வாரியாரின் மணிமொழிகள்

கிருபானந்த வாரியார்திருமுருக. கிருபானந்தவாரியார் அவர்கள் தன் “கலையறிவினாலும், அனுபவ அறிவினாலும் நுணுகி” எடுத்த “மணிமொழிகள்” (திருப்புகழமிர்தம் வெளியீடு-1968) கையேட்டிலிருந்து நான் தொகுத்துள்ள சில முத்துக்கள்:

  • இரவில் தூக்கம் வந்தாலொழியப் படுக்கையில் படுக்காதே. காலையில் விழிப்பு வந்தவுடன் எழுந்துவிடு. சோம்பலுடன் படுக்கையில் படுத்துப் புரளாதே.
  • பெண்களை ஆண்கள் காவல் புரிவதனால் பெண்மை தாழ்ந்ததன்று. வன்மை காவல் புரியும். வன்மைக்கு மென்மை அடங்கும்.
  • அறிவு, குடிப்பிறப்பு, அடக்கம், அளவறிந்து பேசுதல், கல்வி, ஆற்றல், தன் சக்திக்குத் தகுந்த தானம், நன்றியறிதல் — இந்த எட்டுக் குணங்களும் மனிதனை ஓங்க வைக்கின்றன.
    • பார்த்துக் கெட்டது பிள்ளை
    • பார்க்காது கெட்டது பயிர்
    • இட்டுக் கெட்டது காது
    • இடாது கெட்டது கண்
    • கேட்டுக் கெட்டது குடும்பம்
    • கேளாது கெட்டது கடன்
    • உண்டு கெட்டது வயிறு
    • உண்ணாது கெட்டது உறவு
    • கற்பிக்கப் பட்டவன் குருவைக் கவனிக்க மாட்டான்
    • திருமணம் ஆனவன் தாயைக் கவனிக்க மாட்டான்
    • ஆசையற்றவன் பெண்ணைக் கவனிக்க மாட்டான்
    • பயனை அடைந்தவன் உதவி செய்தவனைக் கவனிக்க மாட்டான்
    • கரையை அடைந்தவன் படகைக் கவனிக்க மாட்டான்
    • நோய் நீங்கியவன் மருத்துவனைக் கவனிக்க மாட்டான்
  • சிறியோர்தானே என்றெண்ணி ஒருவர் பகையையும் தேடிக் கொள்ளாதே
  • மூன்று பொருட்களை மிச்சம் வைக்காமல் அடியுடன் அழிக்கவேண்டும் — நெருப்பு, கடன், பகைவன்.
  • வாய்க் கொப்பளித்து ஒருபோதும் வலப்பக்கம் உமிழக் கூடாது
  • அன்னம், நெய், உப்பு மூன்றையும் கையால் படைக்கக் கூடாது.
  • சனி, செவ்வாய்க் கிழமைகளில் சவுளம் செய்து கொள்ளக் கூடாது
  • விநாயகருக்குத் துளசியும், சிவனுக்குத் தாழையும், பார்வதிக்கு நெல்லியும், சூரியனுக்கு அருகும், வைரவர்க்கு நந்தியாவர்த்தமும், திருமாலுக்கு அட்சதையும் சாத்தக் கூடாது.
  • கடும் வெயில், மயானப் புகை, தன்னைவிட வயதானவளைப் புணர்தல், தேங்கிய குட்டை நீர், இரவில் தயிரன்னம் – இந்த ஐந்தும் ஆயுளைக் குறைக்கும்.
  • மாலை வெயில், ஓமப் புகை, இளம் மனைவி, அருவி நீர், இரவில் பால் அன்னம் இவ்வைந்தும் ஆயுளைப் பெருக்கும்.
  • தன் கையால் படுக்கையை விரித்துக் கொள்வதும், தன் கையால் ஆசனப் பலகையிட்டுக் கொள்வதும், தன் கையால் அன்னம் படைத்துக் கொள்வதும், ஆக இம்மூன்றும் ஆயுளைக் குறைக்கும்.
  • நதி, குளம் முதலிய தீர்த்தங்களில் உடை உடுத்திக் கொண்டு முழுக வேண்டும். நீராடியபின் உடையை நீருள் பிழியக் கூடாது.
  • ஒற்றையாடையுடன் உணவு செய்யக் கூடாது.
  • இரு கைகளாலும் தண்ணீர் குடிக்கக் கூடாது.
  • கீழ்பால் நோக்கி யுண்போர்க்கு ஆயுள் வளரும்
    மேற்பால் நோக்கி யுண்போர்க்கு பொருள் சேரும்
    தென்பால் நோக்கி யுண்போர்க்கு புகழ் வளரும்
    வடபால் நோக்கி யுண்போர்க்கு நோய் வளரும்
  • இரவில் இஞ்சி, பாகற்காய், கஞ்சி, கட்டித் தயிர், இலைக் கறி, நெல்லிக்காய் – இவைகளை உண்ணக் கூடாது. உண்டால் இலட்சுமி கடாட்சம் நீங்கும்.
  • ஆண்கள் இடப்பக்கம் கீழிருக்கவும், பெண்கள் வலப்பக்கம் கீழிருக்கவும் ப்படுத்துறங்க வேண்டும்.

அருளின்பம் வாழி; உயிர்களெல்லாம் வாழி!

3 Comments


  1. அன்புள்ள நண்பா,
    அருமை!
    வாரியார் is really great!!


  2. Nice Post

Leave a Reply

Your email address will not be published.