அப்துல் கலாம் தகுதியானவர் அல்ல! – ஞானி

அப்துல் கலாம் தகுதியானவர் அல்ல! – ஞானி (நன்றி விகடன்)

உண்மை ஞானி அப்துல் கலாம்!யார்தான் எவரைப் பற்றித்தான் கருத்து வெளியிடுவது என்பது வகை தொகையில்லாமல் போய்விட்டது!
கருத்து மட்டும் சொல்லியிருந்தால் பரவாயில்லை, ஒரு உன்னத மனிதனைப் பற்றி கருத்தாழம் ஏதுமில்லாமல், “ஓ” போடுவதற்கு கைவசம் சில பக்கங்கள் கிடைத்துள்ளன என்பதற்காக மிக மோசமாக விமரிசிப்பது ஒரு நகைப்புக்கிடமான செயல்!

ஆனந்த விகடனில் சிறிது காலமாக திரு. ஞானி அவர்கள் சில பக்கங்களை நிரந்தரக் குத்தகையாக எடுத்திருக்கிறார். ஏதோ பெண்களின் மாதவிடாய் எப்படி வருகிறது போன்ற அந்தரங்க சமாசாரங்களைப் பற்றி எழுதிக்கொண்டிருக்கிறார் – அதுவும் “இதுவரை எங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியாமலே இருந்து விட்டதே! நீங்களல்லவா எங்கள் ஞான”க் கண்ணைத் திறந்து விட்டீர்கள்” என்று வரும் ரசிகர் மன்ற மடல்களை தனிப் பெட்டியாக வெளியிட்டு மார்தாட்டுதல் வேறு!

சரி, அந்த இருட்டு சமாசாரங்களையே எழுதிவிட்டுப் போகட்டும். மக்களின் “அஞ்ஞான” இருளைப் போக்க அவராலான கைங்கர்யம் என்று பக்கங்களைப் புரட்டி விட்டுச் செல்லலாம். ஆனால், இவர் அப்துல் கலாம் அவர்களைப் பற்றி அரைகுறை ஞானத்துடன் தாக்கியிருப்பதைப் பார்த்தால், இவர் உடலின் “கீழ் மட்ட”ப் பகுதிகளைப் பற்றிப் படிப்பதை விடுத்து, மேல் மாடியை அதற்கான நிபுணர்களைக் கொண்டு சிறிது தீவிர வட்டகைத்தல் மிக அவசியம் எனத் தோன்றுகிறது!!

சரி, இவர் என்னதான் எழுதியிருக்கிறார் என்பதைப் பார்ப்போம்:-

புதிர் 1: அப்துல் கலாம்

இணைய தளத்திலும் ஆங்கிலப் பத்திரிகைகளிலும் ‘அடுத்த ஜனாதிபதியாக வரும் தகுதி உடைய ஒரே மனிதர் அப்துல்கலாம்தான்; ஆனால், அவரை நம் கேடுகெட்ட, இழிவான அரசியல்வாதிகள் வரவிட மாட்டார்கள். இளைய தலைமுறையின் ஒரே நம்பிக்கை நட்சத்திரம் கலாம்’ என்று நடக்கும் பிரசாரம் பெரும் புதிராக இருக்கிறது. இதே கேடுகெட்ட, இழிவான அரசியல்வாதிகள்தான் கலாமை முதலில் ஜனாதிபதியாக்கினார்கள் என்பதையே இந்தப் பிரசாரகர்கள் வசதியாக மறந்துவிடுகிறார்கள்.

என்னைப் பொறுத்தவரை, கலாம் ஜனாதிபதி பதவிக்குத் தகுதியான-வரே அல்ல! காரணம், அவர் இந்தியாவை மேலும் மேலும் ராணுவமய-மாக்கிய விஞ்ஞானத் துறை நிர்வாகி என்பதுதான். அடிப்படை மருத்துவ வசதியும் கல்வியும் இல்லாத கோடிக்கணக்கான ஏழைகள் வாழும் நாட்டில், கோடிக்கணக்-கான ரூபாய்களை ராணுவத்துக்குச் செலவிடுவது சமூக விரோதச் செயல் என்பது என் தீர்மானமான கருத்து. வல்லரசு, வல்லரசு என்பதுதான் அவருடைய ஓயாத பல்லவி.

எங்கு சென்றாலும் மாணவ&மாணவிகளைக் கூட்டிவைத்துக்-கொண்டு பேசும் அபாரமான பொதுஜனத் தொடர்பு உத்தியை அவர் வெற்றிகரமாகக் கையாண்டு, இளைய தலைமுறையின் ஹீரோ என்ற பட்டத்தைப் பெற்றார். இது அவருக்கு ஒரு வசதியான முகமூடியாக அமைந்தது, அவ்வளவுதான்!

அவருடன் நேரில் உரையாடிய பிறகு, தங்கள் ஹீரோ வொர்ஷிப் பாவனையி-லிருந்து வெளியே வந்துவிட்ட கல்லூரி மாணவர்களை நான் பார்த்தேன். பாரதிதாசன் பல்-கலைக்கழக இளைஞர்-களுடன் அவரைச் சந்திக்கச் சென்றபோது, சந்திப்புக்கு முன் பரவசமாக இருந்தவர்கள் எல்லாரும், பின்னர் ஏமாற்றம் தெரிவித்தார்கள். சந்திப்புக்குப் பின் அந்த இளைஞர்களை வசீகரித்த வி.ஐ.பி. கிரண் பேடி. உண்மையில், குழந்தைகளின் பள்ளிக் கல்வி முதல் கல்லூரிக் கல்வி வரை எதுவும் அப்துல் கலாமால் அரை அங்குலம்கூட மாற்றியமைக்கப் படவில்லை. தாய்மொழியில் கல்வி கற்பிக்கப்பட-லாமா, கூடாதா? தொழிற் படிப்புக்கு நுழைவுத் தேர்வு சரியா, தவறா? நன்கொடை என்ற பெயரில் கொள்ளை அடிக்கும் கல்வி நிறுவனங்கள் மீது எப்படி நடவடிக்கை எடுப்பது? சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு, மேற்படிப்பில் தேவையா, இல்லையா? இப்படிக் கல்வி சார்ந்த மிக முக்கியமான எரியும் பிரச்னைகள் எதைப் பற்றியும் அவர் தீர்மானமாகக் கருத்துச் சொன்னதே இல்லை.

தாங்கள் விரும்பும் முஸ்லிம்கள் எப்படி இருக்க வேண்டும் என்று காட்டுவதற்காக பி.ஜே.பி. முன்னிறுத்திய இஸ்லாமியர் அவர். இந்து & முஸ்லிம் பிரச்னை பற்றியும் அவர் கருத்து தெரிவித்ததில்லை. தமிழகத்தில் சுனாமி பாதிப்பை நேரில் காண அவர் வரவில்லை. ஜெயேந்திரர் கைதின்போது அவரை வீட்டுச் சிறையில் மட்டும் வைக்க முடியுமா என்று அவர் அலுவலகத்திலிருந்து அன்றைய தமிழக அரசுக்குப் பல மன்றாடல் கோரிக்கைகள் வந்ததாக, அப்போது பத்திரிகைகளில் வெளியாகியிருக்கிறது.

தற்போதைய ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பல முறை திரும்பப் போட்டியிட விருப்பமில்லை என்று சொல்லி வந்தவர், ஜெயலலிதாவின் மூன்றாம் அணி முயற்சியின் போது, ஜெயிப்பது நிச்சயம் என்று இருந்தால், தயார் என்று சொன்னது அவருடைய சலனத்தை வெளிப்படுத்தியது.

அப்துல் கலாம் எப்படி ஒரு ஐகான் ஆக இளைய சமுதாயத்-துக்கு இருக்கிறார் என்பது எனக்கு இன்னமும் புதிர்தான்.

பாரதத்தின் விடிவெள்ளி அப்துல் கலாம்!திரு. கலாம் அவர்கள் இளைஞர் முன்னேற்றம் பற்றியும், நம் நாடு உலக அரங்கில் எல்லாத் துறையிலும் முன்னணியில் விளங்கவேண்டும் என்றும் தான் எழுதிய பல சிறப்பான நூல்கள் மூலமும், பல அரங்குகளில் நேரிடையாகவும் அனவரதமும் ஜபம் செய்து கொண்டிருக்கிறாரே, அதெல்லாம் இந்த “ஞானி”யின் ஞான திருஷ்டிக்கு எட்டவில்லையா? அவரென்னவோ ராணுவத்தை பற்றி மட்டும் பேசுவதாகவல்லவோ எழுதியுள்ளார்!

திரு. கலாம் அவர்கள் இந்த ஆண்டு குடியரசு தினச் சொற்பொழிவின் முதல் பகுதியைப் பாருங்கள்:-

“Friends, when we are celebrating the 58th Republic Day, I was thinking what thoughts I can share with you. Shall I talk to you on what message I got during my visits to various parts of our country and my interactions with the people particularly the youth with their dreams or shall I talk to you about the proud feeling I had when the farmers in Punjab succeeded in doubling the seed cotton productivity in tune with the world record …..”

அவரென்ன வல்லரசாக வேண்டும், வம்புச் சணடை இழுக்க வேண்டும் என்றெல்லாமா பேசுகிறார்? அவர் எழுதிய புத்தகங்கள் சிலவற்றின் தலைப்புக்களைப் பாருங்கள், அவர் காணும் கனவுகளெல்லாம் நம் பாரதத்தின் முன்னேற்றம் பற்றித்தான் இருக்கும். இத்தகைய ஒரு மகா புருஷனைப் பற்றி இகழ்ச்சியாகப் பேசுவதற்கு எந்த நாட்டுப்பற்றுடைய இந்தியனுக்கும் மனம் வராது என்பது திண்ணம்!

  • Mission India: A Vision for Indian Youth
  • Ignited Minds: Unleashing the Power Within India
  • India 2020: A Vision for the New Millennium

அது சரி, அவர் முதல் முறை ஜனாதிபதியாவதற்கு முன்னாலேயே ஒரு ராணுவத்துறை விஞ்ஞானியாகத்தானே இருந்தார்? அப்படியானால் இப்போது “வாய்ஸ்” விடும் ஞானி அப்போதே அதற்கு தன் ஆட்சேபனைகளைத் தெரிவித்திருந்தாரா? அல்லது, அவர் ஒரு விஞ்ஞானி என்னும் ஞானோதயம், இந்த முறை (சில தன்னலம் சார்ந்த அரசியல் காரணங்களால்) ஆளும் கட்சிகளின் ஆதரவு அவருக்கு இல்லை என்று முடிவாகத் தெரிந்த பிறகுதான் தோன்றியதா? நான் அறியேன். அறிந்தவர்கள் எடுத்துரைக்கலாம்!!

10 Comments


  1. This is very impartant news for Mr. Gnani.
    Gnani made a very big mistake in this issue. He is telling Kalam Made Mask as student Icon, Is he mislead the student? Or is he Made any war diclaration with other country.


  2. யார் இந்த ஞாநி? இவரது நீதி நெறிகள் அறம் எத்தகையது? இவர் எழுதும் ஆனந்தவிகடனில் தலித்துகளுக்கு எந்த அளவு இடம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது? அதற்கு எதிராக உண்ணாவிரதம் இருப்பா’ரா’ இந்த ஞாநி.(இந்த ஆளையெல்லாம் அவர் இவர் என எழுதுவதே எரிச்சலாக இருக்கிறது.) கலாம் செய்துள்ள சாதனைகள் என்னென்ன தெரியுமா இந்த ஞாநிக்கு? போலியோ பாதித்த குழந்தைகளின் செயற்கை கால் கனம் குறைய விண்வெளி தொழில்நுட்பத்தை பயன்படுத்த முனைந்த மேதை டாக்டர்.கலாம். நம் தேசத்திலேயே இருதய ஸ்டெண்டுகளை செய்து அவற்றின் விலை சர்வதேச சந்தையிலேயே குறைந்திட காரணமாக இருந்தவர் டாக்டர்.கலாம். அவரது புரா, அவரது பந்நோக்கு மருத்துவ தோட்டங்கள் ஆகியவை கிராமம் சார்ந்த பன்னோக்கு மேம்பாட்டுக்கு அச்சாரமாகும் தன்மை கொண்டவை. பாரதம் சார்ந்த மானுட நேய மகாமனிதர் அவர். அவரை பார்த்து சத்தம் எழுப்பும் கீழ்த்தர மனோவியாதி பிடித்த ஞாநி தன்னை நியாயவான் என நினைத்தால் முதலில் அரைகுறை ஆடை பெண்களை காட்டி பிழைப்பு நடத்தும் ஆனந்தவிகடனை அதனை நிறுத்து இல்லாவிட்டால் நான் அதில் எழுத மாட்டேன் என சொல்லவேண்டும். அதனை செய்ய வக்கில்லாதவன் அப்துல் கலாமை குறித்து பெரிய @#%$%^ போல பேசுவது …தூ ஞாநிதான் பிழைப்பான் இந்த பிழைப்பு கூடவே அவனை வெளியிடும் ஆனந்தவிகடன் எனும் மலம் துடைக்க கூட தரமில்லாத பத்திரிகையும்.


  3. Gnai oru agnai enbadhi medagu ABDUL KALAMAI parri edhuvadhal avar (kari umizhbavani kooda mariathai kudukinrra tamizh kulam nam)unarthivittar ,Avar abadha ezhuthukalai veliyitadhal vikatan kalanga pattu vittadhu Enna cheiyya idhu namaku kidaitha ezhuthu suthandhiram(pathrikai thanthiram) Bharathi ramachandran


  4. நன்றி, இராமச்சந்திரன்.

    தாங்கள் “தமிங்களீஷி”ல் எழுதியுள்ளதை இதன்கீழ் தமிழில் வடித்துள்ளேன் (சிறிது செம்மைப் படுத்தி!). கண்டு மகிழ்க! :-

    ஞானி ஒரு அஞ்ஞானி என்பது மேதகு அப்துல் கலாமைப் பற்றி எழுதுவதால் (காறி உமிழ்பனிடம் கூட மரியாதை கொடுக்கின்ற தமிழ்க் குலம் நாம்) உணர்த்தி விட்டார். அவருடைய அபத்த எழுத்துக்களை வெளியிடுவதால் விகடன் களங்கப்பட்டு விட்டது; என்ன செய்ய! இது நமக்குக் கிடைத்த எழுத்து சுதந்திரம் (பத்திரிக்கை தந்திரம்).

    பாரதி ராமச்சந்திரன்.


  5. nowadays , there are so many facilities to express our thoughts by blogs,sites,books and etc. Sometimes it got into wrong minds hand. That is all. I request “ganni” to read kalam’s “agni siragugal”. Yaar enna saathithu kizithargal enru ketpathu irukkattum.. nee natukkga enna kizithaaai “gnani”?. ( i don’t know “gnani’s blog. so i wrote it here … if anyone can.. forward this to arivu methai gnani (enra araivekkadu)


  6. i have retun amail to gani in that time but no reply. how this kind of people are thinking like this. they need some metal treatment.


  7. போலியோ பாதித்த குழந்தைகளின் செயற்கை கால் -in 1994 i saw in discovery chennal ,most advanced technalogy used for handicapt ,for running ,jumping also can do,now somebody surprising about that word of the great abdul kalam, why i dontknow,communication is that much poor in india,,i am not blame ok


  8. ஒவ்வொருவருக்கும் அவர் அவரது கருத்தை வெளியிட சுதந்திரம் உண்டு. ஞானியின் கருத்துக்களால் அப்துல் கலாம் அவர்களின் புகழ் ஒருபோதும் குறைந்து விடாது. அப்துல் கலாம் அவர்கள் ஆற்றிய பணிகள் என்றென்றும் நிலைத்து நிற்கும்.


  9. Though it is correct to say that Mr.Kalam is one of the best scientists our country has produced,I feel that he may not be good at administration as the President of India.When the case relating to Abzal is pending even prior to the term of Mr.Kalam, what action he took during his entire term? He simply sat on the file and preached national unity.Is is just because he is also a muslim?


  10. Kalam is a scientist no doubt. But he is more a manager than a technocrat. His opinions about Pokhran blast are far outstretched as he was not directly involved in the test. He is more knowledged about missiles but not about nuclear science.

Leave a Reply

Your email address will not be published.