இந்துமதமும் பார்ப்பனரும்

U.V.Swaminatha Iyerஇப்போதெல்லாம் தமிழ்மணத்தால் திரட்டப்படும் வலைப் பதிவுகள் பலவற்றில் பிராமணர்களை தரக் குறைவாக தாக்குதல் மிக அதிகமாகக் காணப்படுகிறது. வகை தொகை இல்லாமல் வாய்கூசும் சொற்களால் ஏசப்படுகிறது. இது தவிர எனையோர் பதிவுகளிலும் பின்னூட்டங்களில் பல பெயர்களிலும் பெயரிலிகளாகவும் நுழைந்து இன்னும் பல மடங்கு தரம் தாழ்ந்த முறையில் பார்ப்பன அர்ச்சனை நடக்கிறது. இவற்றை சிலர் மட்டுறுத்தல் செய்கின்றனர். ஆனால் பலர் அப்படியே விட்டுவிடுகின்றனர். பார்ப்பானைத்தானே திட்டுகிறார்கள், நமக்கென்ன என்கிற எண்ணமா அல்லது இவ்வாறு திட்டும் நபர் யாரென்று பலருக்குத் தெரியுமென்பதால் (அவருடைய எழுத்தை மட்டுறுத்தல் செய்தால் தாமும் தம் குடும்பத்தாரும் சந்தி சிரிக்கும் அவலத்தை சந்திக்க நேரிடும் என்பதால்) எதற்கு வம்பு என்கிற தற்காப்பு அணுகுமுறையா, நான் அறியேன்.

சரி. இதுபோன்று பதிவுகளை எழுதுபவர்கள் உண்மையில் பார்ப்பனர்கள்மேல் வெறுப்பு கொண்டவர்களா, அல்லது பார்ப்பன ஆதிக்க வெறியினால் பாதிக்கப்பட்டவர்களா என்கிற கேள்வியை கேட்டோமானால் அதற்கு பதில் அத்தகைய இடுகைகளைக் கூர்ந்து கவனித்தால் உங்களுக்குத் தெளிவாக விளங்கும். நீங்கள் இவற்றில் பொதுவாக ஒரு pattern-ஐக் காணலாம். அதாவது, பார்ப்பன வசை பாடுதலும், இந்துமத எதிர்ப்பும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து ஓரிழையாக செல்வதைக் காணலாம். இந்து மதக் கடவுட்களையும், வேதங்கள், உபநிஷத்துகள், இதிஹாஸங்கள் போன்றவற்றை திரித்து மனம் போனபடி விமரிசித்து, அதனூடே இதெல்லாம் பார்ப்பனர்கள் சூத்திரர்களையும், ஏனைய தமிழர்களையும் இரண்டாம்தர குடிகளாக நடத்துவதற்கான சூழ்ச்சிகள் எனக் கொண்டு செல்வார்கள்.

இதையெல்லாம் பார்க்கும்போது, இத்தகைய பதிவுகள் ஒரு திட்டத்துடன் செயல்படுகின்றனவோ என்று ஐயுறுகிறேன். அதாவது, முதலில் பார்ப்பானைத் திட்டு; அனைத்து பிரச்னைகளுக்கும் அவனையே காரணமாக்கு (இந்தியா பங்களாதேஷிடம் தோற்றது உட்பட). சரி, பார்ப்பன வெறுப்பை உமிழ்ந்தாயிற்றா, பின் இந்து மதம் பார்ப்பனருக்காக, பார்ப்பனரால் தோற்றுவிக்கப்பட்ட மதம், பார்ப்பனரல்லாத ஏனைய சாதியினருக்கும் இந்து மதத்திற்கும் யாதொரு தொடர்பும் இல்லை என்ற வாதத்தை நிலைநிறுத்த முயற்சி செய் – இதுதான் அவர்களின் முயற்சி. உண்மையில் அவர்களுக்கு பார்ப்பனர்மேல் யாதொரு வெறுப்பும் கிடையாது. இந்து மதத்தை அழிக்க நினைக்கும் சிலரால் ஏவப்பட்டு இவர்கள் இவ்வாறு திட்டமிட்டு செயல்படுகிறார்களோ என்கிற அச்சம் எழுகிறது.

ஆனால் இவர்களின் இத்தகைய முயற்சி வெற்றி பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் எப்படி உள்ளன என்று பார்க்க எண்ணினால், ஒரு முறை ஏதாவதொரு கோவிலுக்கோ, சமயச் சொற்பொழிவுக்கோ, திருவிழாவுக்கோ சென்று பாருங்கள். எங்கு பார்த்தாலும் “ஜேஜே” என்று கூட்டம் அலைமோதுகிறது. நாளுக்கு நாள் பக்தியும், ஆன்மீக ஈடுபாடும் பன்மடங்கு பெருகி வருவதைக் காண முடிகிறது.

சரி. இன்னிலையில் இந்து மதம் = பார்ப்பனீய மதம் என்கிற குதற்க வாதம் பார்ப்பனரல்லாதவர்கள் மத்தியில் எவ்வளவு எடுபடும் என்பதை சிறிது நோக்குவோம்.

இன்றைய எதார்த்த நிலையில் இந்தத் தலைமுறை பார்ப்பனர்கள் எவ்வாறு நடந்துகொள்கிறார்கள் என்பது அனைத்து சாதியினருக்கும் தெளிவாகத் தெரியும். அவர்கள் அண்டை வீட்டுக்காரர்களாவும், உடன் பணியாற்றுபவர்களாகவும் மேலும் தன்கீழ் பணியாற்றுபவர்களாகவும் இருப்பதால் அன்றாடம் அவர்களின் தற்கால அணுகுமுறைகள், கொள்கைகள், பழகும் முறை போன்றவை எல்லோரும் அறிவர். ஆகையால் பார்ப்பன ஒடுக்கல் இன்று சாத்தியம் இல்லை.

இந்த இடத்தில் ஒரு உண்மையை தெளிவாகக் குறிப்பிட விழைகிறேன். ஏனைய சாதியினரைவிட தாங்கள் மேலிடத்தில் உள்ளதாக பார்ப்பனர்கள் எண்ணிக்கொண்டு ஆதிக்க வெறியுடன் ஒரு காலத்தில் செயல்பட்டது உண்மைதான். அதற்காக தற்போது அவர்களை சாடுவது செத்த பாம்பை அடிப்பது போல்தான் என்பது எல்லா சாதியிலுமுள்ள நடுநிலையாளர்களுக்கு நன்கு தெரியும். இந்தத் தலைமுறை பார்ப்பனர்கள் பலர் பூணல்கூட அணிவதில்லை. பண்டிகை மற்றும் சடங்கு நாட்களில் கடையில் வாங்கி மாட்டிக் கொள்கிறார்கள். மேலும் திதி முதலிய சடங்குகளில் கூட “எங்கே செய்யாமல் விட்டால் ஏதாவது இடர் நேருமோ” எகிற பயத்தாலும், அவற்றை செய்தால் தனக்கும் தன் குடும்பத்தாருக்கும் எதாவது பலன் கிட்டுமே என்கிற ஆசையினாலும் உந்தப்பட்டு ஈடுபடுகிறார்கள் என்பது திண்ணம்.

தவிர, பார்ப்பனருக்கு பல கதவுகள் இன்று அடைக்கப்பட்டுள்ளன. மருத்துவக் கல்லூரிகளில் (எவ்வளவு மதிப்பெண் பெற்றிருப்பினும்) இடம் கிடைப்பதில்லை. இஞ்சினியரிங் கூட DOTE-2 கல்லூரிகளில்தான் கிட்டும். மேலும் தமிழக அரசில் அவர்களுக்கு வேலை கிடைப்பதேயில்லை. Central services-ல் (IAS, IPS போன்றவை) அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலர் உள்ளனரே தவிர அதற்கு அடுத்த நிலையில் தமிழக மாநில அரசில் எந்தப் பதவியிலும் அறவே இல்லை என்றே கூறலாம். எதோ கையை ஊனிக் கரணம் போட்டுப் பிழைத்துக் கொண்டிருக்க்கிறார்கள். இன்னிலையில் அவர்கள் எங்கே மற்றவர்கள்மேல் ஆதிக்கம் செலுத்துவது? பார்ப்பனர்கள் பெரும் பணக்கார்களல்ல, நிலச்சுவாந்தர்கள் அல்ல, வியாபாரம் செய்யத் தெரியாது; முதலீடு செய்யும் துணிவற்றவர்கள்; புஜபலம் இல்லாத நோஞ்சான்கள் – எனெனில் அவர்கள் உணவு முறையும், பழக்கவழக்கங்களும், மரபணுக்களில் பதிவாகியுள்ள உடல்நிலை பற்றிய ஆணைகளும் அவ்வாறு உள்ளன. பார்ப்பனர்களில் பலர் தற்போது பரம ஏழைகளாக அல்லல்படுகிறார்கள். அதுவும் வயதானவர்கள் நிலை மிகக் கொடுமை. பிள்ளைகள் கவனிப்பதில்லை. அதிக சேமிப்பும் கிடையாது. அவ்வாறு சேமித்தவர்கள்கூட அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு NBFC எனப்படும் சுருட்டும் கம்பெனிகளில் டெபாசிட் போட்டு போண்டியானவர்கள் அதிகம். ஏனெனில் இவர்களுக்கு தொழில் தொடங்கவோ, வியாபாரம் செய்யவோ தெரியாது. இவர்களில் பலர் மயிலை தெப்பக்குளக் கரையிலும், திநகர் சிவாவிஷ்ணு கோவிலருகிலும், இதுபோன்ற வேறுபல இடங்களிலும் மறுநாளைக்கு ஏதாவது திதி போன்ற காரியங்களுக்குக் கூப்பிடமாட்டார்களா என்று கையில் ஒரு கிழிந்து போன பிளாஸ்டிக் ஒயர்க் கூடையுடன் அலைவதைப் பார்க்கலாம் – கூலிக்குச் செல்லும் சித்தாள் போல.

ஆகையால் பிராமணர்களை ஏதோ சர்வ வல்லமை பொருந்திய demon போல சித்தரித்து, வெறுப்புணர்ச்சியை பரவலாகத் தெளித்து, அடுத்த கட்டமாக இந்து மதத்தை அழிக்கலாமென்று மனப்பால் குடிப்பவர்கள் தோல்வியடைவார்கள் என்பதை அறுதியிட்டுக் கூறலாம். ஏனெனில் இந்துக்கள் எல்லோரும் ஒட்டுமொத்த அறிவிலிகளல்ல. நாட்டு நடப்புகளை நன்கு அறிந்தவர்கள். பல நூற்றுக் கணக்கான வருடங்கள் அந்நியர்கள் பலர் ஆண்டபோதும், கோவில்கள் பல அழிக்கப்பட்ட பிறகும் இந்து மதம் இன்று தழைத்தோங்குவதற்குக் காரணமாக உள்ளவர்கள் பார்ப்பனர்களல்ல, ஏனைய சாதியினர்கள்தான்! இந்தக் கூற்றில் ஏதாவது ஐயமிருப்பின் அருகேயுள்ள கோவிலுக்குச் சென்று பாருங்கள்.

Brahmin learning vedaவேதங்களில் ஆதியானது ரிக் வேதமாகும். அதில்தான் மந்திரங்களும் இந்து மதத்தின் அடிப்படை விஷயங்களும் உள்ளன. தற்போது அதனை ஒரு ஆராய்ச்சிக் கண்ணோட்டத்துடன் வாசிக்கத் தொடங்கியுள்ளேன். நான் கண்டவரை நான்கு வர்ணங்கள் என்று அழைக்கப்படும் சாதி முறை ஆரியர்களால் அக்காலத் தேவைக்காக எற்படுத்தப்பட்ட பணிப்பங்கீட்டு முறையாகும். அப்போதெல்லாம் தொழிற்கல்வி கற்க ITI, polytechinic போன்றவை கிடையாது. தந்தையிடமிருந்து கற்றால்தான் உண்டு. மேலும் சிறு வயதிலிருந்தே தகப்பன் வேலையில் கூடமாட ஒத்தாசை செய்வதால் அந்தத் தொழிலும் பிள்ளைகளுக்கு அத்துப்படியாகி விடுகிறது. இவ்வாறுதான் வாழையடிவாழையாக சாதிமுறை பின்பற்றத் தொடங்கியிருக்க வேண்டும். மேலும் வேத காலத்தில் இதுபோன்ற சாதி முறை ஒரு சமநிலை வகுதியில் தான் இருந்தது (horizontal division). அனைவரும் வேதம் படித்தார்கள். அவரவர்கள் தத்தம் வேலைகளை உயர்வு தாழ்வின்றி செய்து வந்தனர். ஆனால் பிற்காலத்தில் தம் அரசாங்க செல்வாக்கினாலும், “ஆசான்” என்கிற நிலையினாலும், பார்ப்பனர்கள் தாங்கள் மற்றெல்லோரையும்விட உயர்ந்தவர்களாக ஆக்கிக் கொண்டார்கள் என்கிற உண்மையை யாரும் மறுக்க முடியாது. இவர்களைப் பின்பற்றி க்ஷத்திரியர்கள் மன்னர்களாகவும் போர்வீரர்களாகவும் மேலும் வைஸியர்கள் வணிகம் செய்து செல்வந்தர்களாக இருந்ததாலும் மேல்நிலை அடைந்தார்கள். சூத்திரர்கள் குற்றேவல் செய்பவர்களாக நான்காம் நிலைக்க்த் தள்ளப்பட்டார்கள். இது மிகக் கொடுமை. இத்தகைய நிலையைத் தொடங்கியவர்கள் என்கிற வகையில் அந்தக் கால பார்ப்பனர்களே இதற்குக் காரணம். ஆனால் அதற்காக இன்று அவர்கள் தரக்குறைவாக ஏசப்படுவதில் எந்த சாதியினருக்கும் ஒப்புதல் இல்லை.ஏனெனில் இந்தத் தலைமுறை பார்ப்பனருக்கு தன் ஜாதி மேலேயே ஒரு பிக்ஞையுமில்லை. மற்றவர் ஜாதி பற்றிய கேள்வியே அவர்தம் மனத்தில் எழுவதுமில்லை. பிழைப்பு ஓடினால் போதுமேன்ற நினைப்பில் உள்ளனர் என்பதை எல்லொரும் அறிவர். முன்பு தமிழக அமைச்சராக இருந்த சத்தியவாணி முத்து அம்மையாரும், மேலும் மாயாவதி போன்றோரும் பார்ப்பனர்கள் தலித்துக்களின் எதிரிகள் அல்ல என்று வலியுறுத்தியுள்ளனர்.

ஆனால் இந்த புரட்டுவாதிகள் சூத்திரர்களும் ஆரியர்களே என்பதை மறந்து விட்டனர். ஆரியர்கள்தானே தங்களுக்குள் பிரிவினை செய்து கொண்டனர்? அதனால் நான்கு வர்ணத்தவரும் ஆரியர்கள்தானே? பின் ஏன் பார்ப்பனரை மட்டும் தனிமைப் படுத்தி “ஆரிய நாயே ஓடிப்போ” என்ற கூப்பாடுபோடுகிறார்கள்?

உண்மையில் தலித் என்றும் ஆதி திராவிடர்கள் என்றும் அழைக்கப்படும் நண்பர்கள்தான் பிற்காலத்தில் ஆரியர்களுடன் கலந்தார்கள். இவர்களை கடைநிலையில் வைத்து கொடுமை செய்ததற்கு ஏனைய நான்கு வர்ணத்தவர்களும் பொறுப்பேற்க வேண்டும். நான் கிராமத்தில் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது என்னுடன் காத்தான் என்பவர் படித்தார். என் அடுத்த டெஸ்க் அவருடையது. எனக்கு ஆப்த நண்பர். ஸ்கூல் விட்டவுடன் ஆற்றில் இறங்கி நீச்சலடித்துவிட்டு, அவருடன் கிட்டிப்புள் விளையாடிவிட்டு அவருடைய வீட்டுக்குச்சென்று, அவருடைய தாயார் அன்புடன் கொடுக்கும் மோரைப் பருகிய பிறக்குதான் என் வீட்டுக்குச் செல்வது வாடிக்கை. ஒருநாள் அங்கு விளையாடிக் கொண்டிருக்கும்போது, அவ்வழியாக தன் வில்வண்டியில் சென்று கொண்டிருந்த மிராசுதார் ஒருவர், “என்ன தம்பி, நீங்க இந்த இடத்துக் கெல்லாம்? நம்ப இங்க வரலாமா?” என்றார். அவர் பார்ப்பனரல்ல. என் தந்தை அரசியலில் ஈடுபட்டிருந்ததாலும், முற்போக்கு என்ணம் கொண்டிருந்ததாலும் என் குடும்பத்தினர் எவரும் சாதிப் பாகுபாடு ஒருபோதும் பார்த்ததில்லை. என் சொந்த வீட்டில் இரண்டு பக்க அண்டைவிட்டுக் காரர்களில் ஒருவர் ஆங்கிலோ-இந்தியர், மற்றவர் மலையாளி கிறிஸ்தவர். பதினைந்து ஆண்டுகளாக ஒரு துளிப் பிணக்குமின்றி நெருங்கிய குடும்ப நண்பர்களாகப் பழகி வருகிறோம். அவர்கள் எங்களுக்குச் செய்துள்ள உதவிகள் அனேகம்.

சரி நேயர்களே! (இலங்கை வானொலி வர்த்தக ஒலிபரப்பு உபயம். அந்தக் காலத்தில் மயில் வாகனன். ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம், கே.எஸ்.ராஜா, வி.எச்.அப்துல் ஹமீது, அமீன் சயானி ஆகியோரின் விசிறி நான்.) இப்போதைக்கு இது போதும். என் வேதங்கள் பற்றிய சிந்தனைகளையும், அது சார்ந்த ஏனைய விஷயங்களையும் என் அடுத்த இடுகை மூலம் பகிர்ந்து கொள்கிறேன்.

இந்தப் பதிவு தமிழ்மணம் மூலம் தோற்றம் கண்டவுடன், என் மாஜி நண்பர் ஒருவரிடமிருந்து (அவர்தான், என்மேல் மிகக் கரிசனம் கொண்டு “ஏண்டா, நீ இன்னும் சாகல்லையா?” என்று குசலம் விசாரித்தவர்!) சங்கத்தமிழில் வடிக்கப்பட்ட பின்னூட்டமொன்றை எதிர்நோக்குகிறேன்!

39 Comments


 1. என்ன எஸ்.கே அய்யா,

  நீங்கள் இந்த ஜோதியில கலந்துவிட்டீங்களே!!!

  பார்ப்பனர்கள் மீது மட்டும் இணையத்தில் குறிவைத்து தாக்குகிறார்கள் என்று நீங்கள் சொல்கிறீர்களா? இல்லை பார்ப்பனர்கள் மற்றவர்கள் மீது தரக்குறைவான விமர்சனங்களை செய்வதில்லை என்று சொல்கிறீர்களா? என்றெல்லாம் எதிர்கேள்வி எழும்.

  நீங்கள் குறித்த பெரும்பாலான கருத்துக்களுடன் நான் முழுதும் ஒப்புகிறேன். நல்லதொரு நடுநிலை பதிவு. வாழு, வாழ விடு என்று நம் சமுதாயத்தில் எல்லோரும் ஓர் குலம் என்று இருக்க பழகுவோம். நன்றி


 2. அன்புடையீர்,

  உங்கள் பத்வில் நான் ஒத்துப்போகும் ஒரே இடம்….

  பிராமணர்களின் ஒரு சாராரின் பொருளாதார நிலமை மிகக்கேவலமாய் அதாவது சராசரிக்கும் கீழே இருக்கிறது என்பதுதான்.


 3. ஒரு நல்ல தமிழ் பதிவை படிக்கவைத்தற்கு நன்றி.
  கருத்துக்களும் ஆழமானவை.


 4. நடுநிலையான பதிவு. உண்மையில் இங்கு நடப்பது பார்பனர்களுக்கு எதிரான ஏசல் அல்ல என்பதை வெகு சிலர் தான் அறிவார்கள். பார்ப்பனர்களை எதிர்ப்பது போல இந்து மதத்தினரைத் தான் எதிர்க்கின்றார்கள். பெரியாரைத் வாழ்த்துவது போலவும், பார்ப்பனரல்லாத சாதிகளைத் தாங்குவது போல வேடம் போடுவதும், போலியாக வந்து சாக்கடை மொழியில் பின்னூட்டம் போடுவதும், போலியாக வலை பதிவு ஆரம்பித்து அதில் காது கூசச் செய்யும் ஆபாசக் கதைகள் எழுதுவதும் அவர்களே.

  வலை பதிவாளர்கள் பெறுகப் பெறுக, இந்தக் கூட்டத்தினரால் அவமானப்பட்டவர்கள் விலக விலக, உண்மைகள் மறைக்கப்படும். இதையெல்லாம் அறியாத பார்ப்பனரல்லாதவர் அவர்களுக்காக ஆதரவு தருவது தான் பரிதாபம்.

  ஆனால் அவர்கள் எல்லாம் சுத்த பச்சா பையனுங்க. ஒரு மயிரையும் புடுங்க முடியாது.

  – பார்ப்பனரல்லாத இந்து.


 5. கண்ணியமற்ற வெறுப்பு மொழியில் இவர்கள் எழுதும் எழுத்துக்கு இவர்களது இல்லங்களிலேயே மரியாதை வரவேற்பு இருக்கப்போவதில்லை!

  இந்துமதம் இந்தமாதிரியான சில்லுண்டிகள் செய்கிற சாக்கடை வசை மொழி டெக்னிக்கினால் சுருண்டுவிடும் என்றால் இன்றைக்கும் பிரதானமாக எழுதப்படும் பொருளாக இந்துமதம் என்ற ஒன்றே இல்லாமல் அல்லவா ஆகியிருக்கவேண்டும்?

  இந்த இணையப் பகுத்தறிவு இஸ், ஈய வாதிகள் சொல்வதைக் சத்தான கருத்தென்று அவர்களாலேயே ஏற்க முடியாது.

  இந்துமதத்தின் சரஸ்வதி நாக்கில் குடி இருப்பதானால் எங்கே மலம் கழிப்பாள்? அணிலுக்கு முதுகில் கோடு இருப்பது மாதிரி சீதைக்கு முதுகில் உண்டா? இல்லையா?எனும் பகுத்தறிவு ஆராய்ச்சிக் கண்ணோட்டம் கொண்ட சுயமரியாதைகள் ஈவெரா வெங்காயத்தைத் தமிழர் தந்தை என்கிறார்கள். இந்த சுயமரியாதை, பகுத்தறிவுச் சிங்கங்களிடம் ஈவெராவைத் தமிழர்க்கு தந்தை என்கிறீர்களே தமிழச்சிகள் எல்லாரோடும் படுத்தாரா? என்று இவர்கள் பாணியிலேயே திருப்பிக் கேட்டால் பொத்திக்கொள்வார்கள்.

  பகுத்தறிவு மப்பில் இருக்கும் வரை இப்படித்தான் எழுதுவார்கள் பேசுவார்கள். தமிழர் சிந்தனை, சொல்நயம், பேச்சுப் பண்பாட்டிற்கு அவமரியாதை இவர்களால்!


 6. அப்பா. எவ்வளவு நாட்கள் கழித்து இந்த விஷயத்தில் ஒரு நடுநிலைமையான பதிவைப் படிக்க முடிகிறது. உங்களையே அறியாமல் உங்களையும் இந்த ஜோதியில் இழுத்து விட்டு விடுவார்கள். உங்களுடைய பெரும்பாலான கருத்துக்களுடன் நான் ஒத்த்துப் போகிறேன்.


 7. அன்புள்ள நண்பரே.. நீங்கள் எழுதியது நூற்றுக்கு நூறு சரிதான். பிராமண எதிர்ப்பு என்பதுதான் இன்றைய இளைஞர்களின் அறிவுத்திறனுக்கு ஒரு ஆதாரம், ஒரு ஸ்டைல் என்பதுதான் இன்றைய யதார்த்த நிலை. உங்களுடைய குறிப்பின்படி சராசரி வருவாய்க்கும் கீழே இவறுமைக் கோட்டுக்கு உதாரணமாகத் திகழும் பல பிராமணக் குடும்பங்களை எனக்கும் தெரியும். பிராமணியத்திற்கும், பிராமணர்களுக்கும் இந்தக் காலத்தில் எந்தச் சம்பந்தமும் இல்லை. இது அனைத்துத் தரப்பு மக்களுக்கும் நன்கு தெரியும். ஆனாலும் இவர்கள் பிராமணியம் என்று பேசுவது தங்களது தவறுகளை மறைப்பதற்கு அவர்கள் கையாளும் ஒரு உத்திதான். நாம் கண்டு கொள்ளாமல் விட்டு விட வேண்டியதுதான். வேறென்ன செய்வது? பிராமணர்களின் எண்ணிக்கை குறைவாகவும், யார் என்ன சொன்னாலும் சொல்லாவிட்டாலும் கடவுள் என்ற ஒருவன் இருக்கிறான். அவன் பார்த்துக் கொள்வான் என்ற எண்ணத்தில் பிராமணர்களின் ஒதுங்கிப் போகும் நல்ல குணத்தாலும்தான் இந்த மூதேவிகள் மூக்கு முட்ட குடித்துவிட்டு உளறுவதைப் போல் உளறிக் கொண்டிருக்கின்றன. விட்டு விடுங்கள். அன்புடன் தமிழ்சரண்


 8. //நான் கண்டவரை நான்கு வர்ணங்கள் என்று அழைக்கப்படும் சாதி முறை ஆரியர்களால் அக்காலத் தேவைக்காக எற்படுத்தப்பட்ட பணிப்பங்கீட்டு முறையாகும்.//
  ஆரியர் என்பது இனமில்லை.ஆரியர் என்றால் சான்றோர் அல்லது நற்பண்புடையவர் என்றே பொருள். வர்ண முறை பாரத மண்ணில் உருவானது. அது பிறப்படிப்படையில் அமைந்ததல்ல. ஆனால் இடைப்பட்ட காலத்தில் பிறப்படிப்படையில் அமைந்திருக்கலாம். பிறப்படிப்படையிலான சாதி/வர்ண முறை ஸ்ரீ கிருஷ்ணரால் கண்டிக்கப்பட்டுள்ளது.


 9. // இதையெல்லாம் பார்க்கும்போது, இத்தகைய பதிவுகள் ஒரு திட்டத்துடன் செயல்படுகின்றனவோ என்று ஐயுறுகிறேன். //

  எஸ்கே, இதை நான் கூறிய போது என்னை அன்புடனும் உரிமையுடனும் கடிந்துகொண்ட நீங்கள் இப்படி எழுத நேர்ந்திருப்பது இப்பிரச்சனையின் தீவிரத்தையே காட்டுகிறது. வள்ளிக்கும் தெய்வானைக்குமிடையே பேதங்களை ஜாதி ரீதியாகக் கற்பிப்பதை இணையத்துக்கு வருவதற்கு முன்னால் என்னால் கற்பனை கூட செய்ய முடியாது. இதை செய்வது நாத்திகர்கள் என்று தம்மை வெளிப்படுத்திக் கொண்டவர்கள்.

  சமீபத்திய பதிவொன்றில் ஒரு பதிவர் நாற்பது ஆண்டுகளுக்கு முன் சீருடை அணிந்த சேவகர்கள் இருக்கும் உணவகத்துடன் ஒரு பிராமண உணவகத்தை ஒப்பிட்டு கண்ணாடிப் பாத்திர நாகரீகத்தை சிலாகிக்கிறார். இது மென்மையாகச் செய்யப்படும் வன்மையான பொய்ப் பிரச்சாரம்.


 10. அனைவரையும் வரவேற்கிறேன்.

  ஜயராமன்,

  நன்றி. ஆம். நாம் எல்லோரும் ஒருவரோடொருவர் மதிப்புடன் பழகி சுமுகமாக வாழ முயற்சி செய்வோம்.உண்மை எனும் ஜோதியில் அனைவரும் கலப்போமே!

  பங்காளி,
  ஒரு கருத்தாவது ஒத்துப் போகிறார்ப்போல் உள்ளதே என்று மகிழ்கிறேன்! மாற்றுக் கருத்துகளையும் தெரிவியுங்களேன். என் எண்ணங்களில் தவறிருப்பின் அறிந்து கொள்ளலாமே!

  வடுவூர் குமார்,

  “நல்ல தமிழ்” என்று என் எழுத்துக்கு சான்றளித்ததமைக்கு நன்றிகள். 🙂
  மீண்டும் வருக.

  உண்மை,
  நீங்கள் கூறியுள்ளவை அனைத்தும் உண்மையே. இது மிகவும் வருத்தப் படவேண்டிய நிலை. எதிர்காலத்தில் அனைவரும் உண்மையை உணர்வார்கள் என நம்புகிறேன்.

  ஹரிஹரன்,

  கருத்துக்களுக்கு நன்றி. உங்கள் பதிவுகளில் தங்களின் ஆறிவாற்றலைக் காணமுடிகிறது. ஆனால் நாம் தரம் தாழ்ந்து போகவேண்டாமென்று நினைக்கிறேன். தொடர்ந்து உண்மை நிலையை விளக்கிச் சொன்னால் நடுநிலையாளர் மனதில் மாற்றம் நிகழும் என நம்புகிறேன்.

  நந்தா,

  பாராட்டுதலுக்கு நன்றிகள். பெரும்பாலான கருத்துக்கள் உங்களுடன் ஒத்துப் போவது குறித்து மிக்க மகிழ்ச்சி.

  தமிழ் சரண்,

  தற்கால நிலையை நன்கு விளக்கியுள்ளீர்கள். Sad, but true.
  மிக்க நன்றி.

  அரவிந்தன் நீலகண்டன்

  ஆம். ஆரியர், திராவிடர் என்கிற சொல்லாட்சி அந்நிய ஆட்சியை நியாயப் படுத்த மாக்ஸ்முல்லர் போன்ற ஐரோப்பியர்களால் கண்டுபிடிக்கப்பட்ட ஆயுதம் என்று படித்திருக்கிறேன். இந்த dichotamy பற்றி தங்களின் விரிவான கட்டுரையை எதிர் நோக்குகிறேன்.

  எஸ்.கே


 11. லேட்டா இந்த விஷயத்துக்கு வந்தாலும் லேட்டஸ்டா வந்திருக்கிறீர்கள். நல்ல பதிவு.

  உற்சாகமாக பதிவுகள் போடுங்கள். அது உங்களை நல்ல உடல் நலனில் வைக்கும்.

  அன்புடன்,
  டோண்டு ராகவன்


 12. You have said that u r going thru Rig Veda. From where i can get those books? I would wish to know the details. You can send the details to my mail id(harivenkatram@gmail.com).

  Thanks


 13. ungal pathivu unmai.

  orkut matrum sila blog thalangalil ithai naan paarthirukiren.

  ippadi pesubavargal “atheist” endru cholli kolvaargal aanal niraya kelvigaluku avargalaal bathil koora mudiyaathu.

  February, 1952: Viduthalai (Dravidar Kazhagathin magazine)

  “Dravidane !!! Thamizhane !!!, paarpanar-allaatha, muslim-allaatha, krishuvan-allaatha, adi-dravidar allaatha, dravidane !! thamizhane !!”

  source:
  Ethnicity and Populist Mobilization, Narendra Subramanian.

  Periyar ezhuthiya katturayin muthal vaarthaigal.

  Periyaarai porutha varayil, “thamizhan” enbavan OBC Hindu, paarpaan, christian, muslim, sc/st ellaam “thamzihargal illai”

  adutha murai yaaravathu post panna, ithai use pannunga 🙂

  Nalla katturai !!


 14. எஸ்.கே அவர்களே , மூன்று,நான்கு வருடங்களுக்கு முன் ஆனந்தவிகடனில் மதன் கேள்வி-பதில் பகுதியில் இருந்து ஒரு கேள்வி.”ஏன் இந்தியாவால் உலகளாவிய போட்டிகளில் வெற்றிவாகை சூடமுடியவில்லை?”

  இதற்கு மதனின் பதில் “ஏன் நாம் செஸ்,கிரிக்கெட் போன்ற புத்தியைப் பயன்படுத்தும் போட்டிகளில் வென்று கொண்டு தானே இருக்கிறோம்” என்று.

  அப்படியானால் ஒலிம்பிக்ஸில் தங்கம் குவிக்கும் அமெரிக்கா,ரஷ்யா,சீனா நாட்டவர் எல்லாம் புத்தியில்லாதவர்களா?

  மற்ற சாதியினரின் மேல் உள்ள வெறுப்பினாலேயே மதன் இந்த அற்பத்தனமான பதிலைத்தருகிறார்.பார்ப்பன வெறுப்பு எப்படி உருவாகிறது என்பதற்கு ஒரு உதாரணம் தான் இது.

  //அனைத்து பிரச்னைகளுக்கும் அவனையே காரணமாக்கு (இந்தியா பங்களாதேஷிடம் தோற்றது உட்பட).//
  உங்களுடைய இந்த அங்கலாய்ப்புக்கும் கூட மதனின் பதிலிலேயே பதில் இருக்கிறது.


 15. I don’t have a tamil key board – hence the message in English

  A very neutral argument – It is true that this anti-brahminism is primarily aimed at anti hinduism – I am born in an orthodox iyengar family – so far in my life i have come across many many dalits who I count as some of my very best friends – i can point out atleast a 100 brahmins like myself who are as considertate towards non-brahmins as they are towards their caste.

  Certain foreign religions with missionary outlook are engaged in number games – get as much people on board to create a critical mass – once the inflection point is reached then their religion will automatically start spreading

  Dalits are the most simple souls who are being manipulated – their relative week economic status is being taken advantage of – by nature tamils including dalit tamils are a lot more emotional which emotion is being abused/misused by vested interests

  I was actively contributing to this forum – but after facing innumerable uncalled for insults i had left the forum briefly

  To the writer: By the way, I differ with your views on Aryan Invasion

  THE ARYAN INVASION THEORY HAS BEEN CHALLENGED AND PROVED FALSE – IT WAS VERY CONVENIENT FOR THE WESTERNERS TO DIVIDE AND RULE BASED ON THE ARYAN INVASION THEORY – THE DIVISION SPECIFIED IN THE VEDAS IS BASED ON ONE’S NATURE AND NOT BIRTH – THE VEDAS ONLY SPECIFIED VARNAMS – IT IS ONLY THE SOCIETY WHICH GOT SPLIT INTO INNUMERABLE CASTES/SUB CASTES – IT IS NO FAULT OF THE RELIGION – IT WAS FOR THE COMFORT OF THE THEN SOCIETY IN THE CONTEXT OF PRE INDUSTRIALISATION AND NON MATERIAL APPROACH TO LIFE

  Volumes can be written on the genuiness on the system. My only request to the adversaries is – Please be polite and respectful.

  I have personally been afffecte by the reservation system in TN – but thru’ numerous means/forums I actively support reservations for Dalits because they need to be economically uplifted – like they say in Hindi ‘pehle bhojan phir bhajan’

  By the ways, it is not all Dalits who are anti Brahmins – i know some wonderful souls in the Dalit who as pure and as simple as some of the really pure brahmins – PLEASE REMEMBER – TIME AND AGAIN HINDUISM HAS BEEN ATTACKED – TIME AND AGAIN DIFFERENT COMMUNITIES HAVE BEEN WOOED – THIS TIME THERE’S A BLATANT ANTI BRAHMIN FEELING BEING SPURRED AS BRAHMINS ARE A KEY LINK IN PRESERVING THE HINDU RELIGION

  To my very simple dalit friends: please do not get carried away by emotions and leave logic behind – these sort of debates have only gone on to preserve the purity of Hinduism – so will only do good for the Hindu religion in the long run – but please be respectful and non abusive

  Your very humble and pround tamil brahmin

  Very best wishes and sincere regards


 16. Some statistics:

  Population in TN (approx. estimates)

  Brahmin – 3 million (


 17. டோண்டு ராகவன், ஹரி, விஜய், ஜாலிஜம்பர், தமிழ் பிராமணர் மற்றும் “ஒரு பிராமணர்”, எல்லோருக்கும் நன்றிகள்.

  எனக்கென்னவோ இதுபோல் பதிவிடுதலில் ஆர்வம் குறைந்து ஒரு விரக்தி மனப்பான்மை தோன்றிக்கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் வேறு முக்கிய அலுவல்களை கவனிக்கலாமே என்று தோன்றுகிறது – அதுவும் உடல்நிலை அவ்வளாக சரியில்லாத நேரத்தில்.

  இந்த இழையில் நான் தொகுத்து வைத்திருக்கும் ஓரிரு கருத்துக்களை controversy எதிலும் கலக்காமல் பகிர்ந்துகொண்டபின் விடைபெறலாமென்று இருக்கிறேன்.

  எஸ்.கே


 18. அன்புள்ள எஸ் கே அவர்களுக்கு

  இது ஒரு பெரிய சதி வலை இதில் உள்ளே நுழைந்தால் மிகுந்த மன வேதனையும் விரக்தியுமே மிஞ்சும். இங்கு ஒரு பெரிய சதிகாரக் கும்பலாக இவர்கள் இயங்கி வருகிறார்கள். எழுதுவதும், திரட்டுவதும், அதை மீள் பதிப்பு செய்வதும் என்று ஒரு ஆர்கனைஸ்டு கிரிமினல்கள் இவர்கள். இதைப் பற்றி பேச ஆரம்பித்தால் எனது நிதானம் தவறி விடும். இவர்களின் முக்கியமான ஈனப் பிழைப்பு ஆபாசமாக எழுதி, மிரட்டல் செய்து நடுநிலைப் பதிவர்களைத் துரத்துவது. டோண்டு , ஹரி என்று ஒரு சிலரே இன்னும் தாக்குப் பிடிக்கிறார்கள். மற்றவை அடுத்த பதிலில் எழுதுகிறேன்.

  அன்புடன்
  ச.திருமலை

  ஓகை சார் உங்களிடம் எதிர்ப்புத் தெரிவித்த எஸ் கே வேறு எஸ் கே என்று நினைக்கிறேன். இந்த எஸ் கிருஷ்ணமூர்த்தி தற்சமயம் அவ்வளவாக எழுதாத காரணத்தால் சங்கர் குமார் என்பவர் எஸ் கே என்ற இனிஷியலில் எழுதி வருகிறார். அவர்தான் ஒவ்வொரு பதிவாகப் போய் அப்படி எழுதாதீர்கள் இப்படி எழுதாதீர்கள் என்று சட்டாம்பிள்ளத்தனம் செய்து கொண்டிருந்தார். ஆனால் அவர் தவறியும் தீரா விடக் கும்பல் பதிவுகளில் போய் அவ்வாறு சொல்லமாட்டார் அவரது போலித்தனமான ஒரு பக்கமமன அறிவுறைகள் கடும் எரிச்சலை உண்டு செய்யும். இந்த எஸ் கே வேறு, அந்த எஸ் கே வேறு. அவர் முருகன் படம் போட்டு ஆன்மீக பதிவு போடுவார் மிச்ச நேரங்களில் அப்படி சொல்லலதீர்கள் இப்படி எழுதாதீர்கள் என்று அறிவுரை வழங்குவார். குழப்பிக் கொள்ளாதீர்கள். இந்த எஸ் கே க்கு இங்கு எழுதும் அத்தனை ரவுடிக் கும்பல்களைப் பற்றியும் ஆதியில் இருந்தே தெரியும். இவர்கள் நோக்கம் என்னவவென்பதைத் தெளிவாக அறிந்தவர் இவர்.


 19. Hi,

  I was reading many Hindu/Brahmin bashing articles here and I was thinking exactly what SK had thought. Non Hindus are basically following the devide and conquer rule. They want Hindus to fight among them.

  Brahmins dominating and all that are gone long back. We cannot keep repeating what happened long back and live in the past. Now, non brahmins are doing well in studies and even financially.

  These so called periyar followers also join non hindus to bash hinduism. That is the sad part. If you are an athiest, why don’t you tell a muslim so called Allah is a made up character? They won’t. They know that Hindues will tolerate any insult.

  Atleast, finally someone has written something which makes absolute sense.

  Thanks


 20. மிகவும் அருமையான கட்டுரை. இது போல கட்டுரைகளை தமிழ் மணத்தில் படிப்பது வெகு அபூர்வம்


 21. நான் புள்ளி வைக்காத எஸ்கே! 🙂

  திருமலை அவர்களால் அர்ச்சிக்கப்பட்ட பாக்கியசாலியும் அடியேன் தான்!

  ஓகை அவர்களைக் அன்புடன் தடுத்ததும் யானே!

  அடுத்தவனைச் சுட்டிக் காட்டுகையில் மற்ற நான்கு விரல்கள் உன்னைச் சுட்டுவதை உணர் என்னும் பொன்மொழியை அப்படியே பின்பற்றுபவனும் நானே!

  என் வீட்டைச் சுத்தம் செய்யாமல், அடுத்தவனோடு மல்லுக்கட்ட விரும்பாதவனும் இவனே!

  கண்ணுக்குக் கண் எடுத்தால் உலகமே குருடாகித்தான் போகும் எனும் மஹாத்மாவின் சொல்லில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவனும் அடியேன் தான்!

  நான் யாருக்கும் புள்ளி வைப்பதில்லை…. என் பெயர் உட்பட!

  நம்மில் இருக்கும் குறைகளை முதலில் சரி செய்ய முற்படுவோம்.

  அடுத்தவரைப் பார்த்து அப்புறம் ஆத்திரப்படுவோம்!

  இதுவே என் கொள்கை.

  நம்மவர்[ஆத்திக, ஆன்மீக அன்பர்கள்] பதிவிலெல்லாம் சென்று வேண்டுகோள் விடுப்பதும் இதனாலேயே!

  இதனாலோ, அல்லது, இப்பெயர்க்குழப்பத்தாலோ, எவருக்கேனும் [குறிப்பாக திரு. கிச்சா அவர்களுக்கு] எந்தவகையிலாவது சங்கடங்கள் ஏற்பட்டிருந்தால் அவர்களின் மன்னிப்பைக் கோரி, விடை பெறுகிறேன்.

  அனைவருக்கும் நன்றி.

  அன்புடன்,
  [புள்ளி வைக்காத] எஸ்கே


 22. வருக, வருக புள்ளியில்லாத எஸ்கே அவர்களே!

  எப்படியோ என்னை ஒரு புள்ளியாக்கிட்டீங்க! 🙂

  பலர் உங்கள் பின்னூட்டங்களை என்னுடையது என்று நினைத்திருக்கிறார்கள் என அறிகிறேன் (புள்ளியில்லாததை பலர் கவனிப்பதில்லை. அவர்களே உங்களை விளிக்கும்போது புள்ளியைப் போட்டுவிடுகிறார்கள்). ஆனால் சங்கடங்கள் ஏதும் நேரிடவில்லை, இதுவரை. ஆனால் நம்மில் ஒருவர் தமிழ்மணத்தில் அடையாளப் பெயரை மாற்றிக் கொண்டால் நம் இருவருக்கும் நலம் என்று தோன்றுகிறது.ஆனால் என் selfishness உங்களை மாற்றிக் கொள்ள வேண்டுகோள் விடுக்கலாம் என்கிறது, உங்களுக்கு முன்பே எஸ்.கே என்ற பெயரில் தமிழ் பதிவுலகில் அறிமுகமாவன் என்கிற உரிமையுடன். ஆனால் என் வேண்டுகோளை மறுக்க உங்களுக்கு சகல உரிமையும் உண்டு என்பதை நான் அறிவேன்!

  மற்றபடி தங்களின் ஆன்மீகப் பதிவுகளை வாசித்திருக்கிறேன்.

  தாங்கள் எது சரி, எது தவறு என்பதில் மிக தீர்மானமான கோட்பாட்டுடன் இருக்கிறீர்கள் என்று தெரிகிறது. ஆனால் நீங்கள் பிறருடைய குற்றங்களை வலியப் போய் சுட்டிக்காட்டுவதை பலர் விரும்பாமல் இருக்கலாம். தங்கள் இஷ்டம்! திருமலை அவர்கள் மனதில் பட்டதை அப்படியே கூறும் நல்ல மனிதர். சிறந்த எழுத்தாளர்.

  திருமலை,

  நன்றி. வேலை பளுவின் நடுவே எனக்கு ஆதரவாக கருத்து இட்டதற்கு என் நன்றிகள். இன்னும் எவ்வளவு இடுகை (மற்றும் அவை தோற்றுவிக்கும் தாக்குதல்கள்) தாக்குப் பிடிப்பேன் என்று தெரியவில்லை.

  பாஸ்கர்,

  தங்கள் கருத்துக்களுக்கு நன்றிகள். உங்களைப் போன்றவர்களால்தான் நான் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறேன்.

  மனிதன்,

  இன்னொருவர் “மனிதன்” என்ற பெயரில் என்னை கண்டபடி திட்டிவிட்டுச் சென்றார். இந்த மனிதன் என்னைப் பாராட்டுகிறார்!!

  நன்றிகள் பல.

  அன்பன்,

  எஸ்.கே


 23. //இவ்வாறு திட்டும் நபர் யாரென்று பலருக்குத் தெரியுமென்பதால்//
  …ஆல்

  //அதற்காக தற்போது அவர்களை சாடுவது செத்த பாம்பை அடிப்பது போல்தான் என்பது எல்லா சாதியிலுமுள்ள நடுநிலையாளர்களுக்கு நன்கு தெரியும்.//

  மற்ற சாதியினரை சாட சொல்லுங்கள். அதற்கெல்லாம் மட்டும் ஏனோ தெகிறியம் இல்லை போல தெரிகிறது.

  //
  என்ன எஸ்.கே அய்யா,

  நீங்கள் இந்த ஜோதியில கலந்துவிட்டீங்களே!!!
  //
  நானும் அதை நினைத்து தான் வந்தேன்.

  //போலியாக வந்து சாக்கடை மொழியில் பின்னூட்டம் போடுவதும், போலியாக வலை பதிவு ஆரம்பித்து அதில் காது கூசச் செய்யும் ஆபாசக் கதைகள் எழுதுவதும் அவர்களே.//

  இது மாதிரி எழுதுபவர்கள் நிச்சயம் கவணிக்கப்படுவார்கள். ஆனால், அதிக காலம் தாக்குப் பிடிக்க முடியாது. காரணம், வெருப்பு மட்டுமே உமிழப்படுவது என்பது நெகடிவ் அப்ரோச். அது ரொம்ப காலம் நீடிக்காது.

  //அணிலுக்கு முதுகில் கோடு இருப்பது மாதிரி சீதைக்கு முதுகில் உண்டா? இல்லையா?எனும்//

  எங்கேயோ இடிக்குதே…

  //You have said that u r going thru Rig Veda. From where i can get those books? I would wish to know the details. You can send the details to my mail id(harivenkatram@gmail.com). //

  Me 2. (haiseenu2000@yahoo.com, srinivasank77@hotmail.com).


 24. அன்புள்ள புள்ளியில்லாத எஸ கே

  உங்களை ஏன் சார் நான் அர்ச்சனை எல்லாம் செய்கிறேன் 🙂 இந்த பாழாய்ப் போன தமிழ் இணையத்தில அவன் அவன் வீட்டில் எழவு நடந்தாலும் சரி, ஹோட்டல்ல விரலப் போட்டுத் தண்ணி கொண்டாந்தாலும் சரி, காலைல வெளிக்கு வரலைன்னாலும் சரி இடது கைக்கு எதுவோ அகப்பட்ட மாதிரி பார்ப்பானத்தான் திட்டுறானுங்க. அது சரி அவன் அவனுக்கு அரிப்பு, பொது இடத்துல சொறிஞ்சிட்டுப் போறான்னு கண்டுக்கிடாமல் எல்லோரும் போகும் பொழுது ஒரு சில பதிவர்கள், சோத்தில் உப்புப் போட்டுச் சாப்பிடும் பதிவர்கள் , கொஞ்சமாவது சூடு சொரணண உள்ள பதிவர்கள் நியாயமா நாக்கப் புடிங்கிக்கிற மாதிரி நாலு கேள்வி கேட்க்க ஆரம்பிக்கும் முன்னாலேயே நீங்கள் அந்தப் பதிவுகளில் எழுந்தருளி ஜீவகாருண்ய உபதேசம் செய்வது கடும் எரிச்சலல எனக்குத் தோற்றுவித்தது. அதைத்தான் நான் இங்கு குமுறி விட்டேன். உங்களிடம் வேறு யாரும் இதைப் பற்றி சொன்னார்களா இல்லையா என்பது தெரியாது. அதே சமயம் நீங்கள் காழ்ப்புணர்வு கொண்டு எழுதும் திராவிடக் குஞ்சுகள் பதிவுகள் பக்கம் போய் இப்படி எல்லாம் அறிவுரை கூறுவதில்லல. அவர்களுடன் கொஞ்சிக் குலாவு நீங்கள் அவர்கள் எழுதினால் கண்டு கொள்வதில்லை என்ற் ஆதங்கம் எனக்கு உண்டு. இன்னும் என்னனப் போன்ற உங்களிடம் மரியாதை வைத்திருக்கும் பல நண்பர்களுக்கும் உண்டு அவர்கள் சொல்வதில்லல நான் சொல்லி விட்டேன். எனக்கு மனதில் உள்ளதத மறைக்கத் தெரியாது, அதனால் நான் இழந்த நட்பு, உறவு பல. மற்றபடி உங்கள் பதிவுகளுடனும் கருத்துக்களுடனும் எனக்கு எவ்வித வேறுபாடும் கிடையாது.

  அன்புடன்
  ச.திருமலை


 25. திரு எஸ்.கே அவர்களுக்கு, தேவை இல்லாமல் ஒரு பெயர்ப் பிரச்சனையை உருவாக்கி எஸ்கே வியெஸ்கே ஆக மாற வழி செய்துவிட்டேன். நான் இன்னும் சற்று கவனமாக இருந்திருக்கலாம். உங்கள் இருவருக்கும் தொந்தரவு கொடுத்ததற்காக என்னை தயவு செய்து மன்னிப்பீர்களாக!

  நான் தெரிவித்த கருத்துகளில் உறுதியாக இருக்கிறேன்.


 26. ஓகை நடராஜன் அவர்களே,

  தொந்திரவு எதுவும் எனக்கு இல்லை. விஎஸ்கே அவர்களுக்கு இருந்திருக்கலாம். மேலும் நீங்கள் இதற்காக மன்னிப்பு கேட்கவேண்டியதில்லை. ஒரே பெயரில் இருவர் எழுதினால் இதுபோன்ற குழப்பங்கள் தோன்றுவது இயற்கையே. உங்களுக்கு மட்டும் என்றில்லை. பலர் இதற்கு முன்னமையே இதுபோல் இருவரும் ஒன்றென பலமுறை என்ணியிருக்கிறார்கள்.

  எப்படியோ, இந்தப் பிரச்சினைக்கு உங்களால் ஒரு வழியில் தீர்வு ஏற்பட்டுள்ளட்டுள்ளது. அதற்கு நான் உங்களுக்கு நன்றி தெரிவிக்கவேண்டும். அதே நேரத்தில் திரு. விஎஸ்கே அவர்களுக்கும் என் நன்றிகள். என் வேண்டுகோளுக்கு இணங்க பெருந்தன்மையுடன் அவர் உடனே பெயர் மாற்றிக் கொண்டார்.

  அன்புடன்,

  எஸ்.கே


 27. அருமை.

  பார்ப்பனர்கள் மீது மட்டும் தரக்குறைவான விமர்சனங்களை சொல்கிறார்கள்

  உங்களி கருத்துக்களுடன் நான் முழுதும் ஒப்புகிறேன்.

  ஒரு சூத்திரன் பிராமணனின் நிலைக்கு உயர்வதும் அதேபோல் ஒரு பிராமணன் சூத்திரனின் நிலைக்குத் தாழ்வதும் சாத்தியம். பிறவியின் பயனாக வர்ணங்கள் அமைவதில்லை, குணநலன்களின் அடிப்படையில்தான் அவை நிர்ணயிக்கப்படுகின்றன


 28. அடக்கப்பட்டவன் திமிரி எழும்போது அடக்கியவன் பின் வாங்குவது இயல்பு.உங்கள் பதிவு இப்படிப்பட்டதா???


 29. well said, the writter wrote what is happening to them at present,it is true. But very bad to the future of our next generation, because we cannot live without brain.


 30. பரம பிதா,

  மிக்க நன்றி. இன்றைய நிலையில் பிராமணர், சூத்திரர் என்கிற பாகுபாடெல்லாம் அர்த்தமில்லாதவை. ஒரு காலகட்டத்தில் அது நடைமுறையில் இருந்திருக்கலாம். அதற்காக இன்றைக்கு முழுதும் மாறுபட்ட சூழ்நிலையில் அதையே அரைத்துக் கொண்டிருக்க வேண்டாம் என்பதே என் பதிவின் மையக் கருத்து.
  ================

  சாம்,

  அடக்கப்பட்ட அனைவரும் ஒருநாள் பொங்கி எழ வேண்டியதுதானே. பிராமணர்கள் பின்வாங்கி பல ஆண்டுகளாகிவிட்டன. இனிமேல் பின்தங்கியவர் லிஸ்டில் இடம்பெற வேண்டியதுதான் பாக்கி!!

  நன்றிகள்.
  ====================

  பாலா,

  நன்றிகள் பல.

  அறிவுள்ளவர்கள் எல்லா பிரிவுகளிலும் உள்ளனர். மக்குகளும் எல்லா சாதியிலும் உள்ளனர். யாரும் அறிவுடைமைக்கு தனிப்பட்ட குத்தகை எடுக்க முடியாது.

  எனதடுத்த பதிவையும் (சீக்கிறமே எழுதுகிறேன்!) படித்துவிட்டு தங்கள் மேலான கருத்துக்களை இடுங்கள்.

  அன்பன்,
  எஸ்.கே


 31. A Gentle Reminder. You have said that u r going thru Rig Veda. From where i can get those books? I would wish to know the details.


 32. ஹரி,

  உடனே பதில் அளிக்காததற்குமன்னிக்கவும். தற்போதைக்கு என் குடும்பத்தாரிடமிருந்து பெற்ற பழைய உரை நூல்களை மேய்ந்துகொண்டிருக்கிறேன். பல வேதம் படித்தவர்களிடம் சந்தேகங்களைக் கேட்டு தெளிவு பெற்றுவருகிறேன். இந்த வார இறுதியில் புத்தகக்கடைகளுக்குச் சென்று மூலம் மற்றும் உரைகளை அலச வேண்டும் (lot of sifting to be done). பின் உங்களுக்கு தெரிவிக்கிறேன்.

  அதுவரை பொருத்தருள்க!

  எஸ்.கே


 33. // அதாவது, பார்ப்பன வசை பாடுதலும், இந்துமத எதிர்ப்பும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து ஓரிழையாக செல்வதைக் காணலாம். இந்து மதக் கடவுட்களையும், வேதங்கள், உபநிஷத்துகள், இதிஹாஸங்கள் போன்றவற்றை திரித்து மனம் போனபடி விமரிசித்து, அதனூடே இதெல்லாம் பார்ப்பனர்கள் சூத்திரர்களையும், ஏனைய தமிழர்களையும் இரண்டாம்தர குடிகளாக நடத்துவதற்கான சூழ்ச்சிகள் எனக் கொண்டு செல்வார்கள். //

  மிக சரியாக இந்த paatern ஐ அடையாளம் காட்டியிருக்கிறீர்கள் எஸ்.கே. நன்றாக எழுதியிருக்கிறீர்கள். இதை இன்னும் வெற்றிகரமாக ஆக்குவதற்கு இன்னொரு சூழ்ச்சியும் நடந்து வருகிறது – அதாவது இந்து மதத்தின் இணைபிரியாத அம்சங்களைப் பிய்த்து எடுத்து அவையெல்லாம் தனித் தனி விஷயங்கள், இந்து மதத்திற்கும் அவைகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று ஜல்லியடிப்பது (உ-ம்: யோகம், தியானம், பாரம்பரிய இசை, பரதம், ஆயுர்வேதம்..). இன்னும் கொஞ்ச நாள் போனால் கோயில்கள் என்பது சில கட்டடக் கலை ஆர்வலர்கள் கட்டியது, அதற்கும் இந்து மதத்திற்கும் சம்பந்தம் இல்லை என்றெல்லாம் கூட பேசத் தொடங்குவார்கள். ஆனால், சாதி வித்தியாசம், சாதிக் கொடுமை எல்லாம் கண்டிப்பாக இந்து மதம் தான் என்று சாதிப்பார்கள்!

  பிராமண வெறுப்பு என்பது இந்த சதித்திட்டத்தின் முக்கியமான அங்கம். இதைத் தோலுரித்து நீங்கள் மேலும் எழுத வேண்டும்.


 34. [ நம்மில் இருக்கும் குறைகளை முதலில் சரி செய்ய முற்படுவோம்.]

  வண்டியை நாம் சரியாக ஓட்டிக்கொண்டு போனால் மட்டும் பத்தாது. மத்தவனும் ஒழுங்காக ஓட்டவேண்டும். மேலே வந்து மோதுவதை புனிதமான ஒரு செயலாகச் செய்பவர்களை எதுவும் கேட்கக்கூடாது, ஆனால் ஏற்கனவே ஒழுங்காக ஓட்டுபவனை ஒழுங்காய் ஓட்டு என்று சொல்லுவதற்குப் பெயர் நடுநிலைத்தன்மையா?

  அவன் நிப்பாட்டினாத்தான் நான் நிப்பாட்டுவேன் என்று நாயகன் கமல் வசனம் பேசவில்லை. நான் நிப்பாட்டிட்டேன்யா. என்னைய நிம்மதியா இருக்க விடுங்க ஐயா என்றுதான் கேட்கிறோம். இதுவும் கூடாது என்று நீங்க சொல்லுவீங்களா ஐயா.

  [ஒரு சூத்திரன் பிராமணனின் நிலைக்கு உயர்வதும் அதேபோல் ஒரு பிராமணன் சூத்திரனின் நிலைக்குத் தாழ்வதும் சாத்தியம். பிறவியின் பயனாக வர்ணங்கள் அமைவதில்லை,]

  பரம பிதா என்று பேருக்கேத்தமாதிரி பதில் சொல்லுகிறீர்களே ஐயா. சூத்திரன் நிலை தாழ்ந்தது என்று உங்களுக்கு யார் சொன்னது? ப்ராமணன் நிலை உயர்ந்தது என்று யார் சொன்னது? எந்தத் தொழிலாலானும் அதை சரியாகச் செய்பவன்தான் உயர்ந்தவன்.


 35. நன்றி ஜடாயு,

  நீங்கள் குறிப்பிட்டுள்ள trend மிகவும் வருத்தப்படும்படியாகத்தான் உள்ளது. ஆனால் இந்த சூழ்ச்சி வலையில் ஹிந்துக்கள் சிக்காமல் இருக்கவேண்டும். அதற்கு முதல்படியாக பார்ப்பனர் ஆதிக்கம் என்கிற bogie-ஐ உண்மை கொண்டு உடைக்க வேண்டும்.

  மேற்கொண்டு எழுதுகிறேன்.
  ============

  பெங்களூர் அமேரிக்கரே,

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பின்னூட்டம் இட்டவர்களுக்கு நன்கு பதிலுரைத்துள்ளீர்கள். மிகவும் சரியான வாதங்களை முன்வைத்துள்ளீர்கள். நான் அடிக்கோடிட்டுக்காட்ட விரும்புவதும் இதுதான். இன்றைய காலகட்டத்தில் ஜாதியைக் கட்டிக்கொண்டு அழுவது சற்றும் பொருந்தாது. அதுபோல் ஒரு ஜாதி identity-யே இருக்கக் கூடாது என்பதே என் அவா.

  எஸ்.கே


 36. All the words blogged above are true.
  “Bare words Buy no Barley”.

  Is there any one to Lead the Issue. for each and every caste there are some person who can raise their voice. But we are finding very few people for raising voice for Bhramins.

  So Here are the things we should concentrate on future…

  Identify weakness in ourself. Clear those weakness first. Then Identify Strength of others. Try to overtake them again.

  Few Weakness I got from the above paragraph’s are …

  1) Physically weak due to food.

  According to US Research , Vegeterian people are much healthier when compared to Non-vegeterian.
  But we are not taking the right concentration of healthier food. There should be awareness in this.

  2) Most of the Old People are suffering from Diabetes.

  Most of the South Indian people are suffering from diabetes in their old age. this is due to high consumption of Carbohydrates ( raw rice ). So
  proper food like chappati, roti’s can be taken.

  3) No Seat for People in Medical Field.

  This is a 100% true fact. Even I Lost the opportunity for Medical& I know the pain. But Medical is not the only field. I see lot of Bhramin people in IT field & Banks.Most of the Bhramin’s are in US for their Higher studies.

  What we are thinking is that “We should get Credit without any Efforts” if that is the case it would never happen.
  We should put efforts for our Health
  We should put efforts for our Wealth ( Job & Studies )
  We should put efforts for our Respect in society also.

  Any comments on this are always welcome.

  Thanks,
  Siva.


 37. அன்புநிறை சிவா,

  உங்கள் கூற்று நூற்றுக்கு நூறு உண்மை. Irregular feeding habits coupled with genetic factors are also contributing to their obesity and lack of stamina.

  அவர்கள் mainstream-ல் சேர்ந்து நாம் எவருக்கும் எதிரியல்ல. உங்களைப் போல் ஒருவன் என்று காண்பிக்கவேண்டும். தாழ்த்தப்பட்டவர்கள்பால் இரக்கத்துடனும் நல்லுணர்வோடும் பழக வேண்டும்.

  நன்றி.

  எஸ்.கே


 38. what u told is exactly right,which was longstanding thoughts of mines also. especialy those who hate caste-ism, they dont allow their family girls to some other caste people. but they aggressively go for brahmin girls, where bramins might show mild opposition to their girls.situation like that, but why this people behaving like this? reason some uneducated people beliveing this people. they were exploited by this people.how? when they teaching bramins as their enemy, at the same time this people become rich in all aspects.the main problem is 4-5 peoples getting goverment job from same family, but they dont help to get the same to their cast people.forward community is not a inhertance. so govt. should think about the reservation also. once a person got govt job his family members should prohbited fron getting govt. job for some period then only opportunity to be widen to deprived people.

  as like most of the weportals blamimg telugus of tamilnadu and nayak rule of tamilnadu , but they afraid to speak muslim ruler atrocity in tamilnadu andin india.tamil kings ruled upto ganges and even south east countries also, just like that telugu rule preveiled for some period in tamilnadu. again in india next to punjabis tamilans are highest number in community wise who residing in other state and other country.


 39. Tamil Us உங்கள் செய்திகளை, பதிவுகளை உடனுக்குடன் எமது திரட்டியிலும் பகிர்ந்து கொள்ளுங்கள். பலரைச் சென்றடையும்.

  வணக்கம்,

  http://www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திரட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது தமிழ்US

  உங்களது பதிவு பகிரப்பட்டுள்ள அதேவேளை உங்களின் பயனுள்ள இடுகைகள், ஆக்கங்கள், பதிவுகள் என்பவை பலரைச் சென்றடைய இத் திரட்டியில் பகிர்ந்து உங்களின் ஒத்துழைப்பை நல்குவீர்கள் என நம்புகிறோம்.

  நன்றி..
  Tamil Us

Leave a Reply

Your email address will not be published.