எங்கும் நிறைந்திருக்கும் இறைவன்

சமீபத்தில் நடந்த நிகழ்வு இது, சிவகாசியிலுள்ள பட்டாசுத் தொழிலகமொன்றில்.

வெடியைச் சுற்றியிருக்கும் காகிதங்களில் ஏதோ அரபு மொழி எழுத்து தென்பட்டதாம். இதுபோதாதா இஸ்லாமியரின் மத உணர்வுகள் புண்படுவதற்கு! உடனே அவர்கள் தங்கள் கண்டனத்தைத் தெரிவித்தனர். வெடிக்கடை அதிபரும் மன்னிப்புக் கேட்டுவிட்டார். வானுலகத்திலிருக்கும் ஆண்டவரும் திருப்தியடைந்துவிட்டார்!

kumarasthavam சில நாட்களுக்கு முன்பு ஒரு physiotherapy (இதற்கு இணையான தமிழ்ச் சொல் என்ன?) சிகிச்சையகத்தில் சேவைபெற வரும் நபர்களில் சிலரின் கால்களுக்கு ஒருவித பயிற்சி அளிப்பதற்காக சிறிய மஞ்சள் பைகளில் மணல் நிறப்பி தைத்து வைத்திருந்ததைக் கண்டேன். அவற்றில் எல்லாம் இந்துக் கடவுட்களின் படம்தான் வரைந்திருந்தது. அதன்மேல் கால் வைத்துத்தான் பலர் நின்று பயிற்சி பெறுகிறார்கள். இந்துக்கள் உட்பட அனைத்து மதத்தினரும் அதுபோல் எந்தவிதப் பிரச்னையையும் கிளப்பாமல் அதனைப் பயன்படுத்துகின்றனர். ஏனென்றால் அதனை ஒரு துணிப்பையாகத்தான் அவர்கள் அனைவரும் காண்கிறார்களேயன்றி, கடவுளாக அல்ல. உண்மையில் இந்து மதம் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் கடவுளை தம் உள்ளத்தினுள்தானே காணச் சொல்கிறது!

அப்படிப் பார்த்தால் கடவுளர்களின் படங்களைத் தாங்கி நிற்கும் பழைய காலண்டர்களையும், ஆன்மீக இதழ்களையும் என்ன செய்வது – அவற்றை கடவுளாகவே பார்ப்பதா, அல்லது வெறும் காகிதமாகக் கருதுவதா!

மனதை விரித்தால் மனித நேயம் வளரும்!

2 Comments


  1. ஐயோ பாவம் அல்லாஹ்வை நினைத்தால் பாவமாய் இருக்கிறது.

    எகிப்து முதலான அரபி நாடுகளில் பெல்லி டான்ஸ் விளம்பரம் கூட அரபியில் தான் வருகிறது. சிகரெட் விளம்பரம் அரபியில் வருகிறது. 900 நம்பர் அழைப்புகள் கூட வருகின்றன. அதெல்லாம் அல்லாஹ் பார்த்து சிலிப்பிக்கொள்ள மாட்டேன் என்கிறார். காபிர் நாட்டில் அவருக்கு அனாவசியமாய் வியர்க்கிறது!! அரபி செய்தித்தாளில் லட்சுமி வெடி செய்தால் அது ஹராம் ஆகிவிட்டதா? நல்ல வேடிக்கை. நீங்கள் சொல்வது சரிதான். தொட்டாற்சிணுங்கிகளாக இருப்பது அவர்கள் மதத்தையே கேலிக்கூத்தாக்கி வருகிறது.

    நன்றி


  2. What liberating knoewglde. Give me liberty or give me death.

Leave a Reply

Your email address will not be published.