துளித்துளி

குணம் நல்லதாயின்,
எந்தக் குலத்தின ரேனும் — உணர்
வின்பம் அடைதல் எளிதெனக் கண்டோம்.
— பாரதியார்

சரி, விருந்தினராக வந்துள்ளீர்கள். வேறு ஏதாவது தேடிப் பெறுங்களேன், நிறைய எழுதியிருக்கிறேனே! 2008 Archives

0

மறைந்த கர்நாடக இசை மாமேதை ஜிஎன்பி அவர்கள் சகுந்தலை திரைப்படத்தில் பாடியுள்ள நெஞ்சைக் கொள்ளை கொள்ளும் இந்த காம்போதி ராக விருத்தத்தைக் கேட்டு மகிழுங்கள்!

இந்தத் திரைப்படத்தில் ஜிஎன்பி அவர்களுடைய குரல் வளம் முழுதும் வெளிப்படாமல் தடுக்க நிகழ்ந்த பல சதிகளைக் கடந்து, இந்த ஒரு பாடலிலேயே அவர் தன் இசையின் வீச்சை வெளிக்கொணர்ந்திருப்பதைக் காணலாம்.


YouTube - வீடியோவைக் காணுங்கள் GNB

சார்ந்த வகை: இசை :: நாள்: . மறுமொழி இடுக#

0

ஒரு ரயில் பயணத்தின்போது எதிரே அமர்ந்திருந்த தம்பதிகளுக்குள் காரசாரமான விவாதம் நிகழ்ந்துகொண்டிருந்தது. பிறர் பேசுவதை ஒட்டுக் கேட்பது நாகரிகமல்ல என்றாலும் ஒரு பொது இடத்தில் இதுபோல் உரக்க நடந்துகொண்டிருந்த அந்த வாக்குவாதம் என் காதில் தொப்தொப் என்று விழுந்து கொண்டிருந்தபோது அதை செவி மடுக்காமல் இருக்க முடியுமா, அதுவும் சமாசாரம் சுவாரசியமாக இருந்தால்!

விஷயம் இதுதான் – சமீபத்தில் அவர்கள் வெளிநாட்டிலிருக்கும் தன் மகன் வீட்டிற்குச் சென்று திரும்பியிருக்கிறார்கள். மகனின் குழந்தைகளை சீராட்டிவிட்டு, அவர்களுக்கு baby sitting சேவைகளை செவ்வனே செய்துவிட்டுத் திரும்பியிருக்கின்றனர்.

ஆனால் அவர்களுடைய பேரக் குழந்தையை சிறிது கடிந்து பேசிவிட்டாள் அந்த அம்மாள் என்பதற்காக அவர்களுடைய மருமகள் கோபப் பட்டிருக்கிறாள். அவர்களுடைய மகனும் முகத்தைக் காண்பித்திருக்கிறார்.

இதுதான் அந்த அம்மாளுடைய மனத்தாங்கலுக்குக் காரணம். "அவர்களுக்குச் செய்வதற்குத்தான் நானா? கண்டிப்பதற்கு உரிமை இல்லையா" என்றெல்லாம் அங்கலாய்த்துக் கொண்டிருந்தாள், அந்த அம்மையார். அவருடைய புருஷன் சமாதானம் செய்து கொண்டிருந்தார், "இதைப்பார், பிறருடைய குழந்தைகளைக் கொஞ்சி சீராட்டி வளர்க்கலாம். அவர்களுடன் விளையாடலாம். ஆனால் கடிந்துபேச நமக்கு உரிமை இல்லை. அது அந்தக் குழந்தையின் பெற்றோருக்கு மட்டும்தான் உரிமையான விஷயம். அதுதான் சரியான அணுகுமுறை. இது நம் பேரக் குழந்தைகளுக்கும் பொருந்தும்" என்றார் அவர்.

கூர்மையாக யோசித்துப் பார்த்தால் இந்தக் கூற்று சரியானதுதான் என்று தோன்றுகிறது. கூட்டுக் குடும்ப வாழ்க்கை என்ற பேச்சே இல்லாத இக்காலத்தில் சில நாட்கள் குழந்தைகளோடு இருக்கும் போது இனிமையாக பொழுதைக் கழிக்காமல் அவர்களுடைய பழக்க வழக்கங்களில் தலையிட்டு, குழந்தைகளின் தற்கால எண்ணப் பாங்கினையும் அவர்கள் வளரும் சூழலின் தன்மையையும் அறியாமல் அவர்களுக்கு அறிவுரை சொல்ல முயன்றால் பிணக்குதான் மிஞ்சும்.

1

சமுதாய மறுமலர்ச்சியை உருவாக்கப்போகும் இந்தச் செய்தியை வாசியுங்கள்:-

முன்னாள் பிரதமர் வி.பி.சிங் கனவை நிறைவேற்றும் வகையில் அனைத்துப் பள்ளிகள், அனைத்துக் கல்லூரிகள் மற்றும் தனியார் நிறுவனங்களிலும் இடஒதுக்கீட்டை கொண்டுவர நாம் முயற்சிக்க வேண்டும் என முதல்வர் கருணாநிதி கூறினார்.

அடுத்து நிகழப்போவது என்ன?

செயல் வீரரான கலைஞர், இந்தச் சமுதாயப் புரட்சியை நிகழ்த்திக் காட்டுவதில் தானே முன்னோடியாகத் திகழ, தனக்கும் தன் குடும்பத்தாருக்கும் சொந்தமான "கலைஞர் டிவி" மற்றும் இப்போது சண்டை சச்சரவெல்லம் ஒரு வழியாக ("ரவுண்டாக") முடிந்து ராசியாகி விட்ட "சன் டிவி" நிறுவனங்களில் உடனடியாக இட ஒதுக்கீடு அமல் படுத்திவிட்டதாக ஒரு அறிவிப்பு வரப்போகுது பாருங்கள்!

வாழ்க சமூக சிர்திருத்தம். வளர்க இட ஒதுக்கீட்டு அரசியல்!!

0

தேள் கடிக்கு விஷ முறிவு மருந்து விற்பனை செய்த ஒருவர் தேள்களை தன் உடலில் கொட்ட விட்டதால் விழுப்புரம் கலெக்டர் அலுவல கத்தில் பரபரப்பு ஏற்பட் டது.

சாதாரணமாக தேள் கடித்தால் 24 மணி நேரத்திற்கு வலி நீடிக்கும். கொடிய விஷம் உடைய நட்டுவாக்கலி கடித்தால் சில மணி நேரத்தில் விஷம் தலைக்கு ஏறி உயிருக்கே ஆபத்து ஏற்படும்.இந்த தேள் கடிக்கு கிராமப்புறங்களில் பல்வேறு விதமான விஷ முறிவு மருந்துகள் செய்யப்படுவது உண்டு. தேள் கடித்த இடத்தில் கல் ஒன்றை வைத்து கட்டி விஷத்தை எடுத்தவுடன் பாலில் அந்த கல்லை பாதுகாப்பாக வைப்பார்கள்.இதே போல் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கிராமப்புறங்களில் இதே முறை கடைபிடிக்கப்படுகிறது.

அரசு மருத்துவமனைகளில் தேள் கடிக்கு இன்னும் முறையான சிகிச்சை அளித்து மருந்து, மாத்திரைகள் வழங்கப்படுவதில்லை என்று பொதுமக்கள் மத்தியில் கூறப்படுகிறது.இதை சிலர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தேள் கடி, பூரான் கடிக்கு மருந்து கொடுப்பதாக நகர்ப்புறங்களில் பலரும் மருந்துகளை விற்பனை செய்து வருகின்றனர்.

இதே போல விழுப்புரம் பகுதியில் நேற்று திருச்சி மாவட்டம் முசிறி மலையபுரத்தை சேர்ந்த சம்சுதீன் என்பவர் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில், தேள் கடிக்கு மருந்து விற்பனை செய்தார்.

தனது மருந்து சக்தியை நிரூபிக்கும் வகையில் 30-க்கும் மேற்பட்ட தேள்களை பிடித்து தனது கைகளில் கொட்டுமாறு செய்து பிறகு அந்த விஷத்தை (பாதரசத்தால் தயாரித்ததாக கூறப்படும்) தனது கண்டுபிடிப்பு மருந்தை தேள் கொட்டிய இடத்தில் தடவி விஷம் முறிந்ததாக கூறுகிறார்.

விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்துகொண்டு தங்கள் குறைகள் தொடர்பாக மனு கொடுப்பதற்காக ஏராள மான பொதுமக்கள் வந்திருந்த னர். இந்த பொதுமக்கள் அனைவரும் தங்கள் குறைகளையும் மறந்துவிட்டு இந்த தேள் கடிக்கு விஷ முறிவு மருந்து விற்பனையை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்து விட்டு இந்த மருந்தை அனைவரும் வாங்கிச் சென்றனர்.

விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் அருகே தேளை தனது உடலில் கடிக்க விட்டு விஷ முறிவு மருந்தை விற்பனை செய்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

செய்தி: தினத்தந்தி

5-ல் இது-512345