ஒண்ணுமே புரியலே!

பாகிஸ்தானின் முன்னணி கிரிக்கெட் வீரர் யூஸஃப் யோஹண்ணா ஒரு கிறிஸ்தவராம் (சில தினங்கள் முன்வரை). அவர் சமீபத்தில் முஸ்லிமாக மதம் மாறினார். முன்னாள் அணித்தலைவர் சயீத் அன்வர்தான் அதற்குக் காரணமாக இருந்தார் என்று யூஸஃப்பின் தாயார் புகார் கூறியிருப்பதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வாசித்தேன். அதன் சுட்டி இதோ.

இது தொடர்புடைய இன்னொரு சர்ச்சை பற்றி இங்கே படிக்கலாம்.

யூஸஃப் யோஹண்ணா மதம் மாறியது ஒரு பெரிய செய்தி அல்ல. இத்தனைநாள் தாக்குப் பிடித்ததே பெரிது. அதிருக்கட்டும். சில மாதங்களுக்குமுன் அவருடைய சொகுசு கார் ஒன்று (பல லட்சங்கள் மதிப்புள்ளது) லாஹூர் நகரின் முக்கிய வீதியில் சிலரால் அடித்து நொறுக்கப்பட்டது. ஆனால் யூஸஃப் புகார் ஏதும் கொடுக்கவில்லை. “ஏதோ தவறு நிகழ்ந்துவிட்டது. எல்லாம் சரி” என்று மழுப்பிவிட்டாராம். ஏதோ “பாதாள லோகம்” தொடர்பான பிரச்னையாக இருக்கலாம் என்கிறது இந்தத் தளம்.

மேல்விவரம் இங்கும் வாசிக்கலாம்.

உங்களுக்கு நினைவிருக்கலாம், அஸாருத்தீன், சங்கீதா பிஜ்லானி, கங்குலி, நக்மா…………………….

சரி, உங்களுக்கு ஒரு கேள்வி:-
ஏன் ஒரு சக்தியாலும் ஒன்றும் செய்ய இயலவில்லை?