இதென்ன அநியாயம்!

“விண்டோஸ்” இயங்குதளத்தை உருவாக்கும் “மைக்ரோஸாஃப்ட்” நிறுவனம் இப்போது ஒரு புதிய குண்டைத்தூக்கிப் போட்டிருக்கிறது.

இதைப்பற்றி இங்கே பேசியாக வேண்டிய கட்டாயம்? ஏனென்றால் நீங்கள் எல்லொரும் கணினி வழியாகத்தானே இதை வாசிக்கிறீர்கள்!

மைக்ரோஸாஃப்ட் கம்பேனியின் நடைமுறைகளைக் கவனித்து வரும் எவருக்கும் அவர்கள் அடுத்து என்ன செய்யப்போகிறார்களோ என்ற பயம் இருக்கும். உங்கள் எதிர்பார்ப்புகளைப் பொய்யாக்காமல் இதோ ஒரு புதிய கொடூரம்!

ஜன்னல் இயங்கு தளத்துடன் கைகோத்தபடி உங்கள் கணினியுள் குடியேரும் “இன்டெர்னெட் எக்ஸ்ப்ளோரர்” என்ற உலாவி (browser) ஒரு குறைப்பிரசவம்! அதில் உள்ள சல்லடைக்கண் போன்ற ஓட்டைகளை எண்ண உங்கள் வாழ்நாள் போதாது. வழியில் போகிற வருகிற விஷக் கோப்புக்களையெல்லாம் உங்கள் கணினியுள் அனுப்பி உங்கள் கம்ப்யூட்டரை தொங்கலில் விட்டுவிடும். ஆனால் வலை மேய்வோரில் 95 சதம் பேர் அந்த உலாவியில் சவாரி செய்வதால் மென் பொருள் பாதுகாப்புத் துறையில் வணிகம் செய்யும் பலர் கணிசமான லாபம் ஈட்ட இது ஒரு காரணமாக இருந்து வருகிறது. அவ்வப்போது மைக்ரோசாஃப்ட் நிறுவனமும் நானும் சமர்த்து என்று காண்பிக்க “சேவைப் பொதி”, “பாதுகாப்பு அறண்” என்று கொடுத்துக் கொண்டு வருகிறது.

Pages: 1 2 3

1 Comment


  1. விண்டோஸ் லாங்க்கார்ன் (Windows Longhorn) 2006இல் தான் வெளிவரும் என்ற நிலையில் மைக்ரோஸாஃப்டிற்கு இடைப்பட்ட இந்த காலத்தில் வருவாய்க்கு ஏதாவது ஒரு வழி வேண்டும். அதனால் தான் இந்த முயற்சி.

    அதே நேரத்தில் நம் ஆட்கள் இதனை எல்லாம் இன்னும் கண்டுகொள்ளாமல் இருப்பது வருந்தத்தக்கது. என் வலைப்பதிவினை வாசிப்பவற்களில் நிறைய பேர் இன்னமும் ‘IE 5.0’ உபயோகிக்கிறார்கள் எனபது தான் உண்மை.

Leave a Reply

Your email address will not be published.