இரத்தினச் சுருக்கம்!

துளித்துளிஇந்த வலைத்தளத்தில் எதுவுமே மிகைப்படுத்தப் படுவதில்லை. ஏனெனில் அது அங்கே முடியாது! தம்மாத்தூண்டு சதுரத்தில் ஒரு குட்டி வலைப் பதிவு, விளையாட்டுக்கள், ஓவியங்கள் இவை போன்ற பலவற்றை (18×18 புள்ளிகளுக்குள்) உட்செலுத்தியுள்ளார் ஒருவர், “அணுவைப் பிளந்து ஏழ்கடலைப் புகுத்தி” என்பதுபோல்! நான் சொல்வது உலகிலேயே மிகச் சிறிய வலைத்தளத்தைப் பற்றி. சரி, அதைப் பார்த்தேயாக வேண்டுமா?
இங்கே சென்றால் தெரியப் போகிறது!

ஆனால் உங்கள் கண்ணுக்கு கண்ணாடி அலங்காரம் செய்யவேண்டி வந்து, அதற்கு சம்பந்தமில்லாதபடி அநியாயமாக “மூக்குக் கண்ணாடி” என்று பெயரிட்டு, உங்கள் மூக்குக்கு என் மேல் கோபம் வந்தால் நான் ஜவாப்தாரியல்ல! அதுவும் என் இந்தப் பதிவுக்கு அப்புறம்!