நான் அவனில்லை!

இது ஒரு அவசரப் பதிவு.

கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக எந்த தமிழ் வலைப்பதிவுகள் மற்றும் வலைத்தளங்கள் பக்கமும் நான் செல்லவில்லை – தமிழ்மணம், தமிழோவியம் உட்பட. வேலை நிமித்தமாக பல ஊர்களுக்குச் சென்று கொண்டிருப்பதால். என் பெட்டிக்கடையும் மூடித்தான் கிடக்கிறது.

இந்நிலையில் இன்றுகாலை என் நண்பர் ஒருவர் ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார் – என் பெயரில் பலருடைய பதிவுகளில் நிறைய பின்னூட்டங்கள் இடப்பட்டிருக்கின்றன என்றும் அவை என்னால்தான் எழுதப்பட்டன என்று பல அன்பர்கள் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள் என்றும். நான் இன்னும் அவற்றை வாசிக்கவில்லை. இந்த சிற்றூரிலிருக்கும் கணினி மையத்தில் தமிழ் பார்க்க வசதியில்லை. அவை எவ்வளவு மோசமாக எழுதப்பட்டிருக்கின்றன என்று தெரியவில்லை.

“தமிழா” மூலம் சுற்றி வளைத்து இதனை எழுதுகிறேன்.

இதனால் சகலவிதமான வலைப்பதிவாளர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால்:

1. சமீபத்தில் முகமூடி, அருண், குழலி மற்றும் பலருடைய வலைப்பூக்களில் “எஸ்கே”, “SK” போன்ற பெயர்களில் இடப்பட்டுள்ள எந்த பின்னூட்டமும் நான் எழுதியதல்ல.

2. நான் வலைப் பதிவுகளில் கருத்து எழுதி ஒரு மாமாங்கம் ஆகிவிட்டது. அதற்கு முன்புகூட ஏதோ ஓறிரு முறைகள்தான் எழுதியுள்ளேன். ஆனால் என் பெயரில், என் முழு விலாசத்துடன், வலை உரலுடன் தான் எழுதுவேன்.

3. இப்போது “எஸ்கே” என்ற பெயரில் எழுதும் நபர் அந்த பெயரில் எழுதும் இன்னொருவராக இருக்கலாம். அல்லது வேண்டுமென்றே என் பெயரை கெட்ட எண்ணத்துடன் பயன்படுத்தும் மன நோயாளியாக இருக்கலாம்.

4. ஆனால் நான் அவனி(ரி)ல்லை.

5. இன்னும் ஒரு வாரம் சென்றபின் எல்லாவற்றையும் படித்துவிட்டு மேற்கொண்டு மறுப்புரைகள் தேவையெனில் எழுதுகிறேன்.

என் கவலையெல்லாம் ஒன்றுதான்.

இந்த தமிழ் வலைப்பதிவு சான்ற உலகத்தில் பல நல்ல உள்ளங்களை இணையம் மூலம் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியுள்ளது. அந்த நட்பை நான் மிகவும் போற்றுகிறேன். அவர்கள் இத்தகைய பின்னூட்டங்களைப் படித்துவிட்டு என்மேன் தப்பயிப்பிராயங்கள் கொள்ளாமலிருக்க வேண்டுமே என்பதுதான்.

நன்றி.

எஸ்.கே (கிச்சு)