ஆத்ம ஞானம்

அற்புதங்கள் புறத்திலென்று ஆடி ஓடும் மானிடா
அற்புதங்கள் புறத்திலன்று அகத்திலென்று காணடா!

துளித்துளி

எல்லாருக்கும் சொல்லுமாம் பல்லி;
கழனிப் பானையில விழுமாம் துள்ளி

பிராமணர்

0

upanayanamநண்பர் ஒருவர் குடும்பத்தில் நிகழ்ந்த பூணல் கல்யாணம் ஒன்றுக்குச் சென்றிருந்தேன். “உபநயனம்”, “பிரம்மோபதேசம்” என்றும் அந்த நிகழ்வுக்குப் பெயர். ஒரு இளைஞன் கல்வி கற்க குருவினிடத்தில் செல்லும்முன் செய்யப்படும் சடங்கு அது. அண்ட சராசரங்களையும் ஆட்டுவிக்கின்ற அனைத்து சக்திகளுக்கும் மூலாதாரமாக விளங்கும் பிரம்மத்தின் சூக்‌ஷ்மத்தை அறியவைக்கும் “சாவித்திரி” என்ற பெயர் கொண்ட காயத்ரி மந்திரத்தை கற்பித்து, இல்லை – ஓதுவித்து – அதற்கு அடையாளமாக ஒரு முப்பிரி நூலை அந்த ஆண்மகனின் இடப்புறத் தோளில் அணிவிக்கின்ற நிகழ்ச்சி. இந்த பூணல் பற்றிய விவரங்களை பிரிதொரு நாளில் விவாதிப்போம். தற்போது நான் எடுத்துக் கொண்டுள்ள பொருள் அதன் தன்மையைப் பற்றியதல்ல.

அன்று பூணல் “கல்யாணம்” செய்து கொண்ட பையனின் வயது 7 (”கர்ப்பத்தில் இருந்ததைச் சேர்த்து ஏழு” – பையனின் அப்பா). விளையாட்டிலேயே கவனம் கொண்டிருக்கும் சிறு பையன். புகையும், அனலும், இறைச்சலும், பசியும் சேர்ந்து அவனைச் சோர்வடைய வைத்திருந்தன. பிரம்மோபதேசம் முடிந்ததும், உறவினர்களுக்கு நமஸ்காரம் செய்யும் சடங்கு. bikshaiபிறகு வீட்டில் பெரியவர்களிடமிருந்து “பிக்‌ஷை” வாங்கும் நிகழ்ச்சி. பையன் எழுந்து நின்று “பவதி பிக்‌ஷாந்தேகி” என்று ஒவ்வொருவரிடமும் கேட்கவேண்டும். அந்தப் பெண்மணிகள் ஒரு பெரிய பாத்திரத்திலிருந்து ஒரு லிட்டர் அளவு அரிசியை எடுத்து பையனிடம் கொடுப்பர். அதை அவன் மறுபடியும் அந்தப் பாத்திரத்திலேயே திருப்பிக் கொட்டிவிடுவான். பிறகு இன்னொரு பெண்மணி. இப்படித் தொடர்ந்தது இந்தச் சடங்கு.

ஒரு நிலையில் அந்தச் சிறுவனால் தாங்க முடியவில்லை. அழத் தொடங்கிவிட்டான். பாத்திரத்தை போட்டுவிட்டு ஓடத் தொடங்கினான். ஆனால் விடவில்லை, பெற்றோரும் உறவினரும். அழுது கொண்டே நின்ற அந்தச் சிறுவனின் நிலை பார்க்க பரிதாபமாக இருந்தது.

பையனின் தந்தையிடம், ”ஏனய்யா அந்தச் சின்னப் பையனைப் போட்டு இப்படிப் படுத்துகிறீர்கள்? இன்னும் சில ஆண்டுகள் கழித்து இதை வைத்துக் கொள்ளக் கூடாதா? இவனுக்கு இருக்கும் ஸ்கூல், ஸ்பெஷல் கிளாஸ், ஹோம் ஒர்க், கிரிக்கெட், டி.வி இதனூடே இவன் என்ன சந்தியாவந்தனம் செய்து கிழிக்கப் போகிறான்?” என்று வினவியதற்கு அவருடைய பதில்:

“அவ்னுடைய வயதான பாட்டி நான் இருக்கும்போதே பேரனுக்கு பூணல் போட்டுப் பார்க்கவேண்டுமென்று ஆசைப் பட்டாள். அதனால்தான்”

காரணத்தைப் பார்த்தீர்களா! பையனின் வயதோ, சுகமோ அவனுடய ஒப்புமையோ முக்கியமல்ல. இன்னொருவருடைய ஆசை, fanciful wish அதுதான் முக்கியம்!

இதாவது பரவாயில்லை. பல ஒவ்வாத திருமணங்கள் இதுபோன்ற காரணங்களால் தீர்மானிக்கப்படுகின்றன:

 • சொத்து குடும்பத்தை விட்டுப் போகக் கூடாது,
 • ஒண்ணுக்குள்ள ஒண்ணா உறவு விட்டுப் போகக் கூடாது,
 • பெரியவருக்கு இறக்குமுன் வாக்குக் கொடுத்துவிட்டேன்,
 • மனப் பொருத்தம் பார்க்காமல் ஒரு அறைகுறை ஜோசியனின் வாக்கை நம்பி முடிவெடுத்தல்,
 • சாமியார் சொல்லிவிட்டார் என்று முடிச்சுப் போடுவது
 • பெரிய இடத்து சம்பந்தம்

இப்படி தொடர்பில்லாத காரணிகளையும் அளவுருக்களையும் கருத்தில் கொண்டு திருமணம் என்னும் வாழ்வின் மிகமுக்கிய கட்டத்தினை தீர்மானிக்கின்றனர். இப்படி பொருந்தா மணம் எப்படித் தொடர்கின்றது? அந்தப் பையனோ பெண்ணோ சினிமாக்களாலும் ஊடகங்களாலும் உந்தப்பட்டு படிக்கும் காலையிலேயே காதல் வசப்பட்டிருந்த சிக்கல் வெளியே தெரியவந்தபின் மணமுறிவுக்காக நீதிமன்ற வாசலில் நிற்கும் நிலை வருகிறது. அந்நேரத்தில் அவர்களின் திருமணத்திற்கு சாட்சி நின்ற கிரகங்களோ, தேவதைகளோ, மந்திரங்களோ துணை நிற்பதில்லை. வக்கீல்களும், சாட்சிகளும், பிணைகளும் தான் கூட வருகின்றன. அவ்விடத்தில் உண்மைக்கும் வேலையில்லை, உணர்வுக்கும் வேலையில்லை.

சடங்குகளுக்கும், நம்பிக்கைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்காமல் நடைமுறை மாற்றங்களையும், வெளிச் சூழலின் பாதிப்பால் நிகழும் மனவெழுச்சிகளையும், இன்றைய இளைஞர் சமுதாயத்தினிடையே எழுந்துள்ள பழமை எதிர்ப்பையும் மனத்தில் கொண்டு முக்கிய முடிவுகளை எடுத்தால், பின்னர் தோன்றும் பல கசப்பான நிகழ்வுகளை தடுக்கலாம்.

2

உங்கள் கவனத்திற்கு சில செய்திகள்:-

 • டில்லியிலுள்ள சுமார் 50 பொது கழிப்பிடங்களை கழுவி, சுத்தம் செய்துகொண்டிருப்பவர்கள் முழுதும் பிராமணர்கள்.
 • புது டில்லி இரெயில்வே நிலையத்தில் பணியாற்றும் கூலிகளில் 100-க்கும் மேலானவர்கள் பிராமணர்கள்.
 • காசியிலுள்ள மனிதர்களை ஏற்றி கையாலிழுக்கப்படும் ரிக்ஷாக்கள் பெரும்பாலும் பிராமணர்களால் இழுக்கப்படுகின்றன. இதே நிலைதான் டில்லியிலுள்ள படேல் நகரிலும்.
 • ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை பரம்பரையாய் தாயகமாகக் கொண்ட 4 லட்சம் "பண்டிட்" பிராமணர்கள், முஸ்லிம் தீவிரவாதிகளால் தங்கள் இருப்பிடங்களிலிருந்து துரத்தப்பட்டு இப்போது டில்லிக்கருகே தன் தாய்நாட்டிலேயே அகதிகளாக வாழ்கிறார்கள்.
 • ஆந்திர மாநிலத்தில் வீட்டு வேலை செய்யும் பெண்மணிகளில் 75% பிராமணர்கள்.
 • தென்னகத்தில் புரோஹிதம் செய்யும் பிராமணர்களில் 50 சதவீதத்தினர் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்கின்றனர்
 • ஆலயங்களின் வாயிலில் பிச்சையெடுப்பவர்களில் 50 சதவீதத்தினர் பிராமணர்கள்.
 • பிராமண மாணவர்களுக்கு 90% மதிப்பெண் பெற்றிருந்தாலும் மருத்துவக் கல்லூரியிலோ அரசு பொறியியல் கல்லூரியிலோ இடம் கிட்டுவதில்லை.
 • தமிழகம் மற்றும் பல மாநிலங்களில் மருந்துக்குக் கூட ஒரு பிராமண அரசு ஊழியர் கிடையாது.

இப்போது கூறுங்கள், பிராமணர்களை இன்னும் "ஆதிக்க சாதியினர்" என்று பெயர் சூட்டி, நாட்டில் சாதியின் பெயரால் நடந்தேரும் அனைத்துக் கொடுமைகளுக்கும் பிராமணர்களைக் காரணமாக்குவது சரியா?

உண்மையில் தலித்துக்களை கொடுமை செய்வது யார்?

 • பாப்பாரப் பட்டியிலும், கீரிப்பட்டியிலும் தலித்துக்கள் பஞ்சாயத்துக்களில் பங்கெடுப்பதை தடுப்பது யார்?
 • "இரெட்டைக் குவளை" முறை என்னும் கொடுமையை இருபத்தொன்றாவது நூற்றாண்டிலும் தொடர்ந்து இழைத்துக் கொண்டிருப்பது யார்?
 • தலித்துக்களை சில கிராமங்களில் இன்னும் ஆலயங்களில் நுழைய விடாமல் தடுத்துக் கொண்டிருப்பது யார்?
 • தலித் பெயரைச் சொல்லி அரசியல் நடத்திக் கொண்டு, ஓட்டு வாங்கியபின் தன் சொந்த சாதியினரின் முன்னேற்றத்தையே கவனிப்பவர்கள் யார்?

இவர்களெல்லாம் யார் தெரியுமா?

பிராமண எதிர்ப்பு என்னும் நச்சு விதையை ஊன்றி தமிழ்நாட்டை பின்னோக்கித் தள்ளிய ஈ.வே.ரா மற்றும் அவரைப் பின்பற்றி அரசியல் நடத்தும் "ஆதிக்க சாதியினர்"தான்!

இவர்கள்தான் பிராமணர்களையும், தலித்துக்களையும் ஒருசேர கொடுமைப் படுத்துகிறார்கள்!

ஆம். தலித்துக்களும், பிராமணர்களும் ஒரே இனம்தான்!

உ.பியில் மாயாதேவி உணர்ந்துகொண்டார், பிராமணர்கள்தான் உண்மையான தலித்துக்களின் நண்பர்களென்று. இப்போது பெரும்பானமை சட்டசபை இடங்களைப் பிடித்து ஆட்சியேற்றிருக்கிறார்.

தமிழக முன்னாள் தலித் அமைச்சர் சத்தியவாணி முத்து அம்மையார் அவர்கள் பிராமணர்கள் நம் நலனைக் காப்பார்கள் என்று சூளுரைத்தார்.

ஆம். பிராமணர்களும், மற்ற மேல் சாதியினருடன் சேர்ந்து தலித்துக்களை சமூகத்தில் ஒடுக்கி, கீழ் சாதியினராக மதித்து "பஞ்சமர்" என்று பெயரிட்டு தீண்டாமைக் கொடுமையிழைத்தவர்கள்தான். இது மறுக்க முடியாத சரித்திர உண்மை.

ஆனால். அது பழைய சரித்திரம். பிராமணர்கள் எப்போதோ தம் தவற்றை உணர்ந்துவிட்டனர் (மிகசில பழைய பஞ்சாங்கங்களை தவிர). ஆனால் இன்றும் தலித்துக்களை கொடுமை செய்வதுகொண்டிருப்பது யார்?

இது இன்றைய நிலைமை – பழைய கதை அல்ல!

யார் அவர்கள்?

இனம் கண்டுகொள்ளுங்கள் தலித்துக்களே!

38

இப்போதெல்லாம் தமிழ்மணத்தால் திரட்டப்படும் வலைப் பதிவுகள் பலவற்றில் பிராமணர்களை தரக் குறைவாக தாக்குதல் மிக அதிகமாகக் காணப்படுகிறது. வகை தொகை இல்லாமல் வாய்கூசும் சொற்களால் ஏசப்படுகிறது. இது தவிர எனையோர் பதிவுகளிலும் பின்னூட்டங்களில் பல பெயர்களிலும் பெயரிலிகளாகவும் நுழைந்து இன்னும் பல மடங்கு தரம் தாழ்ந்த முறையில் பார்ப்பன அர்ச்சனை நடக்கிறது. இவற்றை சிலர் மட்டுறுத்தல் செய்கின்றனர். ஆனால் பலர் அப்படியே விட்டுவிடுகின்றனர். பார்ப்பானைத்தானே திட்டுகிறார்கள், நமக்கென்ன என்கிற எண்ணமா அல்லது இவ்வாறு திட்டும் நபர் யாரென்று பலருக்குத் தெரியுமென்பதால் (அவருடைய எழுத்தை மட்டுறுத்தல் செய்தால் தாமும் தம் குடும்பத்தாரும் சந்தி சிரிக்கும் அவலத்தை சந்திக்க நேரிடும் என்பதால்) எதற்கு வம்பு என்கிற தற்காப்பு அணுகுமுறையா, நான் அறியேன்.

சரி. இதுபோன்று பதிவுகளை எழுதுபவர்கள் உண்மையில் பார்ப்பனர்கள்மேல் வெறுப்பு கொண்டவர்களா, அல்லது பார்ப்பன ஆதிக்க வெறியினால் பாதிக்கப்பட்டவர்களா என்கிற கேள்வியை கேட்டோமானால் அதற்கு பதில் அத்தகைய இடுகைகளைக் கூர்ந்து கவனித்தால் உங்களுக்குத் தெளிவாக விளங்கும். நீங்கள் இவற்றில் பொதுவாக ஒரு pattern-ஐக் காணலாம். அதாவது, பார்ப்பன வசை பாடுதலும், இந்துமத எதிர்ப்பும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து ஓரிழையாக செல்வதைக் காணலாம். இந்து மதக் கடவுட்களையும், வேதங்கள், உபநிஷத்துகள், இதிஹாஸங்கள் போன்றவற்றை திரித்து மனம் போனபடி விமரிசித்து, அதனூடே இதெல்லாம் பார்ப்பனர்கள் சூத்திரர்களையும், ஏனைய தமிழர்களையும் இரண்டாம்தர குடிகளாக நடத்துவதற்கான சூழ்ச்சிகள் எனக் கொண்டு செல்வார்கள்.

இதையெல்லாம் பார்க்கும்போது, இத்தகைய பதிவுகள் ஒரு திட்டத்துடன் செயல்படுகின்றனவோ என்று ஐயுறுகிறேன். அதாவது, முதலில் பார்ப்பானைத் திட்டு; அனைத்து பிரச்னைகளுக்கும் அவனையே காரணமாக்கு (இந்தியா பங்களாதேஷிடம் தோற்றது உட்பட). சரி, பார்ப்பன வெறுப்பை உமிழ்ந்தாயிற்றா, பின் இந்து மதம் பார்ப்பனருக்காக, பார்ப்பனரால் தோற்றுவிக்கப்பட்ட மதம், பார்ப்பனரல்லாத ஏனைய சாதியினருக்கும் இந்து மதத்திற்கும் யாதொரு தொடர்பும் இல்லை என்ற வாதத்தை நிலைநிறுத்த முயற்சி செய் – இதுதான் அவர்களின் முயற்சி. உண்மையில் அவர்களுக்கு பார்ப்பனர்மேல் யாதொரு வெறுப்பும் கிடையாது. இந்து மதத்தை அழிக்க நினைக்கும் சிலரால் ஏவப்பட்டு இவர்கள் இவ்வாறு திட்டமிட்டு செயல்படுகிறார்களோ என்கிற அச்சம் எழுகிறது.

ஆனால் இவர்களின் இத்தகைய முயற்சி வெற்றி பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் எப்படி உள்ளன என்று பார்க்க எண்ணினால், ஒரு முறை ஏதாவதொரு கோவிலுக்கோ, சமயச் சொற்பொழிவுக்கோ, திருவிழாவுக்கோ சென்று பாருங்கள். எங்கு பார்த்தாலும் "ஜேஜே" என்று கூட்டம் அலைமோதுகிறது. நாளுக்கு நாள் பக்தியும், ஆன்மீக ஈடுபாடும் பன்மடங்கு பெருகி வருவதைக் காண முடிகிறது.
மேலும் வாசிக்க…