இன்று லாஃப்டில் ஏறி அங்கு என் சந்ததியார்களுக்காக சேமித்து வைத்துள்ள (இவற்றை யார் சீந்துவார்கள், அவர்கள் வாழப்போவது டிஜிடல் உலகத்தில்” – அசரீரி!) பேப்பர் க்ளிப்பிங்குகளையும், பழைய புத்தகங்களையும் (அத்தனையும் மாணிக்கங்கள்!) ஒழுங்காக அடுக்கி வைக்க ஆரம்பித்தேன். புதிய வரவுகளுக்கு இடம் வேண்டாமா?
C.1935 காலத்திய பதிப்புகள் சிலவற்றில் வாசம் செய்த ராம பாணங்கள் என்னிடம், “என்னதான் புத்தகங்கள், நூல்கள், இரத்தினங்கள் என்று பல பெயர்களில் நீ அழைத்தாலும் அடிப்படையில் அவை cellulosic material – தான்” என்று கூறிவிட்டுச் சென்றன. என் attic-ஐ அலங்கரிக்கும் இது போன்ற antic-களைப் பற்றி பிரிதொரு நாள் பேசுவோம்!
புது புத்தகங்களை வாங்கி அவற்றின் வாசனையை முகர்ந்து விட்டு, “நம்பளோடதுதானே, எங்க ஓடிடப் போவது; பிற்பாடு சாவகாசமா படிச்சுக்கலாம்” என்று எல்லாவற்றையும் போல் இதனையும் procrastination list-ல் சேர்த்து விட்டு நிம்மதியாக மனதுக்குப் பிடித்தமான வேறு தொழில்களில் ஈடுபட்டுக்கொண்டு சென்றதால், புத்தகங்கள்தான் சேர்ந்தன – அறிவு கூடவில்லை! இதற்கிடையில், காலண்டர்கள் புதிது புதிதாய் ஆணியில் மாறிக்கொண்டு செல்வதைத் தடுக்க இயலவில்லையே! காலத்தை rewind செய்யமுடியாவிட்டலும், குறைந்த பட்சம் “Pause” செய்யவாவது இயலவேண்டும். அதற்கான Time Machine யாராவது கண்டு பிடிப்பார்களா? இல்லாவிட்டால் யயாதி கதை தான்! ஐயகோ, அநுபவிக்க வேண்டியது எவ்வளவு இருக்கு – அத்தனையும் கொள்ளை போகிறதே? ஆமாம், “அநுபவிப்பது” என்றால் என்ன? அது species களுக்குத் தகுந்தாற்போல் வேறுபடும். இதைப் பற்றி ஒரு கதை இருக்கு – அது அப்புறம். “Stop it!”. Ok, I am drivelling!
ஓன்று மட்டும் நிச்சயம். விற்கும் நூல்கள் எல்லாம் படிக்கச் சுவையாயிருக்க வேண்டிய கட்டாய மில்லை. Books sell mostly through hype, promotion campaigns, reviews serving as surrogate ads, just plain ad’s and also the snob value associated with ownership. சில பிரபலங்களின் பேட்டிகளை டி.வி-யில் பார்த்தால் backdrop-ல் பல புத்தகங்கள் பளபள வென்று அடுக்கி வைக்கப் பட்டிருக்கும். அவ்வளவு படிப்பாளி என்று பார்ப்பவர்கள் மதிப்பீட்டுக்காக! அந்த டைட்டில்கள் எல்லாம் அவர்கள் பெரிய அறிவு ஜீவி எனக் காண்பிக்கக் கூடிய அளவில் இருக்கும். மைசூரில் பணியாற்றும்போது ஒருவர் வீட்டில் விசேஷம், செல்ல வேண்டிய கட்டாயம். அவர் வீட்டின் டீபாய் மேல் ஒரு கட்டு Readers’ Digest, ஒரு கட்டு National Geographic கருக்கழியாமல் அலங்கரித்துக் கொண்டிருந்தது. அவர் வீட்டில் யாரும் அவைகளைப் படிக்கும் நிலையிலோ, வயதிலோ இல்லை. எல்லாம் ஒரு “இது”தான். ஆமாம், இவ்வளவு பேர் புக் பேஃரில் அள்ளிச் செல்கிறார்களே, அவற்றில் எத்தனை சதம் முழுவதாகப் படிக்கப்படும்? ஏனென்றால், முழுமையாக ஒருமுறை கூடப் படிக்காமல் ஒரு புத்தகத்தையே தடை செய்தவர்களாயிற்றே நாம்!
2005 புத்தகக் கண்காட்சியில் மேற்கொண்டு வாங்கியவை:-
- எம்.எஸ் ஞாபகார்த்தமாக “மீரா” VCD (ஒரிஜினல்! ஹிஹி, ஒரு மாறுதலுக்குத்தான்!)
- மாம்பலம் சிஸ்டர்ஸ் – ஸ்தோத்திரங்கள் – MP3
- அபுல் கலாம் ஆசாத் – கானா
- இரா. முருகன் – அரசூர் வம்சம் + சைக்கிள் முனி
- பி.ஜி.வுட்ஹௌஸ் – 4 (நடைபாதை பேரம்)
- Edward de Bono – 2 (………. do ………)
- ஸதாசாரம்
- கல்கியின் 3 கதைகள்
- சமையல் சமாசாரங்கள் – 4 (ரோக்கா படி)
- ஜெயகாந்தனின் ஹரஹர சங்கரா (இதன் வாயைத் தைத்து சிரமப் பட்டிருக்க வேண்டாம்! திராபை!)
இன்னும் சில, பட்டியலிடுமுன் பரண் ஏறிவிட்டன!!
அங்கே நுழைந்தவுடன் ஒரு கொஞ்ச வயசு சாமியார் என்னமா போஸ் கொடுக்கறார்ங்கிறீங்க – ரமேஷ் பிரபா எல்லாம் சும்மா ஜுஜூபி! அந்த சாமியார் பேசாம Fashion TV – லே சேரலாம். மூஞ்சி கொஞ்சம் effeminate-ஆ பட்டது! வோணாம்ப்பா!! Nay, I’m not one of those!!
தெரிந்தவர்கள் தயவுசெய்து சீக்கிரம் சொல்லுங்களேன், தஞ்சை தமிழ்ப் பலகலைக் கழகம் பிரசுரித்துள்ள அகராதி வாங்கலாமா? ரூ.600 விலையுள்ள அந்த ஆ-த அகராதியை ரூ.450-க்குக் கொடுக்கிறார்கள். நன்றி.
Permalink
//தஞ்சை தமிழ்ப் பலகலைக் கழகம் பிரசுரித்துள்ள அகராதி வாங்கலாமா? ரூ.600 விலையுள்ள அந்த ஆ-த அகராதியை ரூ.450-க்குக் கொடுக்கிறார்கள்//
Kattayam vaangalaam…eppadiyum vaangi paranladhaane poda poreenga..! athanaala sonnaen!! 😉 sorry!!
Permalink
அது பயங்கர வெயிட்டு. அதனால கீழேதான் இடம் பாக்கணும்!
பக்கத்து ஊர்க்காரர் காலை இப்படி வாரலாமா?
எஸ்.கே
Permalink
ஜெயகாந்தனின் ஹரஹர சங்கரா (இதன் வாயைத் தைத்து சிரமப் பட்டிருக்க வேண்டாம்! திராபை!) :-)))
Permalink
கிச்சு: கட்டாயம் வாங்கலாம். மிக அழகாகக உருப்படியாகச் செய்யப்பட்டுள்ள அகராதி. கலைச்சொற்கள் அனைத்தும் உள்ளன. அவை தேவைப்படும் என்றால் வாங்கலாம்.
Permalink
லீடிங் பத்திரிக்கைகளில் வரும் இரண்டு சாமியார் மேலேயும் எனக்கொரு கண்தான். கூடிய சீக்கரம் எதாவது ‘நல்லது’ நடக்குதான்னு பார்ப்போம்!
– ஜெ. ரஜினி ராம்கி
Permalink
//…இரண்டு சாமியார் மேலேயும் எனக்கொரு கண்தான்.//
போர போக்கைப் பாத்தா டிமாண்ட் ஜாஸ்தியா இருக்கும் போலேருக்கே!!
🙂
எஸ்.கே
Permalink
பத்ரி எழுதியது:
//கிச்சு: கட்டாயம் வாங்கலாம்.//
நன்றி!
ஆனால் நான் கொஞ்சம் முந்தியிருக்க வேண்டும். அவர்கள் கொண்டு வந்த 25-ம் விற்றுவிட்டனவாம்.
இனிமேல் என்ன?
அருங்கலைச் சொற்கள் அகரமுதலிக்காக அரண்மனை வாசலுக்குச் செல்லவேண்டும்!
கட்டாயம் செல்வேன்!
எஸ்.கே
Permalink
//தஞ்சை தமிழ்ப் பலகலைக் கழகம் பிரசுரித்துள்ள அகராதி வாங்கலாமா? ரூ.600 விலையுள்ள அந்த ஆ-த அகராதியை ரூ.450-க்குக் கொடுக்கிறார்கள்//
என்னைப் போன்றத் தொழில் முறை மொழிபெயர்ப்பாளர்களுக்கு அது மிக அவசியம். நான் வாங்கி விட்டேன். பத்ரிக்கு அதைக் காண்பித்ததில் அவர் தானும் வாங்கப் போவதாகக் கூறினார். அத்துடன் ஒரு சட்டம் சார்ந்த ஆங்கில-தமிழ் அகராதியும் வாங்கினேன். இரு அகராதிகளும் சேர்ந்து ரூ. 600 மட்டுமே.