எங்கும் எதிலும் சீனா!

அமேரிக்காவில் எதைத் தொட்டாலும் “இது சீனாவில் செய்யப்பட்டது” என்று பறை சாற்றும் வாசகத்தைக் காணலாம். சென்ற ஆண்டு மட்டும் செஞ்சீனா சுமார் 300 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை உற்பத்தி செய்து அமேரிக்காவுக்கு (U.S) ஏற்றுமதி செய்திருக்கிறது! ஆனால் சீனா அமேரிகாவிலிருந்து பெற்ற வணிக மதிப்பு சுமார் 60 பில்லியன் டாலர் மட்டுமே!

ஆனால் உலகம் முழுவதும் உற்பத்தி செய்யப்படும் அனைத்துப் பொருட்களின் மதிப்புப்படிப் பார்த்தால், 21% அமேரிகாவில்தான் தயாரிக்கப்படுகிறது சீனாவின் பங்கு 8% தான்!

அமேரிக்க மண்ணில் தயாராகும் பொருட்களில் சில:

விமானம் கார் ஆயத்த ஆடைசீஸ் மதுபானம்கோழி தபால் தலை பத்திரிக்கை பற்பசை அந்தரங்கம் மின்னியந்திரம் வேதியல் மருந்து எஃகு

நன்றி : “ஃபோர்ப்ஸ்” வலைத்தளம்.

3 Comments


 1. ஐயா,

  ஒரு தேசத்தின் முன்னேற்றம் அதன் உற்பத்தியை சார்ந்தது. அமெரிக்கர்கள் தங்களை ஒரு நுகர்வோர் என்று மட்டுமே உணர்ந்து சகட்டுமேனிக்கு உலகத்தின் பல மூலைகளிலிருந்து சல்லிசான பொருட்களை வாங்கி குவித்து வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த முயலுகிறார்கள். ஆனால், அதன் மறுபக்கத்தில் அமெரிக்காவின் உற்பத்தி பொருளாதாரம் வெகுவாக சரிகிறது. இதன் தாக்கம் அதே அமெரிக்கர்கள் வேலை, நிதிஆதாரங்களை குலைத்து அவர்களை கஷ்டத்தில் தள்ளுகிறது. அதீதமாக உற்பத்தி கலாசாரத்தை குலைத்து, நுகர்வோர் கலாசாரத்தை ஊக்குவித்ததின் எதிர்விளைவு இது. இது விரும்பத்தக்கது அல்ல. நீங்கள் படத்தில் போட்டிருக்கும் பல பொருட்கள் – துணி முதலியன – இன்று சல்லிசாக சீனாவிலிருந்து இறக்குமதி ஆகின்றன.

  நன்றி

  ஜயராமன்


 2. ஜெயராமன், நன்றி.

  சமீபத்தில் சீனாவில் தயாரிக்கப்பட்ட பற்பசையின் தரம் சரியில்லாமல் இருந்ததும், சீல நச்சுப் பொருட்கள் கலந்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டு ஒரே கலாட்டா!

  தவிர, தொழில்நுட்பம் நிறைந்த, மற்றும் தரம் மிக்க பொருட்கள் பல அமேரிக்கவில் இன்னமும் தயாரிக்கப்படுவதே ஒரு சிறப்புதானே!

  ஆனால், அந்தத் தொழிலகங்களில் பணிபுரிகிறவர்கள் எந்தெந்த நாட்டினரோ!

  US is full of hyphenated Americans!

  எஸ்.கே


 3. அது மட்டுமல்ல, ஜெயராமன்.

  சீனாவில் தயாரிக்கப்பட்ட பொம்மைகள் கூட தரக்குறைவால் மீள்பெறப்பட்டன.

  அதுசரி, ஒரு இந்திய பிபிஓ கம்பெனி மெக்ஸிவோவில் ஆள் எடுக்கிறார்கள் தெரியுமோ!

Leave a Reply

Your email address will not be published.