பிராமணர்களின் சுரண்டல் (சுண்டல் அல்ல!)

Brahmin priestதற்போது சக பதிவாளர்கள் பலர் பார்ப்பனீயம், பார்ப்பனீயம் என்று கூச்சலிடுகின்றனர். அந்த வஸ்து என்ன என்பது எனக்கு சிறிதளவும் புரியவில்லை. பிராமணர்களின் தற்போதைய நிலை, அவர்களின் எண்ணப்போக்கு இவை எல்லாவற்றையும் பற்றி விலாவாரியாக சென்ற பதிவில் எழுதிவிட்டேன். பலரும் பின்னூட்டங்களில் மேலதிக விவரமும் தந்துள்ளனர். சரி, இவர்கள் பார்ப்பனர்கள்மேல் என்னதான் பழி சுமத்துகிறார்கள் என்பதை அறிந்துகொள்ள அத்தகைய துவேஷ பதிவுகளுக்குச் சென்றேன். அவர்கள் மொத்தத்தில் இரண்டு குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள்:

1. பார்ப்பனர் ஒருசுரண்டல் வர்க்கம். அவர்கள் மற்றவர் உழைப்பைச் சுரண்டி உண்டு கொழுக்கிறார்கள்.

2. அதென்ன பார்ப்பனர் மட்டும்தான் கோயிற்களில் அர்ச்சகராக இருக்கவேண்டுமா? அதுவும் சமஸ்கிருதத்தில் மட்டும்தான் அர்ச்சனை செய்யவேண்டுமா? இதென்ன அராஜகம்?

ஒவ்வொன்றாக அலசுவோம்.

முதல் பழி அர்த்தமற்றது. அபாண்டமானது. பார்ப்பனர்கள் யாரை சுரண்டுகிறார்கள, எவ்வகையில் சுரண்டுகிறார்கள்? அவர்கள் என்ன மொத்த வியாபாரிகளா? ரிலையன்ஸ் போன்ற பெரிய நிறுவனங்களின் முதலாளிகளா? பெரும் நிலச்சுவாந்தார்களா? கேட்ட பணத்தை கெடுவுக்குள் கொடுக்காவிட்டால் “சுபாரி” காண்டிராக்ட் போடும் D-கம்பெனியா? ஆட்டோவில் வரும் கும்பலா? மாமூல் தாதாக்களா? இவர்களால் சுரண்டப்படுவர்கள் யார்?

ஓகோ, புரிகிறது. திருமணம் முதலிய சடங்குகளில் மந்திரம் சொல்லி பிழைப்பதைச் சொல்கிறார்களோ? ஐயா, தச்சு வேலை இருந்தால் கார்ப்பெண்டரைக் கூப்பிடுகிறீர்கள்; பைப் லீக்கானால் பிளம்பரைத் தேடுகிறீர்கள்; சுவிச் ஷாக் அடித்தால் எலெக்ட்ரீஷியனை விளிக்கிறீர்கள். அதைபோல் சடங்குகள் செய்விப்பதற்கு “ஐயரை”க் கூப்பிடுகிறீர்கள். அவருடைய வேலைக்கு ஒரு கூலி கொடுக்கிறீர்கள். அச்சமையம் நீங்கள் முதலாளி, அவர் தொழிலாளி. அதுவும் நீங்கள் விருப்பப்பட்டு அவரை அழைத்தால்தான். ஏன், ஐயர் இல்லாமல் சடங்குகளை நீங்களே செய்யக்கூடாது? ஏன் தமிழிலேயே ஓதக்கூடாது? தற்போது ஊருக்கு ஊர் சமஸ்கிருத வகுப்புகள் நடந்துகொண்டிருக்கின்றன. பலதரப்பட்ட மக்களும் பயின்று வருகின்றனர் (முஸ்லிம் பெண்கள் உட்பட). திருச்சியில் ஒரு சமஸ்கிருத ஆசிரியர் கூறினார், அவர் இந்த ஆண்டு 65 பேரை தேர்வுக்கு அனுப்பியிருக்கிறார். அதில் இரெண்டு பேர்தான் பிராமணர்கள். நீங்களும் படியுங்கள். சடங்கு மந்திரங்களை தமிழாக்கம் செய்து மக்களுக்கு அளியுங்கள். பார்ப்பானைத் திட்டும் வீரத்தை ஆக்க ரீதியில் செயலில் காட்டலாமே! ஏன், தேவார திருவாசகங்களை ஓதி சடங்குகளை நடாத்தலாமே.

முன்பெல்லாம் இதுபோல் பிராமணரல்லாதோர்களின் சடங்குகளை செய்து கொடுப்பவர்களை “பஞ்சாங்கக் காரர்கள்” என்று அழைப்பார்கள். அவர்கள் பிராமணர்களில் ஒரு பகுதியினர். இவர்களில் பெரும் பகுதியினர் தெலுங்கு பேசுபவர்கள். ஆனால் தற்போது எல்லோரும் ஈடுபடுகிறார்கள்- கோயில் அர்ச்சகர்கள் உட்பட.

பிராமணர்களில் பலபேர் இதுபோல் “ஐயரை” (அது ஒரு professional name) கூப்பிடுவதில்லை. (இவர்களை “வாத்தியார்”, “வைதீகர்”, “புரோகிதர்” என்று பல பெயர்களால் குறிப்பிடுகிறார்கள்.) என்னைப் போன்ற பலர் மென்தகடு மூலம் வேலையை முடித்துக் கொள்கிறார்கள். மேலும் வேலைக்குப் போகும் பரபரப்பு மிகுவதால், சீக்கிறம் முடிந்தால் போதும் என்கிற எண்ணம்தான் மேலோங்குகிறதே தவிர, சிரத்தை யாருக்கும் இல்லை. அதனால் புரோகிதர்கள் சிலர் எல்லாவற்றையும் “காண்டிராக்ட்” முறையில் செய்துவிடுகிறார்கள். திதி (சிரார்த்தம்) செய்யவேண்டுமா, இவ்வளவு ரூபாய் கொடுங்கள், சமையல், மந்திரம், சாமக்கிரிகள் எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன் ஒருமணிநேரத்தில் வேலையை முடித்து உங்களுக்கும் சாப்பாடு போட்டுவிடுகிறேன். இப்படித்தான்.

இதில் சுரண்டல் எங்கிருந்து வந்தது? புரியவில்லை. கடந்தகாலத்தில் சுரண்டினார்கள் என்று நீங்கள் ஆரம்பித்தால், இலங்கை நம் நாட்டின்மீது படையெடுக்கவேண்டியதுதான். ஏன்? பின்ன, ராமர் இலங்கை மீது படையெடுத்தாரே! நாம் என்ன செய்யலாம்? ஆங், இங்கிலாந்து மேல் போர் தொடுக்கலாம்!!

நிகழ்காலத்தை, எதிர்காலத்தை நோக்குங்கள். பழங்கதை பேசி வெறுப்புணர்ச்சியை பயிரிட்டு வளர்த்து மக்கள் மனத்தை கெடுக்காதீர்கள். யாரையாவது திட்டவேண்டுமா, உடனே அவரை “பார்ப்பன பன்னாடை” என்று ஆரம்பிக்கிறார்கள். சிந்தி தாகூரான அத்வானியும், மராட்டிய தாகுர் வம்சத்தைச் சேர்ந்த பால் தாக்ரேயும் இவர்கள் கணக்கில் பார்ப்பனர்கள். ஆனால் இராமாயணம் பிரகாரம் பிராமணனான இராவணன் மட்டும் திராவிடன். க்ஷத்தியரான இராமன் பிராமணன். என்ன அறிவுக் கொழுந்துகளய்யா! திட்டுவதே தொழிலாகக் கொண்டவர்களுக்கு வகைதொகையே தேவையில்லை.

சரி, இப்போது இரண்டாது குற்றச்சாட்டுக்கு வருவோம்.

கோயில்களில் அர்ச்சிப்பது பார்ப்பனர்களின் ஏகபோக உரிமையாக ஏன் இருக்க வேண்டும்; தமிழில் பூஜை செய்தால் தெய்வம் வேண்டாமென்று சொல்லிவிடுமா?

முஸ்லிம்களிடம் போய் ஏன் அரபு மொழியில் தொழுகிறீர்கள், தமிழில் தொழுவதுதானே என்று கேட்பதற்கென்ன என்று நான் பதில் கேள்வி எழுப்பினால் அது விதண்டாவாதம் மற்றும் எஸ்கேப்பிசம். ஆகையால் அத்தகைய தொடர்பில்லாத சர்ச்சையில் ஈடுபடாமல் நேரிடையாக பதிலுரைக்க முயற்சிக்கிறேன்.

ஆம். ஒரு பிராமணரல்லாதவர் நிலையில் நான் நின்று பார்த்தால் இந்த அர்ச்சகர் விஷயம் சிறிது நெருடலாகத்தான் இருக்கிறது. முன் காலத்தில் மற்றைய தொழில்கள் எவ்வாறு வாழையடி வாழையாக கற்றுக் கொடுக்கப்பட்டு வந்ததோ அதுபோல் பூஜையும் பிறப்பின்பால் அமைந்தது. ஆனால் இன்று அதற்கென்று பள்ளிகள் அமைத்து அனைவருக்கும் கற்றுக் கொடுக்கலாமே (இப்போது இது நடக்கப் போகிறது. இதில் எனக்கு மிக்க மகிழ்ச்சியே).

Madurai temple priest (Kurukkal)சைவக் கோயில்கள் மற்றும் அம்மன் ஆலயங்களில் பூஜை செய்பவர்களை குருக்கள் என்றும் சிவாச்சாரியார் என்றும் அழைப்பார்கள். இவர்கள் பிராமணர்களிலேயே ஒரு உட்பிரிவு. இவர்கள் தங்களுக்குள்ளேயேதான் சம்பந்தம் வைத்துக் கொள்வார்கள். வேதங்கள் தவிர ஆகம சாஸ்திரமும் இவர்கள் கற்றார்கள். அனவரதமும் இறைவன் தொண்டுதான் நம் தொழில், அதுவே கதி என்று இருந்தார்கள். அரசர்களும், கோவில் நிர்வாகஸ்தர்களும் இவர்களின் வாழ்க்கைக்குப் போதுமான அளவு மானியம் கொடுத்து வந்தார்கள். ரொம்பவும் ஆசைப்படாமல் இவர்கள் இறைத்தொண்டில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் இன்று நிலைமை வெகுவாக மாறிவிட்டது. அவர்களைச் சுற்றியுள்ள சமூகத்தில் ஏற்படும் மாற்றங்கள் அவர்களையும் பாதிக்கத் தொடங்கிவிட்டன. அவர்களும் எல்லோரையும்போல் கலர் டிவி போன்றவற்றை அனுபவிக்க ஆசைப்பட ஆரம்பித்தனர். ஆனால் வருமானமோ மிகக்குறைவு (abysmally low; almost pittance). ஆகையால் ஆலயத்திற்கு தொழ வரும் சேவார்த்திகளிடம் தட்டை நீட்ட ஆரம்பித்தனர். நிறைய கூட்டம் வரும் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் அவர்களுக்கு நல்ல வருமானம் கிட்டும். சாதாரண கோவில்களில் எண்ணைப் பிசுக்குடன் இறைவனுக்கு செய்யும் கால பூஜை செய்துவிட்டு கிடைக்கும் சொற்ப வருமானத்துடன் வறுமையுடன் போராடவேண்டியதுதான்.

தமிழ்நாட்டிலுள்ள பெரும்பாலான அம்மன் ஆலயங்களில் பிராமண அர்ச்சகர்கள் கிடையாது. பூசாரிகள்தான். ஆனால் அதற்காக யாரும் அந்தக் கோவில்களை குறைவாக என்ணுவது கிடையாது. மாயூரத்திலிருந்து பூம்புகார் செல்லும் பாதையிலுள்ள கருவாழைக்கரை என்னும் கிராமத்தில் அமைந்திருக்கும் மாரியம்மன் கோயில்தான் என் உறவினர் பலருக்கும், மற்றும் பல நூற்றுக்கணக்கான பிராமணர்களுக்கும் குலதெய்வமாகும். பழநி போன்ற ஊர்களில் பூசாரியும் உண்டு, அர்ச்சகரும் உண்டு. உங்கள் விருப்பப்படி இருவரில் யாருடைய சேவையையும் நீங்கள் பெறலாம்.

தமிழில் பூஜை செய்வதில் யாதொரு தடையும் இருக்க முடியாது. பல ஆலயங்களில் “இங்கு தமிழில் அர்ச்சனை செய்யப்படும்” என்கிற போர்டு உள்ளது. இது அரசினுடைய ஆணை. சிதம்பரத்தில் தமிழில் நாமாவளி சொன்னார்கள் என்பதற்காக ஆலயத்தைக் கழுவினார்கள் என்று ஒரு புரளி கிளப்பியுள்ளனர். நான் அங்கு சென்றபோது பல தீக்ஷிதர்களிடம் இது பற்றி விசாரித்தேன். அதுபோன்ற நிகழ்ச்சி அங்கு நடந்ததாக யாரும் சொல்லவில்லை. அந்தக் கோவில் சோழர்கள் காலத்தில் திருப்பணிகள் பல செய்யப்பட்ட கோவில். அங்கு தமிழ் நிச்சயம் கோலோச்சும். மேலும் எல்லா சிவன் கோவில்களிலும் கால பூஜைகளின்போது வேதங்களின் கூடவே நடுநடுவே ஓதுவார்கள் நாயன்மார்களின் பாடல்களை இசைப்பர். இது இன்றும் கடைப்பிடிக்கப்படும் நடைமுறை. ஆகையால் ஏதோ தமிழை கோவில்பால் நுழையவிடாமல் பார்ப்பனர்கள் தடுக்கிறார்கள் என்பது ஒரு அபாண்டமான திரிப்புவாதம். தொன்றுதொட்டு சமஸ்கிருதத்தில் பூஜை வழிமுறை பின்பற்றப் பட்டு வருகிறது. அதனையே தமிழில் செய்வதில் எத்தகைய மன மாச்சரியமும் இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் அந்த அர்ச்சகர்களும் தமிழர்கள்தானே. அவர்கள் வீட்டில் தமிழில்தானே பேசுகிறார்கள்.

என் தீர்மானமான கருத்து என்னவென்றால் தமிழ் நம் ஹிந்து தெய்வங்களுக்கு உகந்த மொழி. பிடித்த மொழி. நாயன்மார்களும் ஆழ்வார்களும் அதில் பாடித்தானே இறைவனைத் தொழுதிருக்கிறார்கள். நாலாயிர திவ்யப் பிரபந்தம் படிக்காத வைஷ்ணவர்கள் யாரேனும் உண்டா? இந்த மாற்றம் விரைவில் முழுமையாக நடக்கும் என்பது தின்ணம்.

Sanskrit (Grantham)மேலும் சமஸ்கிருதம் அனைத்து சாதியினருக்கும் பொதுவானது. தேவ பாஷை என்று எடுத்துக் கொண்டாலும் நீங்களும் நானும் மற்றெல்லோரும் தெய்வத்தின் அம்சங்கள்தானே. அது நம் பாஷைதான். முன் காலத்தில் அனைவரும் கற்றார்கள். நாளடைவில் பிராமணர்களில் ஒரு சிலர் மட்டும் அதனைக் கற்று வந்தனர். இப்போது எல்லோரும் கற்கிறார்கள். வாருங்கள் நாமும் கற்போம்!

நம் தமிழ் மக்களிடையே பிளவுகள் உண்டாக்கி அதில் மீன்பிடிக்கும் ஆவலுடன் பல குழப்பவாதிகள் முயல்கின்றனர். அத்தகைய முயற்சிகளில் முதல் கல் பார்ப்பன வெறுப்பு. இந்துக்கள் மனத்தில் விஷவித்தை விதைத்து விட்டால் எளிதில் மதமாற்றலில் ஈடுபடலாம் என்பது திட்டம். இதற்கு பலர் உடந்தை.

இத்தகைய சூழ்ச்சிகளில் சிக்காமல் நடுநிலை சிந்தனையாளர்களும் அறிவாற்றல் பெற்றவர்களும் மனத் தெளிவுடன் இருங்கள். இவர்களின் பிதற்றல் எங்கும் விலைபோகாது.

அவர்கள் பாதை அவர்களுக்கு; நம் பாதை நமக்கு. ஆஹா, கேட்க மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் நடைமுறையில் அவ்வாறில்லையே. என் பாதைதான் ஒரே பாதை. அதில் அனைவரும் நடக்க வேண்டும். இல்லாவிட்டால் ஒருகை பார்க்கிறோம் என்பதில்தான் சிக்கல்.

என்றைக்கு வரும் அந்த நன்னாள் – ஒருவர் மற்றவரை மரியாதையுடன் நோக்கி ஒற்றுமையுடனும் மகிழ்ச்சியுடனும் வாழும் நாள். That Utopia!

இப்போது எங்கிருந்தோ காற்றில் மிதந்து வந்து என் காதுகளைத் தொடுகிறது ஒரு பழைய பாடல்:

ஈமான்

9 Comments


 1. ஐயா,
  நான் பொதுவாக வலைப் பக்கங்கள் மேய்பவன் மட்டுமே. பார்பனீய சண்டைகளில் வேடிக்கை பார்பவன் நான். ஆனால் உங்களுடைய Open-minded approach எழுத்து என்னை சில கேள்விகள் கேட்க வைக்கிறது.
  விதண்டாவாதமாக அமையாமல் இருக்க நான் ஆசைப்படுகிறேன்.

  //முதல் பழி அர்த்தமற்றது. அபாண்டமானது. பார்ப்பனர்கள் யாரை சுரண்டுகிறார்கள, எவ்வகையில் சுரண்டுகிறார்கள்? அவர்கள் என்ன மொத்த வியாபாரிகளா? ரிலையன்ஸ் போன்ற பெரிய நிறுவனங்களின் முதலாளிகளா? பெரும் நிலச்சுவாந்தார்களா? கேட்ட பணத்தை கெடுவுக்குள் கொடுக்காவிட்டால் “சுபாரி” காண்டிராக்ட் போடும் D-கம்பெனியா? ஆட்டோவில் வரும் கும்பலா? மாமூல் தாதாக்களா? இவர்களால் சுரண்டப்படுவர்கள் யார்? //

  இத்தகைய சுரண்டல்கள்தான் சுரண்டலா? பிறப்பால் மேன்மை என்னும் தத்துவம் சுரண்டல் இல்லையா? அதில் வரும் Social Advantages, Priveleges சுரண்டல் இல்லையா? பிராமணீயத்தை சாடுபவர்கள் இரண்டாம் வகையான சுரண்டல்களைதானே சாடுகிறார்கள்?

  //நிகழ்காலத்தை, எதிர்காலத்தை நோக்குங்கள். // அப்பொழுது இத்தனை காலம் தாழ்த்தப்பட்டு, வாய்ப்புகள் மறுக்கப்பட்ட மக்களுக்கு என்ன பதில் சொல்வது?

  //ஆகையால் ஏதோ தமிழை கோவில்பால் நுழையவிடாமல் பார்ப்பனர்கள் தடுக்கிறார்கள் என்பது ஒரு அபாண்டமான திரிப்புவாதம்.//
  எங்கோ ஒப்புக்கு ஒட்டிக்கொண்டிருக்கும் சில பழக்ககங்களைக்காட்டி எப்படி முழுவதுமாக இருப்பதாக சொல்ல முடியும்? உங்கள் பேச்சின் படி தமிழ் Prevalent ஆக இருக்கிறதென்றால் பிறகு எதற்கு தமிழக அரச ஆணையை எதிர்த்து கோர்ட் கேசுகள் உள்ளன? தமிழ் உள் நுழைவதை தடுக்கத்தானே?

  //தமிழ்நாட்டிலுள்ள பெரும்பாலான அம்மன் ஆலயங்களில் பிராமண அர்ச்சகர்கள் கிடையாது. பூசாரிகள்தான். ஆனால் அதற்காக யாரும் அந்தக் கோவில்களை குறைவாக என்ணுவது கிடையாது. //
  சிங்கப்பூரில் அம்மன் கோவிலில் பூஜிக்க மாட்டேன் என்று சொன்ன பிராமணர் சொன்ன காரணம் “அம்மன், தாழ்ந்த ஜாதி கடவுள்” என்பதுதானே?


 2. அருமையான பதிவு அய்யா.

  பிராமனர்களை ‘பார்ப்பான்’ என்று சொல்வதில் இருந்தே அவர்கள் நோக்கம் அசிங்க வார்த்தை பிரயோகமும், காழ்ப்புனர்ச்சியை கக்க வேண்டும் என்பது தான்.

  கூக்கிள் எர்த் மூலம் லெமுரியா கண்டத்தை கண்டுபிடித்து அறிவாளிகள் நிறைந்த பூமியிது. இவர்களிடம் பேசிப்பயன் என்ன ?


 3. நூல் பிடித்த மாதிரி அழகாக எழுதியுள்ளீர்கள்.
  பாரபட்ச மற்ற அனுகுமுறை உங்கள் பதிவின் உள்ளது.
  ஏற்கனவே மூளை சலவை (இருந்தா தானே சலவை செய்ய என்று சிலர் சொல்கிறார்கள்) செய்ப்பட்டுவிட்டதால் மேற்கொண்டு எதையும் சிந்திக்க முடிவதில்லை,இவர்களால்.
  நிகழ்காலத்தில் இருந்து கொண்டு எதிர்காலத்தை சிந்திக்கவேண்டும்- அது தான இன்றைய காலக்கட்டத்துக்கு ஒத்துவரும்.
  போலிகளில் வருகைக்கு தயாராக இருங்கள். :-))


 4. ஐயா அனானி,

  தங்கள் சொந்தப் பெயரிலேயே வந்திருக்கலாமே. நீங்கள் அப்படி என்ன புதிதாகச் சொல்லி விட்டீர்கள்? பலர் பலமுறை சவைச்சுத் துப்பி, கசக்கி எறிந்த புளித்துப்போன வாதங்களைத்தானே முன்வைத்துள்ளீர்கள்!

  “பிறப்பால் மேன்மை” என்ற காலம் மலையேறிப்போய் பலகாலம் ஆகிவிட்டது. தற்போது என்ன மேன்மை அவர்களுக்கு பாக்கி இருக்கிறது? பழங்கதையையே பேசிப்பேசி இப்போது ஆவது என்ன? ஆமாம் ஐயா தாங்கள் பிறப்பால் மேன்மை அடைந்துள்ளோம் என்று பிராமணர்கள் எண்ணிக்கொண்டு அதனை நடைமுறைப் படுத்தி அதன்மூலம் பல வழிகளில் மற்றெல்லோரையும்விட சமுதாயத்தில் தலைமை நிலையில் உள்ளதாக காட்டிக் கொண்டது நிஜம். ஆனால் அது அந்தக் காலம். அதனையே பேசி அவர்களைச் சாடி என்ன பயன்? ஈசாப் கதைகளில் வரும் ஓநாயும் ஆட்டுக் குட்டியும்போல ஏதாவது காரணம் சொல்லி உன்னைத் திட்டிக் கொண்டேயிருப்பேன் என்றால் அதற்கு முடிவுதான் என்ன? அவர்கள் தங்கள் தவற்றிற்கான தண்டனைகளை பெற்றுவிட்டார்கள், பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். இன்றைய நிலையில் அந்த “ஈயத்தை’ பிரட்டிப் பிரட்டி துவைப்பதால் உங்களுக்குத்தான் என்ன கிடைக்கப் போகிறது? என்ன இருக்கிறது பார்ப்பனர்களிடம் திரும்பிப்பெற? போதுமையா செத்த பாம்பை அடிப்பது. வெறுப்புணர்ச்சியை உரம்போட்டு வளர்க்காதீர்கள்.

  இத்தனை காலம் உண்மையிலேயே வாய்ப்புக்கள் மறுக்கப்பட்டவர்கள் தலித்துகள்தான். அவர்களுக்கு அரசு பலவித சலுகைகளை அளிக்கிறது. அவர்களில் பெரும்பான்மையினர் அவற்றைப் பெற்று இன்று மேன்மையான நிலையில் இருக்கிறார்கள். கீரிப்பட்டி போன்ற நிகழ்வுகளுக்கும் மற்றும் ஆங்காங்கே தலித்துகளுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளுக்கும் ஆதிக்க சாதிகள்தான் காரணமேயன்றி பார்ப்பனர்கள் அல்ல. இது அனைவருக்கும் தெரிந்த உண்மை. தவறு செய்த பார்ப்பனர்கள் திருந்திவிட்டனர்; திருத்தப்பட்டனர் என்று வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். இன்று எவ்வகையிலும் சமுதாயத்தில் செல்வாக்கில்லாமல் இருக்கிறார்கள். ஏனையோர் மேல்நிலையில் இருந்துகொண்டு தலித்துகளை இன்னமும் படுத்துகின்றனர். அதற்கு பார்ப்பனர்களையே (ஊருக்கு இளைத்தவன் என்பதால்) சாடிக்கொண்டிருப்பது நியாயமா?

  கோர்ட் கேசுகள் பற்றியும் சிங்கப்பூர் நிகழ்ச்சியைப் பற்றியும் எனக்கு ஒன்றும் தெரியாது. விவரம் தெரிந்துகோண்டு பின் பதிலளிக்கிறேன்.

  எஸ்.கே


 5. //நீங்கள் அப்படி என்ன புதிதாகச் சொல்லி விட்டீர்கள்? பலர் பலமுறை சவைச்சுத் துப்பி, கசக்கி எறிந்த புளித்துப்போன வாதங்களைத்தானே முன்வைத்துள்ளீர்கள்! //

  புளித்துப்போன வாதமா?
  கீழ்தட்டு மக்களுக்கு இன்னும் பிரச்சனை தீரவில்லை. தீரும் வரை நானும் அவர்களும் பேசிக்கொண்டுதான் இருக்க வேண்டும். மனுவால் மேலே உட்கார்ந்துக்கொண்டிருக்கும் உங்களுக்கு இதெல்லாம் “புளித்துப் போன வாதமாக” தெரிவது ஆச்சரியமில்லை.
  From the flow of your writing I assumed you were open minded. Sorry, I made a mistake. Bye.


 6. //
  From the flow of your writing I assumed you were open minded. Sorry, I made a mistake. Bye.
  //

  Whose mind is closed and whose mind is open ?

  Limitless white lies are perpetrated in the name of social justice. Repeatedly they preach. The believers are cultivated. A simple question banishes their belief system. Then they become inconsolable. The escape route is shoot and scoot. (shoot the bullshit and scoot by saying that you are not open minded and bye!!)


 7. Dear Mr SK

  I came across your site by chance and found that the exchange (?) of views very interesting. I would like to add my comments on the “so-called brahmin superiority”. Brahmins still believe in the existence of God and Karmas and continue to perform the religious rituals (though abridged due to paucity of time and money)etc. unmindful of criticism. Believed to be the descendants of many maharishis (pooja balam and punniyam) they are naturally empowered to compete well even in any field/forum in spite of many hurdles. Genetic presence of Sanskrit (Gods’language!)in their blood makes all the magic either in action or appearance! Whether the present generations practice it or not, that is a separate thing to be discussed. Every one will vouch that Brahmins never indulged in anti-social activities nor hurt the feelings of other communities in any form.

  What is happening today in Tamilnadu? Every “backup” is given to students by the govt. either in school or college. How many brahmins discontinue studies in spite of poverty? The spirit of survival makes it all. Like a phoenix they rise from their ashes! With all the “backup” provided by State and Central Govt, why others are disqualified in campus interviews of many engineering/medical colleges on the pretext of “communication skill”? Who prevented them from learning with all the “backups” provided by the Central/State govts? Brahmins pull on their life only due to “Deiva Balam” and nothing else – and that makes it all! How many brahmins get govt. jobs these days in Tamilnadu/India? Brahmins are straining every nerve to compete in all fields. How many Indian and Tamil politicians are willing to resist the services of skilled brahmins even today? It is as simple as that – Jealousy makes everything! But I would suggest that it is possible for every one to succeed if they are willing to visit the World of Oneness of Kalki Bhagavan – who is going to transform India and the Indians by 2012! Wait for that day! Then there wont be any jealousy and criticism and India will be the dominant power in the world! Bye Bye


 8. No caste/religion/community is without its pitfalls and everyone have their share of crimes. The Bhramins are no exception. It is no secret that they have systematically denied education, perpetrated social injustices including untouchability, have been aloof without integrating with the rest etc. your past sins are making you pay. The violence that is being directed at you is not good but don’t forget that you are paying for your sins of forefathers. Likewise the children of those who cultivate violence today will reap it. Your self declared intellectual superiority is a recent phenomenon acquired through excluding others for a long time. Given equal chances and environments, everyone can compete to be the same! What is your problem in reciting tamil pujas in temples? Is your God ignorant of Tamil? Or is he petty enough to think that one language is superior over the other? Attitude like this aren’t going to help you move ahead!!!


 9. I am not a brahmin, but yet I have to share my views with the readers regarding the so called brahminism here. Dominating others and trying to suppress the weak is not prevalent in brahmin community only but in other communities as well. If you go to the south Tamilnadu, you will experience this sort of discrimination. The daliths are still ill treated there. Take the case of Uththapuram, why the govt is not able to act there? In some of the churches in Trichy district there are separate places for the daliths, mudaliars, and vanniyars. Is this not apartheism?

  There is a law in Tamilnadu, protecting the daliths from being called Paraiyan but there is no law to protect the brahmins from being called paappaan and paappaaththi? I sthis not discrimination?

  Now listen to the Hindu religious discourses by some brahmins in TV channels. The brahmins speak very good Tamil and even our non brahmin news readers dont speak Tamil that much well.

  The only thing I dont like with the brahmins is that they think that they alone are clean but in fact many agrahaarams stink even today.

Leave a Reply

Your email address will not be published.