இப்படியும் சில வித்துவான்கள்!

Sangeethamஎம்.எஸ்.சௌந்தரம் என்னும் இந்த அம்மையார் ஒரு சிறந்த கர்நாட இசைக் கலைஞர். T.V.சுந்தரம் ஐயங்கார், பரதக் கலைஞர் பத்மா சுப்பிரமணியம் ஆகியோருடைய நெருங்கிய உறவினர். அவருடைய இசைப் பயணத்தை வானதி பதிப்பகம் புத்தகமாக வெளியிட்டுள்ளது. என் வீட்டுக்கு அருகாமையிலிருக்கும் நூலகத்தில் கிட்டிய இப்புத்தகத்தில் பாசாங்கில்லாத எளிய நடையில், உள்ளது உள்ளபடி அவர் காலத்தில் நிகழ்ந்ததை யெல்லாம் விவரமாக எழுதியுள்ளார் அந்த அம்மையார். நூல்நிலையத்தின் தூசி படிந்த புத்த அடுக்குகளினூடே இடுக்கில் பதுங்கியிருந்த இந்த சிறு நூல் மூலம் கர்நாடக இசையைப் பற்றி மட்டும் இல்லாமல் மனித நேயம், அக்கால வாழ்க்கையின் கூறுகள் ஆகியவற்றை அறிய முடிகிறது.

அரியக்குடி இராமானுஜ அய்யங்கார்அந்நூலில் விவரிக்கப்பட்டுள்ள சில பிரபல வித்துவான்களின் சிறப்பியல்புகள் மிகவும் சுவாரசியமாக உள்ளன. அதிலும் அக்காலத்தில் மிகப் பிரபலமான அரியக்குடி இராமானுஜ ஐயங்காரைப் பற்றி அந்த இசைக் கலைஞர் எழுதியுள்ளவை ஒரு பிரபலமான மனிதரின் மற்றொரு முகத்தை படம் பிடித்துக் காட்டுகின்றன. இக்கட்டத்தில் நீங்கள் முக்கியமாக கருத்தில் கொள்ளவேண்டிய உணமை என்னவெனில் இந்நூலின் ஆசிரியரான சௌந்திரம் அம்மையாருடைய தகப்பனார் நாமக்கல் சேஷ ஐயங்கார் மிகப் பெரிய சங்கித வித்துவானாகத் திகழ்ந்தவர். நடிகர் சித்தூர் வி.நாகையா, நடிகை வைஜயந்திமாலாவின் தாயார் வசுந்தரா தேவி, குன்னக்குடி வெங்கடராம ஐயர், துறையூர் இராஜகோபால சர்மா, வி.வி.சடகோபன், கீவளூர் மீனக்ஷிசுந்தரம் பிள்ளை, நடிகர் ரஞ்சன் மற்றும் அரியக்குடி இராமானுஜ ஐயங்கார் போன்ற பலருக்கு அவர் குருவாக இருந்து சங்கீதத்தை போதித்திருக்கிறார்.

தன் மகளுக்கு அவருடைய சிஷ்யர் அரியக்குடியை விட்டு சங்கீதம் பயிற்றுவிக்க வைத்தார். அதாவது தன் குருவின் மகளுக்கு அரியக்குடி (ஏனோ அவரை “அய்யங்கார்” என்றுதான் பலர் அடையாளம் காட்டுகிறார்கள்) குருவானார்.

இந்த முன்னுரையுடன் உங்களை எம்.எஸ்.சௌந்தரம் அம்மையாரிடம் ஒப்படைக்கிறேன். அரியக்குடியின் குணாதிசயங்களைப்பற்றி அவர் என்ன எழுதியுள்ளார் என்பதை வாசியுங்கள்:-

ஆனால், தான் சம்பாதித்த அனைத்து செல்வத்தையும் தன் சீடர்களுக்கும், பக்கவாத்தியக் காரர்களுக்கும், நண்பர்களுக்கும் திறந்த கரங்களுடன் பகிர்ந்து கொடுத்த வள்ளலாகத் திகழ்ந்த மறைந்த சங்கீத மேதை ஜி.என்.பாலசுப்பிரமணியம் (ஜிஎன்பி) அவர்களைப் போலும் சிலர் வாழ்ந்திருக்கின்றனர்!

Leave a Reply

Your email address will not be published.