சாலையோரங்களில் காய்கறிகளை கூறுகட்டி வியாபாரம் செய்பவர்களிடம் நீங்கள் பலவித பொருட்களை பலவித அளவுகளில் வாங்கியிருந்தாலும் தம்படி பிசகாமல் துல்லியமாக கணக்கிட்டு கண்சிமிட்டும் நேரத்தில் நீங்கள் கொடுக்கவேண்டிய துகையை கூட்டிச் சொல்வதைக் காணலாம். ஆனால் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களைக் கேளுங்கள் – உடனே அவர்களின் கைகள் தன்னையறியாமல் பைக்குள் செல்லும், கால்குலேட்டர்களை எடுக்க!
என்னுடன் பணியாற்றும் ஒருவர் சென்னையிலிருந்து புதுடில்லிக்கு படுக்கை வசதி வண்டியில் 6 டிக்கெட், குளிர்சாதன இரண்டாம் வகுப்பில் மூன்றரை டிக்கெட், மூன்றாம் வகுப்பில் 7 டிக்கெட் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே எவ்வளவு கூட்டுத் தொகை என்பதைச் சட்டென்று சொல்லிவிடுவார். அந்த அளவுக்கு இல்லாவிடிலும், சாதாரண பெருக்கல், கூட்டல் கூட மனதால் செய்யமுடியாத சமுதாயமாக நம் இளைஞர்கள் மாறிவிட்டார்கள்.
இதற்குக் காரணம் இதுபோன்ற மனப் பயிற்சி அவர்களின் கல்வித் திட்டத்திலும் இல்லை, பெற்றோர்களும் இத்தகைய மனதாற்றலை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை உணர்ந்தாரில்லை. கணினியும், இணையமும், கூகிளும் கைவசம் இருக்கும்போது மனக்கணக்கென்று ஒன்று எதற்கு என்பது இந்தக் கால கட்டத்தில் எழும் வாதம். ஆனால் மனத்துக்குளேயே இத்தகைய நுன்ணிய செயல்களை இயக்கும் (processing) ஆற்றலை வளர்த்தல், அவர்களின் உணர்வுபூர்வ செயலாற்றல் மற்றும் ஒரு பிரச்னையின் பல கோணங்களையும் தன் மனத்தினுள் ஆராய்ந்து உடனுக்குடன் சரியான முடிவெடுக்கும் திறன் போன்ற திறமைகளை வளர்க்க உதவும் என்பதால் அது ஒரு முக்கிய பயிற்சியாகும். This kind of brain games will help improve cognitive capabilities.
அடுத்த முறை ஒரு இளைஞரை காணும்போது இந்தக் கணக்கைப் போட்டு காகிதம், பேனா இல்லாமல் விடை சொல்லச் சொல்லுங்கள்:-
ஒரு டிஸ்கி: (இதனால் உங்களுக்கு சூட்டப்படப்போகும் பட்டப் பெயர்களுக்கும், உடற் காயங்களுக்கும், உடையப் போகும் கன்னாடிகளுக்கும் நான் பொருப்பல்ல!)
"இரெண்டரையே அரைக்கால் கிலோ வாழைக்காய் மூன்றரையே அரைக்கால் ரூபாய் என்றால், நாலரையே அரைக்கால் கிலோ வாழைக்காய் எவ்வளவு ரூபாய்?"
இந்தியரான மூகேஷ் அம்பானி உலகத்திலேயே பெரிய பணக்காரராக அறிவிக்கப்பட்டார். பங்கு மார்க்கெட் புள்ளி 20,000-த்தைக் கடந்தது. ஆகா நமக்குத்தான் எவ்வளவு பெருமை. இந்தியா வளம் பெற்றுவிட்டது! இந்த செய்திகளையெல்லாம் சோஃபாவில் சாய்ந்துகொண்டு, கையில் ஆவி பறக்க சுடுசுடு பஜ்ஜியை கடித்துக் கொண்டே கேட்டுவிட்டு ஒருவருக்கொருவர் கைகுலுக்க்கிக் கொண்டோம்!
உண்மையில் நம் நாட்டில் அத்தனை சுபிட்சம் நிலவுகிறதா?
பங்கு மார்க்கெட் குறியீடு 20,000-த்தை தாண்டிய அதே நாளில் 20,000 ஏழைகள் சுமார் 350 கிலோமீட்டர் தூரம் கால்நடையாகவே நடந்து தலைநகர் புதுடில்லி வந்து தர்னா செய்திருக்கிறார்கள்.
அவர்கள் வேண்டியது என்ன? பல காரணங்களுக்காக அரசு கையகப்படுத்திய நிலம் திரும்ப வேண்டும். அவர்களுக்கு ஜீவனத்திற்கு வேறு ஒன்றுமே கிடையாது. முழுப் பட்டினி. ஆம் பட்டினி! பட்டினி, பசி இதற்கெல்லாம் நமக்கு – நன்கு தின்று கொழித்து கொலெஸ்டிராலைக் குறைக்க காலையில் சோம்பலோடு நடை பழகுகிறோமே அந்த நமக்கு – என்னவென்று தெரியுமா?
நம் நாட்டில் இன்னமும் பல கோடி மக்கள் பசியால் வாடுகிறார்கள். அரசியல்வாதிகளைக் கேளுங்கள். ஏழைகளின் துயர் தீர்க்க அவதாரமெடுத்தவர்கள். உணர்ச்சி பொங்க வீராவேசத்துடன் பொதுக்கூட்டத்தில் பேசிவிட்டு, காரில் பவனி வந்தபின் கைத்தடிகள் படைசூழ விமானமேறிச் சென்று விடுவார்கள். பிரச்னை தீர்ந்ததா!
இரெயில் வண்டியில் நெடு தூரம் பயணம் செய்திருக்கின்றீர்களா? வண்டியில் கொடுக்கப்படும் உணவை நீங்கள் சாப்பிட்டபின் அதில் ஒட்டியிருக்கும் எச்சில் உணவுத் துண்டுகளை வழித்து உண்ணும் ஏழைச் சிறுவர்களைப் பார்த்திருக்கிறீர்களா! இதற்குமேல் என்னால் எழுத முடியவில்லை. வயிற்றை என்னமோ செய்கிறது.
ஆம், இவ்வுலகில் புத்திசாலித்தனமாக பிழைக்கக் கற்றுக் கொள்ளவேண்டும். எங்கோ யாரோ சொன்னார், எந்த நூலிலோ எழுதியிருக்கிறது என்று வரட்டு சித்தாந்தங்களில் மூழ்கி, தன் வாழ்க்கையையும், தன் குடும்பத்தினரையும் துயரத்தில் ஆழ்த்தி விடுபவர் அநேகம். மக்கள் மனம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை உணர்ந்து நம் எதிவினையை அதற்கேற்ப மாற்றிக் கொள்வதுதான் பிழைக்கும் வழி.
அமேரிக்காவில் எதைத் தொட்டாலும் "இது சீனாவில் செய்யப்பட்டது" என்று பறை சாற்றும் வாசகத்தைக் காணலாம். சென்ற ஆண்டு மட்டும் செஞ்சீனா சுமார் 300 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை உற்பத்தி செய்து அமேரிக்காவுக்கு (U.S) ஏற்றுமதி செய்திருக்கிறது! ஆனால் சீனா அமேரிகாவிலிருந்து பெற்ற வணிக மதிப்பு சுமார் 60 பில்லியன் டாலர் மட்டுமே!
ஆனால் உலகம் முழுவதும் உற்பத்தி செய்யப்படும் அனைத்துப் பொருட்களின் மதிப்புப்படிப் பார்த்தால், 21% அமேரிகாவில்தான் தயாரிக்கப்படுகிறது சீனாவின் பங்கு 8% தான்!
நிலத்தடியிலிருந்து தோண்டி எடுக்கப்படும் பெட்ரோலியம் எண்ணைக்கு ஈடான ஒரு மாற்று எரிபொருளைத் தயாரித்து வழங்க இந்தியா உட்பட பல நாடுகள் வெகுகாலமாக முயன்று வருகின்றன. ஏன், அந்த எண்ணையையே தொடர்ந்து பயன்படுத்தினால் என்ன, அதன் மாற்றுக்கு என்ன அவசியம்? காரணங்களை ஆய்வோம்:-
இன்றைய எரிபொருட்களான பெட்ரோல், டீசல், எரிவாயு எல்லாம் தோண்டத்தோண்ட சுரக்கும் கேணிபோன்ற நிலை கடந்து, "சரக்கு தீர்ந்தது அடுத்த கிணற்றைப் பார்" என்ற நிலைக்கு ஆளாகிக்கொண்டுள்ளன. ஆம் இந்த எரிபொருட்கள் வரண்டு போகக் கூடிய நிலை சீக்கிறமே ஏற்படும் அபாயம் உள்ளது
இந்த எண்ணை உலகில் சில நாடுகளில் மட்டுமே அதிகமாகக் கிடைக்கிறது. ஆகையால் எரிபொருள் பற்றாக்குறையுள்ள இந்தியா போன்ற பல நாடுகள் தங்கள் வருமானத்தில் பெருமளவை பெட்ரோல் இறக்குமதியிலேயே செலவிட வேண்டியுள்ளது.
இதுபோல் எண்ணைவளம் மிக்க உள்ள நாடுகள் அரசியல் மற்றும் மத உணர்வு தொடர்பான காரணங்களூக்காக திடீரென்று ஏற்றுமதியை குறைக்கலாம், அல்லது நிறுத்தியும் விடலாம். அப்போது இவர்களை நம்பியிருக்கும் இந்தியா போன்ற நாடுகளின் கதி என்ன!
இந்த நாடுகளும், எண்ணை சுத்திகரிப்பு முதலான தொழிற்களில் பெருமளவு ஈடுபட்டுள்ள பெரும் நிறுவனங்களும் தங்கள் இஷ்டத்திற்கு விலையை ஏற்றிவிடலாம். அப்போது ஏழை நாடுகள் திவாலாக வேண்டிய நிலை ஏற்படும்.
மேலும் எண்ணையை பயன்படுத்தி அரசியல் மற்றும் பொருளாதார ஆதாயங்களைக் கோரலாம். அல்லது நம் உள்நாட்டு விவகாரங்களில் மூக்கை நீட்டலாம்.
முக்கியமாக, இந்த எண்ணை டாலர்கள் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கப் பய்னபடுவதை இப்போதெல்லாம் கண்கூடாகப் பாற்கிறோம்!
மேற்கூறிய காரணங்களால் இந்தியா போன்ற நாடுகள் எரிபொருள் சேமிப்பு மற்றும் மாற்று எரிபொருள் என்ற திசையில் கடந்த பல ஆண்டுகளாக ஆய்வுகளையும் வளர்ச்சியையும் ஊக்குவிப்பதோடு, அவற்றில் பயன்பாட்டையும் படிப்படியாக அதிகரித்து வருகின்றன.
மேலும் நீடித்த, சுற்றுச்சூழலைக் கெடுக்காத ஆற்றல் வளங்கள் பற்றிய ஆய்வுகளும் நடந்து வருகின்றன.
இணையத்தில் தமிழின் பயன்பாடு நாளுக்குநாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. தமிழ் வலைப்பதிவுகள் (Blogs) மற்றும் தமிழ் இணைய வார இதழ்களும் தோன்றி நிறைய பிரபலமாகிக் கொண்டு வருகின்றன (திண்ணை, தமிழ் சிஃபி போன்றவை). தவிர, அநேகமாக எல்லா தமிழ் தினசரி மற்றும் வார இதழ்களும் தங்கள் இணையைப் பதிப்புகளை உலவ விட்டிருக்கின்றன. தினமலர், தினமணி போன்ற தினசரிகள், குமுதம் குழும இதழ்கள் போன்றவற்றை இலவசமாகவும், விகடன் போன்றவை பர்ஸைத் திறக்கச் சொல்லியும் தங்கள் முழு அச்சு இதழ்களுடன் கூடவே, அவ்வப்போது நம் நாட்டிலும், உலகிலும் நிகழும் செய்திகளையும் உடனுக்குடன் இணையத்தின் மூலம் தருகின்றன.
இவ்வாறு மிகப் பிரபலமாகியுள்ள தமிழ் இணையம், அனைத்து மக்களின் பங்கெடுப்பும் இல்லாமல் இருந்தால் விருவிருப்பு இருக்காது என்பதால், அதுபோன்ற இணைய தளங்களில் உங்கள் கருத்துக்களை இடவும் வசதி செய்யப்பட்டிருக்கிறது- இந்த வலைப்பூவில் உள்ளதுபோல!!
ஆனால் அனைத்துல தரக் கட்டுப்பட்டு மையத்தால் (ISO) இற்றைப் படுத்தப்பட்ட ஒருங்குறி என்றழைக்கப்படும் யூனிகோடு முறை பெருமளவு பயன்பாட்டில் இருக்கின்ற போதிலும், பல இணைய இதழ்கள் வெவ்வேறு விதமான எழுத்துருக்களை (font) பாவிக்கின்றன. இதனால் பயனர்களுக்கு சில சிரமங்கள் ஏற்படுகின்றன. தமிழக அரசும் TAM99 என்னும் யூனிசோடு முறையை பரிந்துரைக்கிறது. சீக்கிறமே எல்லா இணையப் பதிப்புக்களும் ஒரே வரையறைக்குள் வருவார்கள் என்பது திண்ணம்.
சரி. என் வலைப் பதிவுக்கு வருகிறேன்!
இங்கே நான் எழுதியுள்ள கருத்துக்களுக்கு எதிர்வினையாக ஏதேனும் மறுமொழிகளை (Comments) இட வேண்டும் என்று விரும்புகிறீர்கள். ஆனால், "தமிழில் எப்படி அச்சடிப்பது, கீ போர்டு (விசைப்பலகை) ஆங்கிலத்திலல்லவா உள்ள்ளது" என்ற ஐயம் உங்கள் மனத்தில் எழுவதாக வைத்துக் கொள்வோம். அந்நிலையில் உங்களுக்கு உள்ள ஒரே தீர்வு, தமிழில் அச்சடிக்க உதவும் விசைபலகையையும், எழுத்துருக்களையும் அவை கிடைக்கும் சில வலைத் தளங்களிலிருந்து தரவிறக்கம் செய்து, உங்கள் கணினியில் நிறுவி, பின்னர் அதனைப் பயன்படுத்துவதுதான். ஆனால் இது எல்லோருக்கும் சாத்தியமா? அலுவலகக் கணினி, இன்னொருவருக்குச் சொந்தமான கணினி, வெளியே இருக்கும் இண்டெர்னெட் மையங்கள் – இதுபோன்ற சூழலில் அத்தகைய செயல்பாடு வேலைக்காகுமா?
"கர்ணா" படத்தில் வரும் இப்பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று. வித்யாசாகரின் அருமையான இசை, தென்றல் போன்ற மெட்டு, என் அபிமான நடிகை, குளிர்ச்சியான காட்சியமைப்பு, தேன்மதுரக் குரல்கள்…..!
உலகின் மிகப்பெரிய செல்வந்தர் யார் என்று கேட்டால் இப்போது கூட புரூனே சுல்தான் என்றுதான் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கூறுவார்கள். அவர் எவ்வாறு தன் பணத்தை செலவழிப்பார் என்று இது வரை யாருக்கும் தெரியாது.
ஆனால் சமீபத்தில் அவர் மீது நடந்து வரும் ஒரு நீதிமன்ற வழக்கின் தொடர்ச்சியாக அந்த நீதிமன்றம் அவரது செலவுப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த ஆடம்பரங்கள் உலகத்திலுள்ள எந்த பணக்கரரும் கனவில் கூட என்ணிப்பார்க்க இயலாது! Indulgence at its extreme!
உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள திரைப்படத் துறையைச் சார்ந்த நடிகைகளை வரவழைத்து அவர்களைப் "பாராட்டி", "மனம் குளிர நனைத்து அனுப்புவது" சுல்தானின் பொழுதுபோக்கு திருவிளையாடுகளில் ஒன்று. இந்த பட்டியலில் பிரபல பாப் பாடகிகள் மற்றும் முன்னணி மாடல் அழகிகளும் அடங்குவார்கள்.
இந்த விவரங்கள் வெளிவந்த காரணம் அவருக்கும் அவரது ஆட்சியில் நிதியமைச்சராக இருந்த அவரது சகோதரர் இளவரசர் ஜெஃப்ரிக்கும் இடையே நடந்து வரும் உலகப் பிரசித்திபெற்ற குடும்ப வழக்குதான்!
சமீபத்திய மறுமொழிகள்