சூப்பர்மேன்!

முன்பு கென்னடி அமெரிக்க அதிபராக இருந்தபோது மர்லின் மன்றோ உட்பட பல நூற்றுக்கணக்கான பெண்கள் அவருடன் உறவு வைத்திருந்ததாக செய்தி வெளியிட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது ஒருவர் சொன்னார், இவை எல்லாமே உண்மையாக இருந்திருந்தால் கென்னடிக்கு ஒரு காப்பி கோப்பையைத் தூக்கக் கூட சக்தி மிஞ்சியிருந்திருக்காது என்று! (அதனால்தான் மோனிகாவோட நிறுத்திக்கிட்டாரோ அவருடைய மானசீக சிஷ்யர் கிலிண்டன்?)

ஆனால் கென்னடிபோல் ஒரு romantic ஆசாமியாக இல்லாவிட்டாலும் இப்போது போலீசார்களாலும் , பத்திரிக்கை மற்றும் ஊடகங்களாலும் பல பெண்களுடன் பலவிதத்தொடர்புகள் வைத்திருந்ததாக ஜயேந்திரர் சித்தரிக்கப் படுகிறார்! இந்தப் பெண்கள் பல ஊர்கள் மற்றும் பின்னணியிலிருந்து, பலவித சைஸ், ஷேப்புக்களில் வந்து பேட்டி தருகிறார்கள். வற்றாத ஊற்றாக தொடர் குற்றச்சாட்டுக்கள் பெருகிய வன்ணம் இருக்கின்றன. முதலில் ஸ்ரீரங்கம் உஷா, பின் அனுராதா, இப்போது ஜூ.வி அடுக்கும் பெயர்களான விஜயா, வனஜா, சரோஜா, மைதிலி, ஜெய லட்சுமி (இது வேறொருவராம்!! இன்று எஸ்.எம்.எஸ்ஸில் வந்த கொஞ்சம் “விழுப்பு” ஜோக்:-
‘What is the difference between Jeyendirar and Jeyalakshmi?’
‘Jeyendirar is in police custody. But police is in Jayalakshmi’s custody!) இப்படிப் பல பெயர்கள் சுடச்சுட பரிமாறப்படுகின்றன.

ஜெயேந்திரரை அவற்றில் முடிச்சுப் போட்டு சில மஞ்சள் பத்திரிக்கைகள் தம் விற்பனையைப் பெருக்குவதற்காக அடிக்கும் கூத்தைப் பார்த்தால் கி.பி முதல் நூற்றாண்டிலிருந்து காஞ்சீபுரம் சம்பந்தப்பட்ட எல்லா சாவுகள் (கொசு, தவளை, கரப்பான் பூச்சி, மரவட்டை உட்பட) மற்றும் பெண்கள் சம்பந்தப் பட்ட எல்லா நிகழ்ச்சிகளுக்கும் அவர்தான் காரணம் என்பார்கள் போலிருக்கிறது!

ஆனால் இவை ஓவராகப் போகும்போது மக்களுக்கும் ஒரு சலிப்பு உண்டாகி ஜெயேந்திரரை செத்த பாம்பை அடிப்பதுபோல் செய்கிறார்கள் என்ற எண்ணம் ஏற்படுவது நிச்சயம்.

சரி. இந்த episode-ஐ வேறொரு கண்ணோட்டத்தில் பார்ப்போம்:-

தான் எடுத்துக் கொண்ட பொறுப்பின்பால் விதிக்கப் பட்ட தர்மத்திலிருந்தும் செயற்பாட்டிலிருந்தும் விலகி ஒரு மூன்றாம் நிலை அரசியல்வாதி போல் நடந்து கொண்ட ஜயேந்திரர் இது போன்றதொரு அனுபவத்தை எதிர்கொள்வது தவிர்க்க முடியாததுதான். ஒரு ஆன்மீக மடத்தின் பொருப்பாளராக இல்லாமல் ஒரு power broker and fixer – ஆக அவர் செயல்பட்டதை அனைவரும் அறிவர். அதனால் அவர் இப்போது அனுபவிப்பது அதன் நீட்சி என்றே கொள்ளலாம்.

ஆனால் இரண்டு விதமான குழுவினருக்கு ஜயேந்திரர் தீராத பழியையும் அவமானத்தையும் ஏற்படுத்தி விட்டார்:-

ஒன்று, அவர் சார்ந்துள்ள காஞ்சி காமகோடி பீடம். பல நூற்றாண்டுகளாக ஆன்மீகத்துக்கும், சமூகத்துக்கும் தொண்டுகள் பல செய்து உன்னத நிலையில் எல்லோராலும் போற்றப் பட்டு வந்த அந்த மடம் இன்றைக்கு பலவித scandal களின் பிறப்பிடமாக ஆகிவிட்டது. சங்கர மடங்கள் இந்தியாவில் பல இடங்களில் இருந்தாலும், அவை தாங்கள்தான் “அசல், ஒரிஜினல்” “அக்மார்க்” என்று சொல்லிக் கொண்டாலும், சேவை அடிப்படையில் செயல்பட்டு மக்களுக்கு வெளிப்படையாக அடையாளம் தெரிந்த மடம் காஞ்சியே. இது ஜெயேந்திரர் காலத்துக்கு முன்னமையே உள்ள நிலை. பிரயாகை, காசி முதலிய தலங்களுக்குச் சென்றால் காஞ்சி மடத்தின் சத்திரங்கள்தான் முதன்மையாக இருக்கின்றன. வேதம் பற்றிய அறிவின் வளர்ச்சி, நாம சங்கீர்த்தனம், ஏழைகள் பால் பரிவு போன்றவை அந்த மடத்தின் அடிப்படை கோட்பாடுகளாக இருந்திருக்கின்றன. இப்போது ஒரு “தாதா” ரேஞ்சுக்கு வெளிக்காட்டப்படும் அந்த மசாலா மடாதிபதி காலத்தில்தான் பாதை விலகி, ஒரு don’s den போலாகிவிட்டது

இரண்டாவதாக, காஞ்சி மடம் ஒரு பிராமணர்களின் கூடாரமாகத்தான் (அது சரியோ, தவறோ) பொதுவாக பிராமணரல்லாதவர்களால் அடையாளம் காணப்படுகிறது. அதற்குக் காரணம் அங்குள்ள நடை முறைகளும், மடாதிபதிகள் வெளியிட்ட கருத்துக்களும்தான். அங்கு வந்து போகிறவர்கள் பல தரப்பட்டவர்களாக இருந்தாலும் ஒரு brahminic slant அங்கு இருப்பதை யாரும் மறுக்க முடியாது. இது மக்கள் மத்தியில் ஒரு sore point-ஆக தொடர்ந்து அடித்தளத்தில் கனன்று கொண்டிருக்கின்றது. அவ்வாறு எண்ணுகிறவர்கள் எல்லோருமே பிராமண (“பார்ப்பன”, to be semantically correct! ) எதிர்ப்பாளர்கள் கிடையாது. இப்போது அந்த மடாதிபதி கொலைக் குற்றம் சாட்டப் பட்டு ஒரு கைதியாக சிறையிலிருக்கும் நிலையில், மற்றும் அவருடைய அடிப்படை தனிமனித நடத்தையும் ஒழுக்கமும் கேள்விக்குறியாக இருக்கும் நேரத்தில், அவர்கள் மனத்தில், “இதற்கா இத்தனைநாள் இவ்வளவு ஆர்பபாட்டம், எந்த விதத்தில் இந்த சமூகத்தினர் உயர்ந்தவர்கள்?” என்பது போன்ற “உரத்த சிந்தனைகள்” வெளிப்படுகின்றன. இவை பல வலைப் பதிவுகளிலும் குழுமங்களிலும் நேரிடையாகவோ, பல சொல் விளையாட்டுக்கள் மூலமாகவோ கைவலிக்க தீட்டப் படுகின்றன. “அவாள்’, “இவாள்” போன்ற oblique references மூலம் சிலர் தங்கள் ரத்தத்தில் எப்போதும் ஊரல் போட்டு வைத்திருக்கும் துவேஷத்தை வெளிப்படுத்தியிருகிறார்கள். இவர்களுக்கு இது நல்ல அறுவடைக் காலம்! சென்னையில் பல பேருந்துகளில் கீழ்த்தரமான கொச்சை வார்த்தைகளைக் கொண்ட போஸ்டர்களின் மூலம் “ஆரிய நாய்கள்” திட்டித் தீர்க்கப் பட்டன. ஒரு போஸ்டரில் திரு. அத்வானி ஒரு “பார்ப்பன தீவிரவாதி” என்று அழைக்கப் பட்டிருந்ததுதான் வேடிக்கை!

ஆனால் சில நடுநிலையாளர்களின் கருத்துக்களைப் படிக்கும்போது ஜெயேந்திரர் இந்த பிராமண சமூகத்தின் தன்மானத்துக்கும் பெருத்த பாதகம் இழைத்து விட்டார் என்பது திண்ணம். பிராமணர்களில் மிகச் சொல்பமான பகுதியினர்தான் இந்த மடத்தை விடாப்பிடியாகப் பிடித்துக் கோண்டு தொங்குவார்கள். Tam-Bram – மில் ஸ்மார்த்தர்கள், அதிலும் தமக்கும் இறைவனுக்கும் இடையே “இடைத் தரகு” தேவையில்லை என்ற கொள்கையுள்ளவர்களைத் தவிர்த்து மீதமுள்ளவர்கள் – இவர்களில் symbolic-காக திருமண அழைப்பிதழில் “காஞ்சி காமகோடி பீடத்தின் அநுக்கிரஹத்தை முன்னிட்டு” என்று சம்பிரதாயத்துக்கு போட்டு விட்டு பிறகு மறந்து விடுபவர்கள் போக, மீதமுள்ள சிலரில் பரம்பரையாக “முத்திராதிகாரிகள்” போன்ற முறைகளில் மடத்துடன் தொடர்பு கொண்டவர்கள்தான் இதன் hard core supporters. ஆனால் இப்போது ஏற்பட்டுள்ள அவமானமும் ஏளனமும் ஒட்டுமொத்த பிராமண சமூகத்தையும் பாதித்துள்ளது. பெருத்த தலைகுனிவையும் ஏற்படுத்தியுள்ளது. அவர் பிராமணர்களுக்கு பொதுவான முறையில் ஏதாவது செய்தாரோ இல்லையோ, நாளடைவில் மக்களால் மறக்கப் பட்டிருந்த பிராமணர்பால் உள்ள கசப்பு இப்போது மீண்டும் தலை தூக்குவதற்கு இவர் காரணமாகி விட்டார்.

இராமகிருஷ்ணா இயக்கத்தினர், மடத்தையும், “மிஷணை”யும் தனித்தனி நிர்வாக அமைப்புக்களாகப் பிரித்துள்ளனர். மடம் ஆன்மீகம் சார்ந்த பொறுப்புக்களையும், மிஷண் ஒரு தொண்டு நிறுவனமாகவும் செயல்படுகின்றன. அது போல் “ஜன கல்யாண்” போன்றவற்றை இவர் மடத்தின் அப்பாற்பட்டு செய்திருக்கலாம். மடத்தை அதன் போக்கில் விட்டு விட்டு அந்த அமைப்பின் தலைவராக மட்டும் அவர் இருந்திருக்கலாம்.

இப்போது trial by the media தான் நடந்து கொண்டிருக்கிறது. புலன் விசாரணை முடிந்து நீதி மன்றத்தின் வழக்கு விசாரணையிலாவது உண்மைகள் வெளி வந்தால் சரி!

4 Comments


  1. A well balanced opinion on what is going on. Some people who are just keeping their blogs to spew venom on Bhramins are having their great time now.

    Regards
    Rajan


  2. நடுநிலைத் தவறாத பதிவுக்குப் பாராட்டுகள்.
    அன்புடன்,
    டோண்டு

Comments are closed.