காணுமிடமெல்லாம் கழிப்பிடமா?

கழிப்பிடம்தேடி களிப்பீர்! எதெதெற்கோ போர்டுகளையும் கட்-அவுட்டுகளையும் வைத்து சாலையை அடைக்கிறார்களே, நம் மக்கள் கண்ட இடங்களையெல்லாம் நரகலாக்கும் நாகரிகமற்ற பழக்கத்தை மாற்றும் வகையில் இந்த அறிவிப்புப் பலகையை அனைத்துப் பொது இடங்களிலும் வைத்தாலென்ன?

இதுக்கெல்லாம் அசருவோமா நாங்கள் என்கிறீர்களா!!

படம் – நன்றி: Mike Jolley

5 Comments


  1. நம்பர் டூ அவஸ்தை மாற்ற அறிவிப்பு தேசத்தின் ரயில்வே டிராக் சைடுகளில் எல்லாம் வைக்க வேண்டிய போர்டு 😆

    கூடுதலாக தெருவெங்கும் நம்பர் 1 மூச்சா போவதை மாற்ற ஸ்பெஷல் போர்டு வடிவமைக்க வேண்டும் :mrgreen:


  2. ஐயா,

    அருவருக்கத்தக்க இந்த பழக்கம் இன்று தமிழகத்தில் எல்லா ஊர்களிலும் புரையோடிப்போய் இருக்கிறது. புறம்போக்கு நிலங்கள் இன்று பன்றி பேயும் கழிசல் நிலங்களாக மருவிவிட்டன. காவிரிக்கரைகள் எங்கும் இதை நிலை. பெரும்பாலும் தண்ணீர் வராத காவிரியின் நதிக்குள்ளேயே இந்த அசிங்கம் நடக்கிறது. இந்த கொடுமையை தவிர்க்கவும் இதை மேம்படுத்தவும் சர்க்கார் ஒரு துரும்பையும் கிள்ளிக்கூட போடவில்லை. மனிதன் இன்று சாதாரண மனிதத்தன்மையையும் இழந்து மிருகத்தை விட கீழ்த்தரமாக நடந்துகொள்கிறான்.

    இதெல்லாம் நல்ல உண்மைகள்.

    ஆனால், இன்று தமிழ்நாட்டில் 60 சதத்துக்கும் மேம்பட்டோர் அடிப்படை கழிப்பிட வசதி இல்லாமல் வாழ்கிறார்கள். பலருக்குமே வாழ்விடமே கழிப்பிடங்கள்தாம். இருக்கும் ஓரிரண்டு பேருக்கு கட்டிய கழிப்பிடங்களும் இன்று பராமரிப்பில்லாமல் மிருகங்களும் பயந்துஓடும் வியாதிக்கூடங்களாக மாறிப்போயின. பல சமூக விரோதிகளின் கையில் பலப்பல கழிப்பிடங்கள் போய்விட்டன. சர்க்கார் காண்ட்ராக்ட் பணத்திற்காகவும் ஓட்டுக்காகவும் பல புது இடங்களை கணக்கில் காட்டினால், அவற்றை முறையாக பராமரிக்க நிதி ஒதுக்குவதில்லை. ஒரு அடிப்படை கழிப்பிட வசதி கூட சரியாக செய்ய முடியாத இந்தியாவை நாம் எப்போதுமே ஒரு நாகரீக வளர்ச்சியான நாடு என்று சொல்ல முடியாது.

    தங்கள் நல்ல பதிவுக்கு நன்றி. அழகாக சின்ன சின்ன துணுக்குச்செய்திகளை – யோசிக்க வைக்கும் முறையில் – கொடுக்கிறீர்கள்.

    நன்றி

    ஜயராமன்


  3. ஹரிஹரனுக்கும் ஜெயராமனுக்கும் வண்டி வண்டியாக நன்றிகள்!

    இரெயில்வே தொடர்பான எதைக் கண்டாலும் நம் மக்களுக்கு “பூப்பி” வந்துவிடுகிறது. வீட்டிலிருந்து கிளம்பி ஸ்டேஷனுக்கு வந்து பெட்டியில் நுழைந்தவுடன் முதல் வேலையாக லத்தி போடுகிறார்கள்! Ballast எனப்படும் ஜல்லிக் குவியல்தான் பல குடியிருப்புகளுக்கு பொதுக் கழிப்பிடம். இந்திய இரெயில்வே துறைக்கு human waste disposal என்பது ஒரு பெரிய பிரச்னை. இதைப்பற்றி துறை சார்ந்தவன் என்ற முறையில் பின்னர் விவரமாக எழுதுகிறேன்.

    ஹரிஹரன், “வீலிங் விடுவதை”ப் பற்றி சீக்கிறமே ஒரு படம் போடுவோம்! 🙂

    ஜெயராமன், கழிப்பிடங்கள் பற்றிய உங்கள் கருத்து சரியே. இவைகளினருகே நெருங்கவே பயமாக உள்ளது.

    நம் மக்கள் இரண்டடிக்கு இரண்டடி இடம் கிடைத்தல் “டபக்”கென்று உட்கார்ந்துவிடுகிறார்கள்! 😆

    எஸ்.கே


  4. 😐 thamil nattil mattum thaan entha nilamai indiavilea athigame erukku

Leave a Reply

Your email address will not be published.