சிறுவர்கள் ஜாக்கிரதை!

வெற்றிக்கொடிகட்டுஇரயில் பயணங்களில் சில சிறுவர்கள் ஒரே இடத்தில் போரடித்துக்கொண்டு உட்காராமல் பெட்டிக்குப் பெட்டி இணைப்புக் கூண்டு (vestibule) வழியே தாண்டிக் கொண்டிருப்பார்கள். அதில் அவர்களுக்கு ஒரு த்ரில்! அதுபோல் தாவித்தாவி ஓடிக்கொண்டிருக்கும் சிறுவர்கள் சில சமயம் நம் எதிரில் வந்து மோதிக்கொள்வதுண்டு. அதன் எதிர்வினை பெரும்பாலும் “பாத்துப் போங்கப்பா”, “ஏய், விழுந்தூடப்போற”, “பைய, பைய” போன்றவையாக இருக்கும். இன்னும் சிலர் கோபமாக முறைப்பதும் உண்டு. ஆனால் அந்தச் சிறுவர்கள் சிரித்துவிட்டுச் செல்வார்கள்; அல்லது தங்களுக்குள் நமக்கு ஒரு பெயர் வைத்து ஜோக்கடித்துக்கொண்டே செல்வார்கள்.

அதுபோன்ற தருணங்களில் நான் பெரும்பாலும் அவர்களைப் பார்த்து ஒரு சிரிப்பை சிந்திவிட்டு, ஏதாவது கடி ஜோக்கையோ, சொல் விளையாட்டையோ, யுக்தியான வினாக்களையோ சொல்லிவிட்டு உடனே கழண்டிவிடுவேன் (அவர்களாகக் கழளுவதற்கு முன்னால்!) 🙂

சமீபத்தில் அமேரிக்காவில் ஒரு நண்பர் வீட்டுத் திருமண வரவேற்புக்குச் சென்றிருந்தபோது கும்பலாக வந்த சிறுவர், சிறுமியர்களிடம் பேசிச் சிறித்துக்கொண்டிருந்தபோது ஒரு பையனின் பெற்றோர் வந்து அவனை அழைத்துச் சென்றனர். ஆனால் அப்போது அந்தப் பையனின் தாய் என்னைப் பார்த்த பார்வை என் மனத்தில் சுட்டது. “ஒரு மாதிரியாக” என்பார்களே அதுபோல் என்னை நோக்கி “frown in consternation” ஒன்றை வீசிவிட்டுச் சென்றார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. பிறகு என் மூடும் மாறிவிட்டது. ஒன்றும் பேசாமல் என் “ஐபாடை” வெளியில் எடுத்து காதில் மாட்டிக் கொண்டு மூலையில் அமர்ந்துவிட்டேன்.

ஓரிரெண்டு நாட்களுக்குப்பின் எங்கள் வீட்டிற்கு வந்த சிலர் மூன்று கையேடுகளைக் கொடுத்துவிட்டுச் சென்றனர். அதில் இளம் சிறுவர்களை பாலியல் கொடுமைகளுக்கு உட்படுத்தும் பாதகச் செயல் பெருகிவிட்ட விவரங்களையும், அத்தகைய நிகழ்வுகளிடமிருந்து குழந்தைகளைக் காக்கும் முறைகள் பற்றியும் எழுதியிருந்தது.

அமேரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் இத்தகைய கொடுமைகள் மிக அதிகமாக நடக்க்கின்றன. இந்தியா பொன்ற ஆசிய நாடுகளிலும் நிகழ்ந்தாலும், வெளிவராமலிருக்கலாம். ஆனால் அமேரிக்காவில் பல கிறிஸ்தவ மத குருமார்கள் இதுபோல் சிறார்களை பாலியல் கொடுமைக்கு உட்படுத்தியதும், அதனால் அவர்கள் சார்ந்த மத அமைப்புக்கள் பெருந்தொகைகளை நஷ்ட ஈடாகக் கொடுக்க நேர்வதும் ஊடகங்களில் வெளிவந்து அனைவரும் அறிந்த செய்தி. அங்கு இதுபோன்ற தவறிழைக்கும் பாதிரிகளால் ஏற்படும் இழப்புக்கள் அநேகம். “டைம்ஸ்” இதழ் செய்தியின்படி 2005 ஆண்டுவரையிலேயே சுமார் 4,000 பாதிரியார்கள் இத்தகைய கொடுஞ்செயல் புரிந்ததாக அடையாளம் காணப்பட்டு, அவற்றினால் ஏற்பட்ட நீதிமன்ற சிலவினால் சுமார் 800 மில்லியன் டாலர்கள் நஷ்டம் ஏற்பட்டு பல மாதாகோயில்கள் மூடப்படவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது என்பது தெரிகிறது. ஒரு யாஹூ செய்தித் தொகுப்பு அளிக்கும் தரவுகளின்படிப் பார்த்தால் அவர்கள் கொடுத்துள்ள நஷ்ட ஈட்டுத்துகையே “மில்லியன்” அளவுகளைத்தாண்டி “பில்லியனு”க்குச் செல்லும்போல் தோன்றுகிறது!

இதுபோன்ற கொடுமைகளுக்கு ஆட்படுத்தப்பட்டதாக அறியப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையே ஒரு இலட்சத்த் தாண்டும் என மதிப்பிட்டிருக்கிறார்கள்.

இத்தகைய கொடுமைகள் பல இலைமறை காய்மறையாக பல சமூகங்களீல் குடும்ப சூழலிலும் நிகழ்வது மக்களுக்குத் தெரியவருவதால், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் பிறருடன் நெருங்கிப் பழகும்போது மிகக் கவனத்துடன் கண்காணிக்கிறார்கள். இதன் அவசியத்தை நானும் மக்கள் மெய்தீண்டல்” என்னும் கட்டுரை மூலம் வலியுறுத்தியிருக்கிறேன்.

ஆகையால் தோழர்களே, சிறு குழந்தைகளைக் கண்டால் ஓடுங்கள் காத தூரம். இல்லையெனில் உங்களையும் “பிள்ளை கெடுப்பவன்” லிஸ்டில் சேர்த்துவிடுவார்கள்!

1 Comment


  1. பயமுறுத்தாதீங்க சார் ! 😳

Leave a Reply

Your email address will not be published.