என் சிறுவயதில் கீழ்வேளுர் வால்வ் ரேடியோவின் மூலம் கேட்ட காலத்திலிருந்து நாளதுவரை இது எனக்கு மிகவும் பிடித்த பாடல். எம்.எல். வசந்தகுமாரியின் கம்பீரமான கார்வைகளும் அதிர் வேட்டு பிருகாக்களும், அதற்கு முழு contrast-ஆக மென்மைமிகு பி.லீலாவின் ஜலஜலவென்று நீரோடைபோல் ஓடிவரும் ஸ்வரக் கோர்வைகளும் இணைந்து நெஞ்சைக் கொள்ளை கொள்ளும் இசை வெள்ளம் இது!
அந்தப் படத்தைக் காணும் வரையில் இது ஒரு நாட்டியப் பாடல் என்றே எண்ணியிருந்தேன். படம்: மணமகள். நடிப்பு: ”நாட்டியப் பேரொளி” பத்மினி மற்றும் அவருடைய சகோதரி லலிதா. இவர்களோடு இன்னொரு சகோதரியான ராகினியும் இணைத்து அக்காலத்தில் “திருவிதாங்கூர் சகோதரிகள்” என்று பிரபலமானவர்கள்.
நடுவில் பாட்டு வாத்தியாராக அமர்ந்திருப்பவர் பிரபல குணசித்திர நடிகர் டி.எஸ். பாலையா. இந்தப் படத்தில் அவர் வில்லனாக வருகிறார்.
இந்தப் பாடலின் ராகம்: சிம்மேந்திர மத்தியமம்.
இந்தப் பாடல் வரும் காட்சியை டிவியிலிருந்து பதிவு செய்து யாரோ ஒரு புண்ணிவான் Youtube-ல் வலையேற்றியிருந்தார். அதை இதன்கீழ் இணைத்திருந்தேன். ஆனால் அந்தப் பதிவை யூடியூபிலிருந்து நீக்கிவிட்டனர் – ஒரு மகாபாவி எதிர்ப்பு தெரிவித்ததால்! Spoilsports!
ஆனால், இன்னொருவர் அதை நிச்சயம் வலையேற்றுவார். அதுவரை பொறுத்திருப்போம்.
கிடைத்துவிட்டது!
அந்தப் பாடலின் ஒலி வடிவை இங்கே கேட்கலாம்:
இதே பாடலை திருமதி நித்யாஸ்ரீயும் இன்னொரு பெண்ணும் ஒரு நிகழ்ச்சியில் பாடியிருப்பதின் ஒளிப்பதிவை இதன்கீழ் காணலாம்.
ஆனால் எம்.எல்.வியின் கம்பீரமும், சிம்மேந்திர மத்தியம ராகத்திற்கு வேண்டிய காத்திரமும் நித்யாஸ்ரீயின் குரலில் இல்லை என்பதை நீங்களே உணர்வீர்கள்!
(உழைத்துப் பாடியிருக்கிறார்கள். ஆனால் குழைவு மிஸ்ஸிங்!)
Permalink
ஆம். எம்.எல்.வியும் பி.லீலாவும் நல்ல contrast. ஆனால் இரண்டும் சேரும்போது ஒரு முழுமை உணர்வு தோன்றுகிறது. அந்தப் பாடலைக் கேட்கும்போதே மனத்தில் ஒரு அதிர்வு ஏற்படும்.
காலத்தால் அழியாத பாடல்!
நன்றி.
Permalink
please try this
http://www.youtube.com/watch?v=pn4gJSPJvjU
Permalink
நன்றி, ஆர்.வி.ராஜு. இதை எப்படி மிஸ் பண்னினேன் என்று வியந்து கொண்டிருக்கிறேன்!
மேலும் நீங்கள் அந்த யூடியூப் பக்கத்தில் எழுதியுள்ள விமரிசனம் மிகவும் சிறப்பாக உள்ளது. நம் வாசகர்கள் கவனத்திற்காக அதன் ஒரு பகுதியை இங்கு இடுகிறேன்:
எஸ்.கே