என்ன நடக்குது இங்கே

அரிய முகங்களின் அறிமுகம் எனக்குக் கிட்டிய அருமையான மாலைப் பொழுது! ஆம், கிழக்குக் கடலோர மணற்பரப்பில், கிழக்குப் பதிப்பகத்தார் சார்பில் நிகழ்ந்த “அனுமன் வார்ப்பும் வனப்பும்” என்ற நூலின் அறிமுகக் கூட்டம் நடந்தேறியது. புத்தக அசிரியர், “இணையத் தமிழ் ஆசான்”, “மரபுக் […]

WordPress ஒரு சிறப்பான வலைப்பதிவு மென்பொருள் நிரல். பி.எச்.பி மற்றும் மை-எஸ்க்யூஎல் (PHP & MySql) போன்ற திறமூல மென்கலன்களைக் கொண்டு இயங்குவது. முழுவதும் இலவசமாகக் கிடைக்கும் இந்த இயற்பொதி முழுவதுமாக வளர்ந்து 1.5 என்ற திறனிலக்கை எட்டியுள்ளது. ப்ளாக்கர் போன்ற […]

என் நண்பரொருவர் தன் வலைப்பூவில் ஒரு புகைப் படத்தை இன்னொரு வலைத் தளத்திலிருந்து எடுத்துப் போட்டிருந்தார். அதில் ஒரு சைக்கிள் போட்டி வீரரின் படம் இருந்தது. அவருடைய கைத் தசைகள் முறுக்கேறி நிற்பதைத் துல்லியமாக அந்தப் படம் காண்பித்தது. அந்தப் படத்தை […]

இந்த வருடத்திய குடியரசு தினத்தன்று எனக்கு ஒரு புதிய அனுபவம்! சென்னை மயிலாப்பூரில் அமைந்திருக்கும் இராமகிருஷ்ண மாணவரில்லத்தில் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு கொடியேற்றி சொற்பொழிவு (!) ஆற்றவேண்டும் என்று அங்கு நிர்வாகப் பொறுப்பிலிருக்கும் ஸ்வாமிஜி என்னிடம் ஒரு அன்புக் கட்டளையிட்டார். […]

இன்று லாஃப்டில் ஏறி அங்கு என் சந்ததியார்களுக்காக சேமித்து வைத்துள்ள (இவற்றை யார் சீந்துவார்கள், அவர்கள் வாழப்போவது டிஜிடல் உலகத்தில்” – அசரீரி!) பேப்பர் க்ளிப்பிங்குகளையும், பழைய புத்தகங்களையும் (அத்தனையும் மாணிக்கங்கள்!) ஒழுங்காக அடுக்கி வைக்க ஆரம்பித்தேன். புதிய வரவுகளுக்கு இடம் […]

ஜனவரி 8, சனிக்கிழமை புத்தகக் கண்காட்சிக்குள் நுழையுமுன் முதல் பிரச்னை, வண்டியை எங்கு விடுவது என்பது. வாயிலில் நின்ற தாணாக்காரர் கையை வீசி வீசி ஆட்டி, எங்கோ விலகிச் சென்று “கிரௌண்டில்” விடச் சொல்லிக் கத்திக் கொண்டிருந்தார். என்ன சொல்கிறார் என்று […]

பேரழிவு அலைகளால் அழிந்த சடலங்கள் உண்டாக்கும் நாற்றத்தை விட உயிரோடிருக்கும் பலரின் மனக் கேட்டினால் ஏற்படும் நாற்றம்தான் இப்போது பாதிக்கப் பட்ட இடங்களில் மேலோங்கி நிற்கிறது. பொங்கி எழும் மனித நேய செயல்பாடுகள் ஒரு புறம் என்றாலும், கேடுகெட்ட மனத்தினரின் கொடுமைகள் […]

நம் நாட்டில் National Institute of Oceanography மற்றும் Indian Space Research Organisation எல்லாம் உள்ளன. இவைகளின் சேவைகளை பத்திரிக்கைகள் விவரமாக பறை சாற்றியுள்ளன. தனக்குத் தானே பட்டங்கள் அள்ளித் தந்துகொள்ளும் தலைவர்களுக்கும் பஞ்சமில்லை. ஆமாம், கருப்பு சிறப்பாடையுடன் நடைப் […]

அவர்களுக்கு கடல்தான் அன்னை. கடல்தான் வாழ்வு கடல்தான் வயிற்றை நிரப்பும் அட்சய பாத்திரம் ஆனால் அந்தக் கடலே கணக்கற்றோருக்குக் காலனானான் நேற்று. “ட்சூனாமீ” என்ற அலைப் பிசாசின் ஊழித் தாண்டவத்தின் கொடுமையால் மாந்தர்கள் வெறும் எண்ணிக்கையாய் மாறிப்போயினர்! ஜப்பானிய மொழியில் எழுதினால் […]