இந்த வருஷம் கொஞ்சம் டல்லுதான். காரணங்களை ஆராய்ந்து கடைக்காரர்களே அறிக்கை வெளியிடுவார்கள். அதுவரை பொறுப்போம்.
அநேகமாக எல்லாக் கடைகளிலும் தவராமல் இடம் பெற்றிருந்தது கல்கியின் பொன்னியின் செல்வன், பல ஷேப்பு, சைஸுகளில். அதே போல் பாரதியார் கவிதைகளும் – ஓலைச் சுவடி டைப்பில் கூட!
ஓலைச்சுவடி என்றும் ஒரு புத்தகம் நிறைய விற்றுக் கொண்டிருந்தது – ”தளியோலா” என்னும் மலையாளப் புத்தகத்தின் தமிழாக்கம்.
சே கவேராவும் நிறைய கண்ணில் பட்டார். அவரைப் பற்றி ஒன்றும் அறியாதவர்கள் கூட அந்த மீமில் ஆட்பட்டிருந்தனர்!
நான் நேரம் (சில இடங்களில் பணமும்) செலவிட்ட ஸ்டால்கள்:
ரிசர்வ் வங்கி
பி.எஸ்.என்.எல்
கீதா பிரஸ்
தினமணி
சென்னை பல்கலைக் கழகம்
விஜயபாரதம்
நிவேதிதா பதிப்பகம்
Asian Educational Services (அபிதான சிந்தாமணி)
இன்னும் சில…
பளிரென்று கண்ணைப் பறிக்கும் விதமாக நூல்களை வடிவமைத்து அளிப்பவர்கள் (நான் பார்த்தவரை):
கிழக்கு (வரம்…etc)
ஆனந்த விகடன்
உயிர்மை
இராமகிருஷ்ண மடம்
மற்றபடி ஒரே மாதிரி ஸ்டால்கள். ஒரே மாதிரி புத்தகங்கள்.
மூன்று மணி நேரத்திற்குமேல் சுற்றிவிட்டு ஒன் பாத்ரூம் போகலாமென்றால் கண்காட்சிக்கு வெளியே வந்து காடு மலை வனாந்திரமெல்லாம் கடந்து செல்ல வேண்டியிருந்தது. நல்ல வேளை அப்போது மழை பெய்யவில்லை.
நான் சென்றது திங்கட்கிழமையாதலால் ஸ்டால்கள் காற்று வாங்கிக் கொண்டிருந்தன. ஆனால் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நடத்தும் கேண்டீனில் நல்ல கூட்டம் (குட்டி இட்லி, பானி பூரி, ஃப்ரெஞ்ச் ஃபிரை, தோசை, போளி, ஃபிரைடு ரைஸ்…). கால் அசந்து உட்காரலாமென்றால் நாற்காலி ஏதும் காலி இல்லை. ஆள் இல்லாத இருக்கைகளில் கூட பைகளைப் போட்டு இடம் பிடித்துவிட்டு டோக்கன் வாங்கச் சென்றிருந்தனர் ஆண்கள்; பெண்கள் அனைவரும் இருக்கை நிறைந்து அமர்ந்திருந்தனர்!
புதிய தமிழ் ஒன்றை கண்டு பிடித்துக் கொண்டிருக்கும் அறிஞர் ஒருவர் அளிக்கும் சொற்கள் சிலவற்றை இங்கே கொடுத்துள்ளேன். அவைகளின் பொருள் புரிந்து எனக்குச் சொன்னால் உங்களுக்கென்று மலிவு விலையில் 5 ரூபாய்க்கு புத்தகக் கண்காட்சி நுழைவுச் சீட்டு ஒன்று கிடைக்கும்.
பொத்தக வியந்தை
தளி
படி
வாழ்வரை
இப்போது காட்சிகள் இரண்டு:
சந்தை பற்றிய விவரங்களும் சொல்வளமும் செறிந்த இன்னொரு கட்டுரை இங்கே. (சேதுபதி அருணாசலம் எழுதியது)
Permalink
I liked the 2nd photo 🙂
Permalink
எதற்கும் அரேபியா.. உருதா.. அதில் கிருஷ்ணரைப் பற்றி என்ன எழுதி இருக்கிறது என்று தெரிந்தால் நல்லது 🙂
மோதிலால் பனாரசி தாஸ், அரபிந்தோ ஆச்ரமம் ஆகிய ஸ்டால்கள் இருந்ததா?
Permalink
மோதிலால் இருந்தார் பார்த்தேன். அரவிந்தரை இனிமேல்தான் தேடவேண்டும்.