இந்த ஆண்டு (2009) ஜனவரி தொடங்கி தொடர்ந்து மறைந்த கர்நாடக இசை மேதை ஜிஎன்பி அவர்களின் நூற்றாண்டு விழா தொடர்பான நிகழ்ச்சிகள் நடந்துகொண்டு வருகின்றன. GNB Foundation என்னும் அமைப்பும் இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைடியும் இணைந்து மாதா மாதம் இசை நிகழ்ச்சிகளையும் ஜிஎன்பி பற்றிய சொற்பொழிவுகளையும் நடத்தி வருகின்றனர். உண்மையில் ஜிஎன்பியின் நினைவு நாளை ஆண்டு தோறும் தவறாமல் சிரத்தையாக இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் நிகழ்த்தி வருவது மிகவும் போற்றத்தக்கதாகும்.
மேலும் கிருஷ்ண கான சபா, முத்ரா போன்ற அமைப்புக்களும் அவ்வப்போது கச்சேரி மற்றும் ஜிஎன்பியின் இசையின் பெருமைகள், நுணுக்கங்கள் பற்றிய விளக்கவுரைகள் போன்றவற்றை டாக்டர். எஸ்.ஏ.கே.துர்கா போன்ற வல்லுனர்களைக் கொண்டு நிகழ்த்தி அந்த மேதையின் நினைவைப் போற்றி வருகின்றன.
இவற்றைத் தவிர திரு. இராமபத்திரன் அவர்கள் தலைமையில் இயங்கும் Shanthi Arts Foundation and Endowments (SAFE) என்னும் அமைப்பினர், கிளீவ்லேண்ட் சுந்தரம் போன்ற இசைப் புரவலர்களுடன் இணைந்து ஜிஎன்பியின் நூற்றாண்டு விழாவை அகில உலக அளவில் சிறப்பாக நடத்தத் திட்டமிட்டுள்ளனர். சென்ற மாதம் SAFE நிகழ்த்திய வளர்ந்துவரும் இளைய வித்வான்களின் சிறப்பு இசை நிகழ்ச்சிகள் ஜிஎன்பியின் நினைவாக அமைக்கப்பட்டிருந்தன. அவருடைய சாகித்யங்கள் பல எல்லோராலும் பாடப்பட்டன.
இவ்வளவு சிறப்பாக ஜிஎன்பி என்னும் இசை மாணிக்கத்தின் நூற்றாண்டு விழா நடந்து கொண்டிருப்பது என்போன்ற பல ஜிஎன்பி பக்தர்களுக்கு மிகுந்த மன நிறைவையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது. ஆனால் நான் மேற்குறிப்பிட்ட நிகழ்ச்சிகள் சிலவற்றைக் காண நேர்ந்தபொது மனத்தில் விஞ்சி நின்றது என்னவோ ஏமாற்றமும் கசப்புணர்ச்சியும்தான் என்பது ஒரு வருந்தத்தக்க உண்மை!
மேலும் வாசிக்க…
சார்ந்த வகை: இசை :: நாள்: டிச 16th, 2009. மறுமொழி இடுக.
எஸ்.வி.வி-யின் "உல்லாஸ வேளை"யில் "சங்கீதப் புளுகு" பற்றி எழுதி யிருப்பார்.
கிரிக்கெட் பந்தையோ மட்டையையோ வாழ்க்கையில் ஒரு முறை பார்க்காதவர்கள்கூட "ஸ்டிரைட் ட்ரைவ்", "கவர் ட்ரைவ்" என்று ”ஜார்கன்”-களை எடுத்து விட்டு எல்லம் தெரிந்த ஏகாம்பரங்களாக பந்தா காண்பிப்பார்கள். அதுபோல ஒரு சங்கீதக் கச்சேரிக்குப் போனால் தலையை உருட்டி, தொடையைத் தட்டி, மேலும் தன் கைகளையோ அல்லது தாம் அமர்ந்திருக்கும் சேர் மேலேயோ உரக்கத் தட்டி, "தப்புத்"தாளம் போட்டு, தான் கர்னாடக சங்கீதத்தில் பெரிய நிபுணர் போல பீலா விடுபவர்கள் அநேகம். நீங்கள் கேட்கும் பாட்டின் இராகம் தெரியவில்லையென்றால் பக்கத்தில் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருப்பவரிடம் (பெரும்பாலும் அவர்கள்தான் கொஞ்சம் ஞானஸ்தராக இருப்பார்கள்) "இது என்ன" ராகம்" என்று கேட்டால் ”ஏதோ இந்த ஒரு ராகம்தான் இவருக்குத் தெரியாது போலிருக்கிறது” என்று நினைத்துக் கொள்ள சான்ஸ் இருக்கிறது. ஆனால் நீங்கள் கல்யாணி, சங்கராபரணம், காம்போதி போன்ற ராகங்கள் பாடப்படும்போது இந்தக் கேள்வியைக் கேட்டால் சுத்த "ஞான சூனியம்" என்று சந்தேகமில்லாமல் தெரிந்துவிடும் அபயம் இருக்கிறது!
இதைத் தவிர்க்க என் நண்பரொருவர் ஒரு ட்ரிக் வைத்திருக்கிறார். திடீரென்று, "இது பேகடாவா, தர்பாரா" என்று கேட்பார். பக்கத்தில் இருப்பவர் தலையில் அடித்துக் கொண்டு, "ரெண்டுமில்லை, கீரவாணி" என்றால், "ஒஹோ, அதான் கொஞ்சம் சாயல் அடிக்கிறதே-ன்னு பாத்தேன்" என்பார். இதனால் அவர் ”இது ஒரும் வெத்து "ஃபிலிம்" கம்பெனி. சும்மா பந்தா காட்டுது” என்று நினைத்துக் கொண்டாலும், பக்கத்தில் இருக்கும் மக்கள், ”ஆஹா, இவ்வளவு ராகத்தின் பெயரெல்லாம் இவர் தெரிந்து வைத்திருக்கிறாரரே" என்று நினைக்கலாமல்லவா. அதற்குத்தான் இந்த டுபாக்கூர் வேலை.
இப்படியும் சிலபேர்!
சார்ந்த வகை: என்ன நடக்குது இங்கே :: நாள்: அக் 15th, 2004.
சமீபத்திய மறுமொழிகள்