மறைந்து போகும் மனக்கணக்கு

மனக் கணினிசாலையோரங்களில் காய்கறிகளை கூறுகட்டி வியாபாரம் செய்பவர்களிடம் நீங்கள் பலவித பொருட்களை பலவித அளவுகளில் வாங்கியிருந்தாலும் தம்படி பிசகாமல் துல்லியமாக கணக்கிட்டு கண்சிமிட்டும் நேரத்தில் நீங்கள் கொடுக்கவேண்டிய துகையை கூட்டிச் சொல்வதைக் காணலாம். ஆனால் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களைக் கேளுங்கள் – உடனே அவர்களின் கைகள் தன்னையறியாமல் பைக்குள் செல்லும், கால்குலேட்டர்களை எடுக்க!

என்னுடன் பணியாற்றும் ஒருவர் சென்னையிலிருந்து புதுடில்லிக்கு படுக்கை வசதி வண்டியில் 6 டிக்கெட், குளிர்சாதன இரண்டாம் வகுப்பில் மூன்றரை டிக்கெட், மூன்றாம் வகுப்பில் 7 டிக்கெட் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே எவ்வளவு கூட்டுத் தொகை என்பதைச் சட்டென்று சொல்லிவிடுவார். அந்த அளவுக்கு இல்லாவிடிலும், சாதாரண பெருக்கல், கூட்டல் கூட மனதால் செய்யமுடியாத சமுதாயமாக நம் இளைஞர்கள் மாறிவிட்டார்கள்.

இதற்குக் காரணம் இதுபோன்ற மனப் பயிற்சி அவர்களின் கல்வித் திட்டத்திலும் இல்லை, பெற்றோர்களும் இத்தகைய மனதாற்றலை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை உணர்ந்தாரில்லை. கணினியும், இணையமும், கூகிளும் கைவசம் இருக்கும்போது மனக்கணக்கென்று ஒன்று எதற்கு என்பது இந்தக் கால கட்டத்தில் எழும் வாதம். ஆனால் மனத்துக்குளேயே இத்தகைய நுன்ணிய செயல்களை இயக்கும் (processing) ஆற்றலை வளர்த்தல், அவர்களின் உணர்வுபூர்வ செயலாற்றல் மற்றும் ஒரு பிரச்னையின் பல கோணங்களையும் தன் மனத்தினுள் ஆராய்ந்து உடனுக்குடன் சரியான முடிவெடுக்கும் திறன் போன்ற திறமைகளை வளர்க்க உதவும் என்பதால் அது ஒரு முக்கிய பயிற்சியாகும். This kind of brain games will help improve cognitive capabilities.

அடுத்த முறை ஒரு இளைஞரை காணும்போது இந்தக் கணக்கைப் போட்டு காகிதம், பேனா இல்லாமல் விடை சொல்லச் சொல்லுங்கள்:-

ஒரு டிஸ்கி: (இதனால் உங்களுக்கு சூட்டப்படப்போகும் பட்டப் பெயர்களுக்கும், உடற் காயங்களுக்கும், உடையப் போகும் கன்னாடிகளுக்கும் நான் பொருப்பல்ல!)

“இரெண்டரையே அரைக்கால் கிலோ வாழைக்காய் மூன்றரையே அரைக்கால் ரூபாய் என்றால், நாலரையே அரைக்கால் கிலோ வாழைக்காய் எவ்வளவு ரூபாய்?”

5 Comments


  1. Wow! Now-a-days, kids don’t even know there is quarter, half, three-quarter tables! Till fifth standard, i had a மனக்கணக்கு exam – in which I had to suffer a lot 🙂 I think this “applied math” is directly useful to life – than all those “pure math” we had to undergo in school 🙂


  2. Nice site.. good work… keep it up… 😀


  3. சரியா சொல்லுங்கள் – நாங்கள் அக்காலத்தில் முக்கால், அரை, கால், அரைக்கால் வாய்பாடுகள் படித்தவர்கள்


  4. ஸ்ரீகாந்த், உமா சங்கர், சீனா அனைவருக்கும் நன்றிகள்!

    35/8 / 25/8 * 45/8

    இதுதான் கணக்கு!

    விடை: 63/8.

    சரிதானா தோழர்களே!

    நட்புடன்,

    எஸ்.கே

Leave a Reply

Your email address will not be published.