களைகிறது பெரியாரிச மாயை!

ஆம், ஏமாந்தது போதும்!. தமிழர்களின் இன உணர்ச்சிகளை எழுப்பி அதனில் குளிர்காய்ந்துகொண்டு, ஒட்டுமொத்த தமிழினம், குறிப்பாக தலித் இன மக்கள் முன்னேற்றத்திற்காக ஏதும் செய்யாமல், வெறும் ஓட்டு மேய்பவர்களாக, பதவி மோகமும், பணப்பேயும் பிடித்து ஆடி, தன் குடும்பத்தை மட்டுமே முன்னேற்றம் செய்துகொண்டிருக்கும் இத்தகைய “தீரா-விட” அரசியல்வாதிகளின் தந்திரத்தை தமிழின மக்கள் தெள்ளிதில் அறிந்துகொண்டு விட்டனர். இனிமேலும் திராவிட மாயையில் சிக்கி் பதவி என்ற பல்லக்கு தூகக அவர்கள் தயாரில்லை!!

இதோ தரவுகள். ஆழ்ந்து படித்து கருத்துக்களை உள்வாங்குங்கள், தமிழர்களே. இன விரோதிகளை அடையாளம் கண்டுகொள்ளுங்கள். தேர்தல் காலங்களின் பலவிதமாக அரிதாரம் பூசிக்கொண்டு உங்கள் ஓட்டுக்களுக்கு வலைவீசும் இத்தகைய சந்தர்ப்பவாதிகளை ஆதரிக்காதீர்கள்!

  • “பெரியார் ஒரு தமிழ் இன விரோதி” என்பதை ஐயத்துக்கு இடமின்றி பல ஆதாரங்களுடன் நிரூபிக்கிறார், “குருவிகள்” என்னும் புனைப் பெயரில் எழுதும் ஈழத்துத் தமிழர், தன் “தேடற்சரம்” வலைப் பதிவின் மூலம்.
  • “தமிழக தலித்களின் குடிகெடுத்த பெரியார்” என்று அறைகூவி பெரியாரிசத்துக்கு ஒரு பெரிய “ஆப்பு” ஒன்றை அடித்திருக்கிறார், நாடறிந்த தலித் தலைவரும், சிறந்த சிந்தனாவாதியுமான சந்திரபான் பிரசாத் அவர்கள், தன் ஆங்கிலக் கட்டுரையில். அதனை தமிழாக்கம் செய்து தன் வலைப்பதிவில் இட்டிருக்கிறார் ஜாடாயு அவர்கள். தமிழர் ஒவ்வொருவரும் அவசியம் படிக்கவேண்டிய கட்டுரை இது!
  • சந்திப்பு என்னும் வலைப் பதிவர்” இத்தகைய “தீரா-விட” சக்திகளின் செயல்பாடுகளை எப்படி விளக்கியிருக்கிறார் பாருங்கள்:-

    பெரியாரின் சமகாலத்தில் தஞ்சையில் நேரடி களத்தில் நின்று தலித் மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து “சாணிப்பால் குடிக்காதே! சாட்டையடி அடிக்காதே! அடித்தால் திருப்பியடி, செருப்பை போட்டு நட!”, என நிலப்பிரபுக்களின் மிரட்டலுக்கும், கொலை வெறிக்கும் அஞ்சாமல் எதிர்த்து நின்றவர்கள் கம்யூனிஸ்ட்டுகள். பி. சீனிவாசராவ் அதன் தளகர்த்தர் – இவரும் ஒரு கர்நாடக பிராமணர்தான். ஆனால் எந்தக் கட்டத்திலும் நிலப்பிரக்களோடு சமரசம் செய்துக் கொண்டவர் இல்லை! ஏன்? பெரியார் உட்பட, திராவிட இயக்கத்தவர்கள் இதுபோன்ற நேரடி களப்போராட்டத்தில் ஈடுபட்டு அடி உதை பட்டதுண்டா? வரலாறு இருக்கிறதா?

    அண்ணாதுரை ஆட்சியின்போதுதானே கீழ்வெண்மணியில் 48 தலித் மக்கள் உயிர் பறிக்கப்பட்டது! ஏன், சமீபத்தில் திருநெல்வேலியில் மாஞ்சோலை தலித் தொழிலாளர்களை ஓட ஓட விரட்டி 18 பேரை கொலை செய்தது யாருடைய ஆட்சி! திராவிடத் தலைவர்களின் ஆட்சியில் தலித்துக்கள் தலை நிமர்ந்து விட்டனரா?

  • திராவிட மாயை என்பது ஒரு “விஷச் செடி” என்று துகிலுறித்துக் காட்டுகிறார், தரன் அவர்கள் தன் வலைப் பதிவில்.
  • “திண்ணை” இணைய இதழில் மலர் மன்னன் அவர்கள் வடித்துள்ள இந்தக் கட்டுரை வரலாற்று ஆய்வுடன் நமக்கு இந்த திராவிட அவலத்தை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.
  • ம. வெங்கடேசன் என்னும் தலித் அன்பர் தாம் எழுதிய “ஈ வெ ராமசாமி நாயக்கரின் மறுபக்கம்” என்னும் நூலில் ஈவேராவின் மூடி மறைக்கப்பட்ட பக்கங்களை முழுமையாக வெளிச்சத்துக்கு கொண்டுவந்திருக்கிறார். ஈவேரா முரண்பாடுகளின் மொத்த உருவம் என்பதையும், தமிழ் வெறுப்பு என்னும் விஷம் அவர் மனத்தில் பிராமண வெறுப்பைவிட இன்னும் ஆழமாக வேரூறி நின்றது என்பதையும், வேறு பல அரிய தகவல்களையும் தொகுத்து அந்த நூலில் எழுதியுள்ளார். தமிழர் அனைவரும் வாசித்து தன் மனத்திரையை விலக்கவேண்டும் என்பதற்காக இந்த அறியதொரு சேவையை தன் தாய்நாட்டுக்கு அர்ப்பணித்திருக்கிறார் வெங்கடேசன் அவர்கள். இந்த மகத்தான வரலாற்று ஆவணத்தின் சில பகுதிகளை “திண்ணை” வலை இதழில் கட்டுரைகளாக வரைத்திருக்கிறார், “விஸ்வாமித்ரா” அவர்கள். அதனையும் அதன் எதிர்வினைகளையும், துணைக் கட்டுரைகளையும் இந்த சுட்டியில் காணலாம்.
  • ஈவேராவும், அவரது கூட்டாளிகளும் தலித் இன எழுத்தாளர்களையும், அவர்கள் தொடங்கிய பத்திரிக்கைகளையும் எவ்வாறு இருட்டடிப்பு செய்தனர் என்பதையும், உண்மைகளை எவ்வாறு திரிபு செய்தனர் என்பதையும் சிறப்பாக விளக்கியிருக்கிறார், ஸ்டாலின் ராஜாங்கம் அவர்கள், தன் “காலச்சுவடு” கட்டுரையில்.

தமிழர்களே, உங்கள் எதிரிகளை இனம் கண்டுகொள்ளுங்கள். தலித்துக்கள் நம்மைச் சேர்ந்தவர்கள். அவர்களை அரவணையுங்கள். அவர்களுக்கு முனைப்புடன் உதவுங்கள். இந்திய இறையாண்மைக்கு எதிராக செயலாற்றும் இயக்கங்களுக்குத் துணைபோகாதீர்கள்.

வாழ்க தமிழினம்! வாழ்க பாரதம்!!

3 Comments


  1. திரு கிச்சு அவர்களுக்கு கணேசன் எழுதிக்கொள்வது:
    இந்த ’வெப்லோ்கு’ எழுதுவதில் நீர் தமிழ் மொழிக்கு செய்யும் சேவய்க்கு அதிரே இல்லை! இனியும் இந்த தமிழ் மக்களுக்கு மஹிமை கொள்ளும் செய்தியை நிறவேற்ற ஆண்டவன் கிருபை இருக்க் வேண்டிக்கொண்டு

    அன்புடன்,
    க்ணேசன்


  2. எஸ்.கே அய்யா,

    நல்ல பதிவு. எல்லா ஆதிக்க வன்முறை கோட்பாடுகளைப்போல பெரியாரிச கருத்துக்களும் காலச்சுவடுகளால் கழித்துக்கட்டப்படும். இவை ஏற்கனவே திராவிட பெரும்பான்மை மக்களால் இனம் கண்டுகொள்ளப்பட்டு ஓரங்கட்டப்பட்டுவிட்டன. காழ்ப்புணர்ச்சியை மட்டுமே ஆதாரமாக கொண்டு ஏற்படுத்திய அந்த முன்னுக்குமுரணான கலாசாரத்துக்கு ஒவ்வாத கருத்துக்கள் இன்று ஒரு எக்ஸ்ட்ரீம் வக்கிரர்களால் மட்டுமே வழிமொழிகின்றன. அரசியல் சுயலாபங்களுக்காக ஒரு சில ஏமாற்றுக்கூட்டங்களால் மட்டுமே இந்த கருத்துக்கள் இன்று – செத்த கன்றுக்குட்டியின் பதமிட்ட தோலை கம்புக்கால் கொடுத்து ஏமாந்த பசுவிடம் பால் கறப்பது போல – சில ஓட்டுப்பொறுக்கிளால் உபயோகிப்படுகின்றன. அதுவும் ஒழிந்துபோகும் நாள் அதிக தூரமில்லை. தலித்துக்களின் எழுச்சியில் இந்த பெரியாரிசம் தீர்ந்துபோகும்.

    நன்றி

    ஜயராமன்


  3. Very good post.

Leave a Reply

Your email address will not be published.