சிறைப்பட்ட மனங்கள்!

Nachiketas Yamaதீர்க்கமாக ஊர்த்வ புண்ட்ரம் தரித்து, காதில் கடுக்கன், நல்ல ஆகிருதி சகிதம் (சிகை? கண்ணில் படவில்லை) ஒரு பௌராணிகரின் அனைத்து கல்யாண லக்‌ஷணங்களுடன் வந்து அமர்ந்தார் அந்த 30 வயது மதிக்கத்தக்க இளைஞர்.

இடம்: மயிலை இராமகிருஷ்ண மாணவரில்லம். நவராத்திரி விழா. பேச எடுத்துக்கொண்ட தலைப்பு: “சூப்பர் ஸ்டார்ஸ்”! ஆடியன்ஸ்: 90% மாணவர்கள்.

சூப்பர் ஸ்டார்களாக அவர் தெரிவு செய்தவர்கள்: நசிகேதஸ், ப்ரஹ்லாதன், துருவன்.

பண்டிதர்களுக்காக அல்லாமல் பள்ளி மாணவர்களுக்கு ஏற்றாற்போல் பேசத் தொடங்கினார் அவர். ஆனால் அந்த மூவர் கதைகளையும் மிகச் சுறுக்கமாக, முக்கிய சம்பவங்களையும், குறிப்பிட்டு சுட்டிக் காண்பிக்கவேண்டிய விவரணைகளயும் கூட விட்டுவிட்டு கடகடவென்று கதை சொல்லி முடித்து, சில கர்நாடக சங்கீத வித்வான்கள் சாகித்யத்தை விறுவிறுவென்று ஒப்பேத்திவிட்டு கல்பனா ஸ்வரத்தில் இறங்கிவிடுவதுபோல, “கேள்வி கேளுங்கள், பதில் சொல்கிறேன்” என்று ஆரம்பித்தார்.

முதலில் பையன்கள் கேள்வி கேட்கத் தயங்கினார்கள். அவர் மீண்டும் மீண்டும் ஊக்குவித்த பிறகு ஒவ்வொருவராக மிகச் சாதாரணமான obvious and banal கேள்விகளை சம்பிரதாயமாக கேட்டு முடித்தார்கள். ஆனால் பௌராணிகர், “என்ன, இவ்வளவுதானா, இன்னும் கேளுங்க (கேட்டுக்கிட்டே இருங்க!)” என்று முடுக்கி விடவே, பசங்க ‘ஃபுல் ஃபார்மில்’ உற்சாகத்துடன் இறங்கி, கியூவில் நின்று, மைக்கை ஒருவர் கையிலேயிருந்து இன்னொருவர் பிடுங்கி கேள்விக் கணைகளைத் தொடுக்க ஆரம்பித்தார்கள்.

சில கேள்விகள், “ஏன் சார், சாமி மூக்கிலேருந்து பன்னிதான் வந்தது, யானை ஏன்சார் வரல்ல” என்பதுபோன்ற ‘மொக்கை’ கேள்விகளாக இருந்தாலும் மொத்தத்தில் அறிவு பூர்வமான பல கேள்விகளை கேட்டு, பேச்சாளரின் அறிவை, வாசிப்பை நன்கு சோதனை செய்தார்கள் பையன்கள். நரசிம்மர் ஹிரணியனின் வரங்களை எவ்வாறு முறியடித்தார் என்ற விவரங்களை அந்தப் பௌராணிகர் விளக்கவேயில்லை (அதுதான் அந்தப் புராணத்திலேயே முக்கியமான பகுதி) என்பதை ஒரு மாணவர் சுட்டிக்காட்டினார்.

எல்லாம் சரியாகத்தான் இருந்தது. ஒரு கட்டத்தில் பையன்களின் புராணங்களைப் பற்றிய அறிவை சோதிக்கிறேன் என்று தொடங்கினார் அந்த உபன்யாசகர். “பிரம்மா யார்?” என்று கேட்டுவிட்டு, அதற்கு அவரே “அவர் விஷ்ணுவின் மகன்” என்று பதிலுரைத்தார். அடுத்து “சிவன் யார்?” என்று கேட்டார். உடனே பையன்கள், “அவர் மும்மூர்த்திகளில் ஒருவர், சர்வேஸ்வரன் என்று அழைக்கப்படுபவர், அழித்தல் எனும் கடமையை ஆற்றுபவர்” என்று கோரஸாக பதிலளித்தனர்.

அதைக் கேட்ட அந்தப் பௌராணிகள் சிரித்துவிட்டு, நீங்கள் அறிய வேண்டியது நிறைய இருக்கிறது என்று சொல்லிவிட்டு ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்:

“சிவன் விஷ்ணுவின் பேரன், பிரம்மாவின் மகன்”, என்று!

பையன்கள் மௌனமானார்கள். இத்தகைய கூற்றை இதுவரை அவர்கள் கேள்விப்பட்டதேயில்லை. இருந்தாலும் மறுத்துப் பேசவேயில்லை – இராமகிருஷ்ணா மாணவரில்லம் ஆயிற்றே!

அடுத்து அறிவியலில் புகுந்தார் அந்த பேச்சாளர் – தன் பன்முக அறிவாற்றலை பறைசாற்ற வேண்டாமா!

“நீங்கள் பந்தை உயரே எறிந்தால் அது மீண்டும் பூமியில் வந்து விழுகிறது. ஆனால் சூரியன், சந்திரன் போன்றவை வானத்திலேயே நிற்கின்றனவே, அது எப்படி?” என்றார்.

பையன்கள் ஈர்ப்புவிசை பற்றி பேச முற்படும்போதே, அவர்களை இடைமறித்து, “நான் சரியான பதிலை சொல்லிவிடுகிறேன். சூரியன், சந்திரன் போன்ற கிரகங்களை பெருமாள் தன் கையால் பிடித்து வைத்துக் கொண்டிருக்கிறார். அதனால்தான் அவை கீழே விழவில்லை” என்று போட்டாரே ஒரு போடு!

அவர் ஏதோ ஜோக் அடிக்கிறார் என்று பையன்கள் தங்களுக்குள் சிரித்துக் கொண்டார்கள்.

நிகழ்ச்சி முடிந்தபின் அவரை சந்தித்து “பள்ளிச் சிறுவர்கள் முன் பேசும்போது நீங்கள் நடுநிலையுடன் பொதுவான கருத்தைத்தான் கூற வேண்டும். உங்கள் தனிப்பட்ட மதம் சார்ந்த நம்பிக்கைகளை அறிவியல் உண்மைகள் போல் கூறக்கூடாது. நீங்கள் செய்தது மிகத்தவறு. அப்படியே நீங்கள் அதீத பிடிப்புடன் கைக்கொண்டுள்ள சித்தாந்தங்களைப் பற்றிச் சொல்ல விரும்பினால், ‘பலவித நம்பிக்கைகள் உள்ளன. இது நான் நம்பும் கோட்பாடு, புராணம்’ என்று ஒரு disclaimer கொடுத்துவிடுவதுதானே சரியான செயல்பாடு” என்று எடுத்துச் சொன்னேன். ஆனால் அவர் தான் சொன்னது சரிதான் என்றும் அதற்கு பல ‘திருஷ்டாந்தங்கள்’ இருப்பதாகவும், ஒரு உணர்ச்சிவசப்பட்ட மத போதகர் போல் வாக்குவாதம் செய்யத் தொடங்கினார்.

அவரிடம் பேசிப் பயன் இல்லை. அது பூட்டப்ப்பட்ட மனம். ஒன்றிற்கு மேல் அதில் இடம் இல்லை!

2 Comments


  1. Still there is a society claiming the Earth is flat. Our puranas were relevant when the knowledge of science was limited. Anyway such stories fascinates our kids.So be it.


  2. when I had been to Kanchi to have the grace of Kanchi Paramacharyal during 1966
    . Periyava asked me are u reading Hindu paper ? I nodded my head and told “yes

    Next question : what is the important portion u will read in the paper
    My answer. : That day’s engagement column
    Periyava : Why it is important to u ?
    Myself. : I am interested to know about lectures given by bowranikar.
    Periyava : OK. Whether the people are benefited by them.
    My self. : Mmmmm( I kept mum)
    Periyava continued that many bowranikars are not having sufficient knowledge about our Puranas They are telling some thing (. Mani Parthu pesara .kai mani Parthu pesara ) people are not benefited.

    After reading the article this incident came in my memory.

    Vai Ramachandran. Now @ Newjersey . US

Leave a Reply

Your email address will not be published.