தமிழ் விக்கிபீடியா தாலிபான்கள்

Tamil Wikipediaஃபாசிசம் + மொழி அடிப்படைவாதம் + அதிதூய்மைவாதம் + மொழி துவேஷம் = (அதி)தனித்(த)தமிழ்

தமிழ் விகியில் ஒரு தலிபான் குழு இயங்குகிறது. அதன் முக்கிய நோக்கம் தமிழிலிருந்து கிரந்த எழுத்துகளை எடுக்க வேண்டும். அப்படி கிரந்த எழுத்துக்களை பயன்படுத்தி யாராவது கட்டுரை எழுதியிருந்தால் , இவர்கள் சென்று கிரந்த எழுத்துகளை மாற்றுவார்கள். அது தவிற, சமஸ்கிருத சம்பந்த வார்த்தைகள் இருந்தால், அதை ‘சுத்த’ தமிழில் எழுத வேண்டும். தமிழ்விகியை கண்ட்ரோல் செய்யும் 4/5 நபர்கள்தான் இத்தகைய கொள்கையை தீவிரமாக கடைப் பிடிக்கின்றனர். உதாரணமாக ‘இஸ்லாம்’ என கட்டுரை யாராவது எழுதினால், அதை `இசுலாம்` என மாற்றுவர். யாராவது லத்தீன் கவி ஹோரேஸ் என கட்டுரை எழுதினால், அதை ஓராசு என மாற்றுவர்.

கணித மேதை ஸ்ரீநிவாச இராமானுஜன் அவர்கள் பற்றிய விக்கிபீடியா பக்கத்தில் சென்று பார்த்தால் தலைப்பு “இராமானுசன்” என்று மாற்றியிருப்பதைக் காணலாம். இந்த மாற்றத்திற்கு பற்றி பலர் எதிர்ப்பு தெரிவித்திருப்பது “பேச்சு” பக்கத்தில் விவரமாக இருக்கிறது. அவருடைய பெயரை மாற்றுவதற்கு இவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?!

ஆனால் ஜெயலலிதா அவர்களின் விக்கி பக்கத்தில் அவர்களின் பெயரை இதுபோல் மாற்றுவதற்கு தைரியம் இல்லை! அதே போல்தான் திரு. மு, க. ஸ்டாலின் அவர்களின் பக்கத்திலும்!

இந்த தலிபானின் கூற்றுப்படி தமிழ்விக்கி , ஊடகங்கள், தமிழிலக்கியம், சாதாரண தமிழரகளின் தமிழ் எழுத்துகள், இவையெல்லாம் கிரந்த எழுத்துகளால் கெடுக்கப் படுவிட்டன. தமிழ்விகி, புதிய கிரந்தம் தவிற்கும் ஊடகம். அதனால் மற்றவர்கள் கட்டுரைகளை எழுத வேண்டும்; இந்த தலிபான் குழு அதிலிருந்து கிரந்த எழுத்துக்களையும், வட மொழி வார்த்தைகளையும் அகற்ற வேண்டும். இதுவே இவர்களது புல்லுருவி கொள்கை. இந்த intellectual vandalism நிறுத்தாத வரை, மற்றவர்கள் தமிழ்விகியில் போகக் கூடாது.

இந்த தலிபான் குழு இப்படி ஆயிரக்கணக்கான இடங்களில் வேண்டலிசம் செய்துள்ளது. எது விகிபீடியா இல்லை என்று http://en.wikipedia.org/wiki/Wikipedia:What_Wikipedia_is_not சொல்கிறது. விக்கி ரூல்களே, இது Wikipedia is not a soapbox, propaganda, advocacy, or recruitment of any kind, commercial, political, religious, or otherwise. என உறுதியாக உள்ளன. ஆனால் இந்த புல்லுருவி தலிபான், தமிழ் விக்கியை கிரந்த ஒழிப்பு மேடையாகத்தான் பயன் படுத்துகிரது.

சுமார் 18,20 வருடங்களுக்கு கிரந்த எழுத்துகளை தமிழகத்தில் பயின்று விட்டு அவற்றை தவிர்த்து “இங்கு தமிழ் விக்கிபீடியாவில் வாசி, புரிந்து கொள். நான் சொல்வதைதான் நீ வாசிக்கவேண்டும்” என்பது எதேச்சாதிகாரம் என்பதைத்தான் காட்டுகின்றது. பாட நூல்களில் நாடுகளின் பெயர்களை, ஊர்களின் பெயர்களை புத்தகத்தில் உள்ளது போல (கிரந்தத்துடன்) வாசித்து விட்டு நான் சொல்வது போல்தான் வாசிக்க வேண்டும் எனபது பொருத்தமற்றது. உதாரணமாக ஸ்பெயின் என்பதை “யசுவேனியா” என்று எழுதினால் அது யாருக்குமே புரியாது. அகராதியில் இல்லாதவைத்தான் இங்கு கொடுக்கப்படுகின்றன அல்லது உருவாக்கப்படுகின்றன. அனைவருக்கும் இவ்வார்த்தைகள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மாணவர்கள், சிறுவர்கள் பயன்படுத்தவே மாட்டார்கள்.

இது திருந்த வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *