சுட்டுவிரல் மை உங்களுக்கு உண்டா?

தமிழ்நாடு அரசின் தேர்தல் துறை வாக்காளர் பட்டியலை இணையத்தில் வெளியிட்டிருக்கிறது. அதனை இந்தப் பக்கத்தில் கண்டு, உங்கள் பெயர் இருக்கிறதா என்று உறுதிசெய்து கொள்ளலாம். உங்கள் பெயர், தொகுதி இவற்றை இட்டு தேடுவதற்கு வசதி செய்து கொடுத்திருக்கிறார்கள். தீநரியில் தமிழ் எழுத்துறுக்கள் பதிவது சிறிது கடினமாக இருக்கிறது. I.E-ஐ பாவிப்பது நல்லது.

உங்கள் பெயர் விட்டுப் போயிருந்தால் நேரடியாக இணையத்திலேயே பதிவு செய்ய இலகுவாக ஒரு விண்ணப்பப் படிவமும் உள்ளது.

அப்பாடி. என் பெயர் இருக்கிறது! ஆனால் வாக்குச் சாவடிக்குச் சென்று “கைமேல் வை மை” எனும்போது கையை விரித்துவிட்டார்களென்றால்? ஆரவாரமில்லாமல் அகத்துக்கு மீண்டு, அட்டணங்கால் போட்டு அமர்வதைத் தவிர வேறுவழி?