ஹிந்து மதத்தின் எதிரி சாதி வேறுபாடுதான்!

ஹிந்துக்கள் ஹிந்துக்காளாலேயே வஞ்சிக்கப்படுகிறார்கள். 1986-ல் இங்கிலாந்திலுள்ள இந்திய தூதரகத்தில் நான் பணியாற்றினேன். அப்போது சில பிரிட்டிஷ் அதிகாரிகளை விருந்துக்கு அழைத்திருந்தேன். அந்த அதிகாரிகள் 1947-க்கு முன் இந்தியாவில் பணியாற்றியவர்கள். ‘200 ஆண்டு காளம் பாரதத்தை எப்படி ஆண்டீர்கள்’ என்று அவர்களைக் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘பாரதத்தில் பல இந்துக்கள் அடிமைத்தனத்தை நியாயப்படுத்துகிறார்கள். இதுவே எங்கள் ஆட்சிக்கு அடித்தளமாக அமைந்தது. இப்படிப் பட்டவர்கள் இருக்கும்போது பாரதத்தை அடிமைப் படுத்தவோ தொடர்ந்து அடிமையாக வைத்திருக்கவோ நாங்கள் சிரமப்பட வேண்டியதில்லை’ என்றனர்.

ஆங்கிலேய அதிகாரிகள் சொன்ன இந்தக் கருத்தை ஆர்.எஸ்.எஸ் மற்றும் தேசிய சக்திகள் கவனத்தில் வைத்திருக்க வேண்டும். ஹிந்துக்கள் அனைவரும் சமமானவர்கள்; சம உரிமையுடைய குடிமக்கள். இது உறுதிப்படாவிட்டால் நிலைமை மோசமாகிவிடும். ஹிந்துக்களில் ஒரு பகுதியினர் இரண்டாந்தர குடிமக்கள் என்றால் அதற்குக் காரணம் ஹிந்துக்களே தவிர வேறு யாருமில்லை.

இந்தக் கேள்விக்கு விடை தேட வேண்டிய பொறுப்பு தேசிய எண்ணம் கொண்டவர்களுக்கு உல்ளது. யாரையும் இகழ்வாக நினைக்கக் கூடாது என்ற எண்ணத்தை பதிய வைத்துக் கொள்ள வேண்டும். அடிமையாக இருக்க மாட்டோம் என்பதிலும் உறுதியாக இருக்க வேண்டும். சம உரிமையுள்ளவர்களாகச் செயல்படும்போதுதான் எழுச்சி மிக்க பாரதத்தை உருவாக்குவது சாத்தியமாகும்.


(ஜூன் 16-ம் தேதி டில்லியில் நடை பெற்ற ஆர்.எஸ்.எஸ் சிறப்பு பண்புப் பயிற்சி முகாமின் நிறைவு விழாவில் ஓய்வு பெர்ற I.F.S அதிகாரி ஓ.பி.குப்தா அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து.)

நன்றி: “விஜய பாரதம்” வார இதழ்.

5 Comments


 1. Although, this is partly true, the caste is actually the one of the binding factors of Hinduism. Guruji of RSS had said “Whereever, caste system disappeared and buddhism flourished, all those regions were converted to Islam easily. (eg: afghanistan, bengal, today’s pakistan). Whereever caste system prevailed, Hinduism prevailed.”

  This is entirely true. Because, the kanchi sankarachariar had told “When we tie a large bundle of sticks, it might not be stronger. But if we tie those sticks in to small groups, and then in turn tie all those, the large bundle would be relatively stable.”

  Much of the degradation of caste system was due to islamic aggression. But, more than that, the caste system was given a bad meaning by the britishers.

  All these info was available in Dharampal’s works.

  http://www.dharampal.net

  In his work, he found out that much of today’s BC were once the rulers and kings. Much of the brahmins today were leading simple, disciplined life on those days before britishers.”

  There were some drawbacks in caste system. But most of the castes were interdependant on one another.

  Please visit http://www.dharampal.net, download the books, and have a look at it.

  Particularly the following books shed more light on our society.

  Beautiful tree
  Panchayat Raj


 2. பிராமனர்களின் பிரித்தாலும் சூழ்ச்சியால் தான் 99% இந்துக்கள் வேதம் படிக்காமலே (அதற்க்கு நாம் தகுதியற்றவன்) காலத்தை வீணடித்து உண்மை இறைவனை அறியாமையிலே இறந்து விடுகிறார்கள். பாவம்.
  வேதம் படித்து சத்தியத்தை உணர்ந்த ‌பண்டிட் வேத் பிரகாஷ். அவரின் ஆய்வரிக்கை
  உண்மையை உணர்வோம் கிளிக்
  http://nouralislam.org/tamil/islamkalvi/religions/islam_hindu_comparision_01.htm

  comments : alquran54.17@gmail.com


 3. நம்மகிட்ட ஒரு பெரிய குறை என்னன்னா, வெள்ளக்காரன் என்னென்ன அயோக்கியத்தனம் நம்மகிட்ட பண்ணினானோ, அதையெல்லாம் அப்படியே நாம் செஞ்சதா ஒரு மாயையை உருவாக்கி நம்மையே தாழ்த்திக்கிற ஒரு மோசமான் பழக்கம் இன்னும் போகல.. பிரித்தாளும் சூழ்ச்சி வெள்ள்க்காரன் மொத மொதல்ல இந்தியாவுல கடைபிடிச்சது.. அதுக்கு முன்னாடி மொகலாயர்கள் கூட இப்படி பண்ணல.. ஆனா, இப்ப இருக்கும் காலனிய அடிமைகளுக்கு வெள்ளக்காரன் குத்தம் சொல்ல மனசு வரமாட்டேங்குது.. அதனால, வேறு யாரோ ஒருத்தர பலிகடா தேடுனாங்க.. இருக்கவே இருக்காங்க பிராமணர்கள்.. என்ன பண்ணினாலும் திருப்பி தாக்கமாட்டார்கள்.. அதனால, வெள்ளக்காரன் பண்ணினதெல்லாம் பிராமணர்கள் பண்ணினதா ஒரு கதைய கட்டிவிட்டு, வெள்ளக்காரன காப்பத்துறாங்க.. என்னா ஒரு விசுவாசம்.. வேலைகாரர்களுக்குதான் விசுவாசம் இருக்கும்னு நெனச்சேன்.. ஆனா, இந்த காலனிய அடிமைகளுக்கும் இப்படி ஒரு விசுவாசமா..


 4. @senthil:
  நன்றி, செந்தில்.

  உண்மை நிலையை மிகவும் தெளிவாக சொல்லியிருக்கிறீர்கள்.

  ஒற்றுமையாக பள்ளிகளில் பயிலும் மாணவர்களைக்கூட சாதி பெயரைச் சொல்லி பிரிக்கும் அவலம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஓட்டு வங்கி அரசியலுக்கு நம் இளைஞர் சமுதாயமே பலியாகிக் கொண்டிருப்பது மிகவும் விசனத்திற்குறிய விஷயம்.


 5. சாதியும் மதமும் சமயுமும் காணா
  ஆதிய அநாதியாம் அருட்பெருஞ்ஜோதி

  சாதியும் மதமும் சமயமும் பொய் என
  ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ் ஜோதி

  திருவடி தீக்ஷை(Self realization)

  இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள். இது அனைவருக்கும் தேவையானது.
  நாம் நிலையிள்ளத உடம்பு மனதை “நான்” என்று நம்பி இருக்கிறோம்.
  சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.

Leave a Reply

Your email address will not be published.