வரப்போகிறது பெட்ரோலுக்கு உண்மையான மாற்று!

ஆம், அதுவும் ஒரு இந்தியர் மூலமாக!

நிலத்தடியிலிருந்து தோண்டி எடுக்கப்படும் பெட்ரோலியம் எண்ணைக்கு ஈடான ஒரு மாற்று எரிபொருளைத் தயாரித்து வழங்க இந்தியா உட்பட பல நாடுகள் வெகுகாலமாக முயன்று வருகின்றன. ஏன், அந்த எண்ணையையே தொடர்ந்து பயன்படுத்தினால் என்ன, அதன் மாற்றுக்கு என்ன அவசியம்? காரணங்களை ஆய்வோம்:-

 1. இன்றைய எரிபொருட்களான பெட்ரோல், டீசல், எரிவாயு எல்லாம் தோண்டத்தோண்ட சுரக்கும் கேணிபோன்ற நிலை கடந்து, “சரக்கு தீர்ந்தது அடுத்த கிணற்றைப் பார்” என்ற நிலைக்கு ஆளாகிக்கொண்டுள்ளன. ஆம் இந்த எரிபொருட்கள் வரண்டு போகக் கூடிய நிலை சீக்கிறமே ஏற்படும் அபாயம் உள்ளது
 2. இந்த எண்ணை உலகில் சில நாடுகளில் மட்டுமே அதிகமாகக் கிடைக்கிறது. ஆகையால் எரிபொருள் பற்றாக்குறையுள்ள இந்தியா போன்ற பல நாடுகள் தங்கள் வருமானத்தில் பெருமளவை பெட்ரோல் இறக்குமதியிலேயே செலவிட வேண்டியுள்ளது.
 3. இதுபோல் எண்ணைவளம் மிக்க உள்ள நாடுகள் அரசியல் மற்றும் மத உணர்வு தொடர்பான காரணங்களூக்காக திடீரென்று ஏற்றுமதியை குறைக்கலாம், அல்லது நிறுத்தியும் விடலாம். அப்போது இவர்களை நம்பியிருக்கும் இந்தியா போன்ற நாடுகளின் கதி என்ன!
 4. இந்த நாடுகளும், எண்ணை சுத்திகரிப்பு முதலான தொழிற்களில் பெருமளவு ஈடுபட்டுள்ள பெரும் நிறுவனங்களும் தங்கள் இஷ்டத்திற்கு விலையை ஏற்றிவிடலாம். அப்போது ஏழை நாடுகள் திவாலாக வேண்டிய நிலை ஏற்படும்.
 5. மேலும் எண்ணையை பயன்படுத்தி அரசியல் மற்றும் பொருளாதார ஆதாயங்களைக் கோரலாம். அல்லது நம் உள்நாட்டு விவகாரங்களில் மூக்கை நீட்டலாம்.
 6. முக்கியமாக, இந்த எண்ணை டாலர்கள் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கப் பய்னபடுவதை இப்போதெல்லாம் கண்கூடாகப் பாற்கிறோம்!

மேற்கூறிய காரணங்களால் இந்தியா போன்ற நாடுகள் எரிபொருள் சேமிப்பு மற்றும் மாற்று எரிபொருள் என்ற திசையில் கடந்த பல ஆண்டுகளாக ஆய்வுகளையும் வளர்ச்சியையும் ஊக்குவிப்பதோடு, அவற்றில் பயன்பாட்டையும் படிப்படியாக அதிகரித்து வருகின்றன.
மேலும் நீடித்த, சுற்றுச்சூழலைக் கெடுக்காத ஆற்றல் வளங்கள் பற்றிய ஆய்வுகளும் நடந்து வருகின்றன.

நாம் இம்முயற்சியில் இதுவரை கடந்து வந்துள்ள பாதை இது:-

 • சூரிய சக்தி
 • காற்றாடிகள்
 • தாவர எண்ணை – Bio-Diesel (காட்டாமணக்கு)
 • மெதனால்

ஆனால் இந்த விஷயத்தில் உள்ள ஒரு கசப்பான உண்மை என்னவென்றால், இத்தகைய மாற்று முயற்சிகள் ஓரளவுக்குத்தான் நம் எரிபொருள் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன. இன்னமும் உலகம் கச்சா எண்ணையை நோக்கி பிச்சைப் பாத்திரத்தை ஏந்திய வண்ணம்தான் இருக்கிறது!

இத்தகைய நிலையை முழுமையாக மாற்றியமைக்கும் விதமாக ஒரு புதுவித உத்தி மற்றும் பெரும் முதலீட்டுடன் கூடிய திட்டத்துடன் ஒரு அமேரிக்கா வாழ் இந்தியர் கோதாவில் இறங்கியிருக்கிறார்!

விநோத் கோஸ்லாஅவர் பெயர்தான் விநோத் கோஸ்லா! அவர் அடிப்படையில் கணினி மென்பொருள்துறைப் பொறியாளர். சிலிகான் வேல்லி என்றழைக்கப்படும் மென்பொருள் வளாகத்தில் குறிப்பிடத்தக்க முதலாளியாவார். சுமார் 76 மில்லியன் டாலர் முதலீட்டுடன் அவர் தொடங்கியுள்ள “ரேஞ்ச் ஃப்யூயல்ஸ்” (Range Fuels) என்னும் நிறுவனம் இத்துறையில் ஒரு புரட்சிகரமான முயற்சியிலிறங்கியுள்ளது.

அவர்கள் நிறுவத் தொடங்கியுள்ள தொழிற்சாலையில் நகரசபை திரட்டும் வீட்டுக் கழிவுகள், சோளத் தட்டை மற்றும் அறுவடை செய்யப்பட்ட பின் விழும் வேண்டாத பாகங்கள், மரத்தூள், வேண்டாத பேப்பர் துண்டுகள், சாணம் போன்ற கழிவுப் பொருட்களைக் கொண்டு “எதனால்” என்னும் எரிபொருளை பெருமளவில் உற்பத்தி செய்ய இருக்கிறார்கள்.Range Fuels இந்தத் தொழிலகங்கள் அமேரிக்காவின் ஜியார்ஜியா மாநிலத்தில் நிறுவியிருக்கிறார்கள். ஆண்டுக்கு 100 மில்லியன் காலன்கள் என்ற அளவில் உற்பத்தி இருக்கும். இதில் பெருமளவு ஏற்றுமதியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மரத்தூள்

வருங்காலத்தில் இந்த முயற்சி பன்மடங்கு பெருகி, பெட்ரொல் என்னும் கைவிலங்கிலிருந்து இவ்வுலகம் மீளும் நாளை எதிர்நோக்குவோமாக!

2 Comments


 1. போன வாரம் தினகரன் செய்தித்தாளில்
  ஒரு செய்தி தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர்
  காற்றினால் ஓடக்கூடிய இஞ்சின் ஒன்றை உருவக்கியுருக்கார்
  வாகனங்கள் ( லாரி பஸ் )போன்றவை ஓட்டலாம்
  இதற்க்கு இந்திய பேடன்ட் வங்கியுருக்கார்
  என்னா இவர் இதை தொழிலாக தொடங்க
  இவர் பணக்காரர் இல்லை


 2. நன்றி, வளர்!

  அச்செய்தி இணையத்தில் கிட்டுமானால், தாங்கள் தயைசெய்து அதன் இணப்பை இங்கு பதியுங்கள்.

  எஸ்.கே

Leave a Reply

Your email address will not be published.