நல்வரவு!

Lord Ganesh

விநாயகர் காப்பு
ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே

உங்கள் வரவு நல்வரவாகுக!

தமிழில் வலைவீசுகிறேன் பேர்வழி என்று என்னென்னவொ ஜித்து வேலையெல்லாம் செய்துதான் பார்க்கிறேன். முதல்ல “ந்யூக்கிளியஸ்”-ல போட்டேன். ஆனா, அதில என்னமோ RSS ஓடை திறக்கல்ல. காசி அவர்கள் கூட மடல் அனுப்பியிருந்தார்.

இதுக்கு இடையில தவறுதலா blog-ன் database-ஐ “தொப்பு”னு “drop” பண்ணிட்டேன். அதனால முன்னாடி எழுதினது, மறுமொழிகள் எல்லாம் போயே போச்!! 🙁

சரி, இது ஒரு சவால். பார்த்தூடலாம் ஒரு கை அப்படீன்னு, லேட்டஸ்ட் BLOG:CMS try பண்ணினேன்.
ம்ஹூங்! அதைத் தமிழாக்கணும்னா ஒரு கிலோ பீம புஷ்டி அல்வா, ஒரு லிட்டர் A 1 ஜிகிர்தண்டா இதெல்லாம் ஒரு மண்டலம் சாப்பிடணும் போல இருந்தது. அதனால இதெல்லாம் நமக்கு சரிப்படாதுன்னு, இப்போ b2எவல்யூஷன் – ல எம்பிக் குதிச்சிருக்கேன். “gettext”, “.po”, “.mo” – இதுமாதிரி டெக்கினிகல் மேட்டரிலெல்லாம் இறங்கி (கினா. சங்கர் கூட இதைப்பத்தி பேசினார்.) , தமிழ்ல மொழிபெயர்க்க ஆரம்பிச்சு முழங்கை வரையில கிரீஸை பூசிக்கிட்டேன்!

சீக்கிரம் மீண்டு வந்துடுவேன்னு நம்பிக்கை இருக்கு!

அடிக்கடி வாங்க, என்ன!

(Update: தற்போது குடி புகுந்துள்ளது “வோர்ட்பிரஸ்” மென்பொருளில்!)

Leave a Reply

Your email address will not be published.