திருமுருக. கிருபானந்தவாரியார் அவர்கள் தன் “கலையறிவினாலும், அனுபவ அறிவினாலும் நுணுகி” எடுத்த “மணிமொழிகள்” (திருப்புகழமிர்தம் வெளியீடு-1968) கையேட்டிலிருந்து நான் தொகுத்துள்ள சில முத்துக்கள்:
- இரவில் தூக்கம் வந்தாலொழியப் படுக்கையில் படுக்காதே. காலையில் விழிப்பு வந்தவுடன் எழுந்துவிடு. சோம்பலுடன் படுக்கையில் படுத்துப் புரளாதே.
- பெண்களை ஆண்கள் காவல் புரிவதனால் பெண்மை தாழ்ந்ததன்று. வன்மை காவல் புரியும். வன்மைக்கு மென்மை அடங்கும்.
- அறிவு, குடிப்பிறப்பு, அடக்கம், அளவறிந்து பேசுதல், கல்வி, ஆற்றல், தன் சக்திக்குத் தகுந்த தானம், நன்றியறிதல் — இந்த எட்டுக் குணங்களும் மனிதனை ஓங்க வைக்கின்றன.
-
- பார்த்துக் கெட்டது பிள்ளை
- பார்க்காது கெட்டது பயிர்
- இட்டுக் கெட்டது காது
- இடாது கெட்டது கண்
- கேட்டுக் கெட்டது குடும்பம்
- கேளாது கெட்டது கடன்
- உண்டு கெட்டது வயிறு
- உண்ணாது கெட்டது உறவு
-
- கற்பிக்கப் பட்டவன் குருவைக் கவனிக்க மாட்டான்
- திருமணம் ஆனவன் தாயைக் கவனிக்க மாட்டான்
- ஆசையற்றவன் பெண்ணைக் கவனிக்க மாட்டான்
- பயனை அடைந்தவன் உதவி செய்தவனைக் கவனிக்க மாட்டான்
- கரையை அடைந்தவன் படகைக் கவனிக்க மாட்டான்
- நோய் நீங்கியவன் மருத்துவனைக் கவனிக்க மாட்டான்
- சிறியோர்தானே என்றெண்ணி ஒருவர் பகையையும் தேடிக் கொள்ளாதே
- மூன்று பொருட்களை மிச்சம் வைக்காமல் அடியுடன் அழிக்கவேண்டும் — நெருப்பு, கடன், பகைவன்.
- வாய்க் கொப்பளித்து ஒருபோதும் வலப்பக்கம் உமிழக் கூடாது
- அன்னம், நெய், உப்பு மூன்றையும் கையால் படைக்கக் கூடாது.
- சனி, செவ்வாய்க் கிழமைகளில் சவுளம் செய்து கொள்ளக் கூடாது
- விநாயகருக்குத் துளசியும், சிவனுக்குத் தாழையும், பார்வதிக்கு நெல்லியும், சூரியனுக்கு அருகும், வைரவர்க்கு நந்தியாவர்த்தமும், திருமாலுக்கு அட்சதையும் சாத்தக் கூடாது.
- கடும் வெயில், மயானப் புகை, தன்னைவிட வயதானவளைப் புணர்தல், தேங்கிய குட்டை நீர், இரவில் தயிரன்னம் – இந்த ஐந்தும் ஆயுளைக் குறைக்கும்.
- மாலை வெயில், ஓமப் புகை, இளம் மனைவி, அருவி நீர், இரவில் பால் அன்னம் இவ்வைந்தும் ஆயுளைப் பெருக்கும்.
- தன் கையால் படுக்கையை விரித்துக் கொள்வதும், தன் கையால் ஆசனப் பலகையிட்டுக் கொள்வதும், தன் கையால் அன்னம் படைத்துக் கொள்வதும், ஆக இம்மூன்றும் ஆயுளைக் குறைக்கும்.
- நதி, குளம் முதலிய தீர்த்தங்களில் உடை உடுத்திக் கொண்டு முழுக வேண்டும். நீராடியபின் உடையை நீருள் பிழியக் கூடாது.
- ஒற்றையாடையுடன் உணவு செய்யக் கூடாது.
- இரு கைகளாலும் தண்ணீர் குடிக்கக் கூடாது.
-
கீழ்பால் நோக்கி யுண்போர்க்கு ஆயுள் வளரும்
மேற்பால் நோக்கி யுண்போர்க்கு பொருள் சேரும்
தென்பால் நோக்கி யுண்போர்க்கு புகழ் வளரும்
வடபால் நோக்கி யுண்போர்க்கு நோய் வளரும் - இரவில் இஞ்சி, பாகற்காய், கஞ்சி, கட்டித் தயிர், இலைக் கறி, நெல்லிக்காய் – இவைகளை உண்ணக் கூடாது. உண்டால் இலட்சுமி கடாட்சம் நீங்கும்.
- ஆண்கள் இடப்பக்கம் கீழிருக்கவும், பெண்கள் வலப்பக்கம் கீழிருக்கவும் ப்படுத்துறங்க வேண்டும்.
அருளின்பம் வாழி; உயிர்களெல்லாம் வாழி!
Permalink
அன்புள்ள நண்பா,
அருமை!
வாரியார் is really great!!
Permalink
Nice Post
Permalink
Good and informative.