  21.திண்ணை
  22.கருப்பட்டி
  23.வெல்லம்
  24.பனங்கிழங்கு
  25.ஊரணி
  26.கோயில் உண்டியல்
  27.தொழுவம்
  28.மண்வெட்டி
  29.அரிவாள் மணை
  30.பாம்படம் (பாட்டிகள் காதில் அணிந்திருக்கும் பெரிய காதணிகள்)
  31.குடுமி
  32. தாவணி (அதை அணிந்திருக்கும் பெண்ணின் புகைப்படத்துடன்)
  33. பாவாடை(அதை அணிந்திருக்கும் சிறுமியின் புகைப்படத்துடன்)
  33.கோவணம் (அதை அணிந்திருக்கும் ஆணின் புகைப்படத்துடன்)

  இந்தப்பட்டியலை படித்து விட்டு உங்களுக்கு சிரிப்பு வந்தாலும் ஆச்சரியப்படுத்துவதற்கில்லை. ஆனால், என்றுமே தொகுக்கப்படாத அறிவு அங்கீகரிக்கப்படுவதில்லை. தமிழக கிராமங்களின் முக்கிய அடையாளங்களாக இருக்கக்கூடிய இவற்றை தொகுத்து விக்கிபீடியாவில் எழுதலாம் என ஒரு ஆவல். அவ்வளவு தான்.

  இவற்றில் உங்களுக்கு இயன்றதை எடுத்து தந்தால் தமிழ் விக்கிபீடியா மட்டுமின்றி முழு விக்கி சமூகமும் பயன்படுத்தி மகிழும். மொத்தமாகவோ தனித்தனியாகவோ எடுத்து எனக்கு எப்பொழுது வேண்டுமானாலும் அனுப்பி வையுங்கள். இல்லை, உங்கள் வலைப்பதிவில் போட்டு எனக்குத்தெரியப்படுத்தினாலும் சரி. இணையத்தில் கிடைக்கும் தரம் குறைந்த காப்புரிமை உள்ள படிமங்களை பயன்படுத்துவதை தவிர்த்து உங்களைப் போன்றவர்கள் எடுத்து தரும் துல்லியமான காப்புரிமை விலக்களிக்கப்பட்ட படங்களை பயன்படுத்த விரும்புகிறோம். நீங்கள் காப்புரிமை விலக்கித் தந்தாலும், அப்புகைப்படம் தொடர்பான பக்கத்தில் கட்டாயம் உங்களை பற்றிய தகவலும் உங்கள் வலைப்பதிவுக்கான இணைப்பும் இடம் பெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

  இதே வேண்டுகோளை இன்னும் சிலரிடமும் வைத்திருக்கிறேன். நீங்கள் எடுத்து தர இயலாத படங்களை அவர்கள் எடுத்துத் தருவர் என்ற நம்பிக்கையில்..

  அன்புடன்,
  ரவி

Comments are closed.