துளித்துளி

பந்தியில் நின்றாய் முந்தி
பரிசாய்ப் பெற்றாய் நல் தொந்தி,
அது குருதியின் இடை நிற்கும் நந்தி
இறுதியில் இயங்கும் இதயம் விந்தி
முடிவில் சடுதியில் இறப்பாய் இயல்புக்கு முந்தி
இனியும் இந்நிலை வேண்டுமா நீ சிந்தி – எனவே
இருப்பாய் பந்திக்குச் சற்றே பிந்தி

மனித மனம்

2

சமீபத்தில் நடந்த நிகழ்வு இது, சிவகாசியிலுள்ள பட்டாசுத் தொழிலகமொன்றில்.

வெடியைச் சுற்றியிருக்கும் காகிதங்களில் ஏதோ அரபு மொழி எழுத்து தென்பட்டதாம். இதுபோதாதா இஸ்லாமியரின் மத உணர்வுகள் புண்படுவதற்கு! உடனே அவர்கள் தங்கள் கண்டனத்தைத் தெரிவித்தனர். வெடிக்கடை அதிபரும் மன்னிப்புக் கேட்டுவிட்டார். வானுலகத்திலிருக்கும் ஆண்டவரும் திருப்தியடைந்துவிட்டார்!

kumarasthavam சில நாட்களுக்கு முன்பு ஒரு physiotherapy (இதற்கு இணையான தமிழ்ச் சொல் என்ன?) சிகிச்சையகத்தில் சேவைபெற வரும் நபர்களில் சிலரின் கால்களுக்கு ஒருவித பயிற்சி அளிப்பதற்காக சிறிய மஞ்சள் பைகளில் மணல் நிறப்பி தைத்து வைத்திருந்ததைக் கண்டேன். அவற்றில் எல்லாம் இந்துக் கடவுட்களின் படம்தான் வரைந்திருந்தது. அதன்மேல் கால் வைத்துத்தான் பலர் நின்று பயிற்சி பெறுகிறார்கள். இந்துக்கள் உட்பட அனைத்து மதத்தினரும் அதுபோல் எந்தவிதப் பிரச்னையையும் கிளப்பாமல் அதனைப் பயன்படுத்துகின்றனர். ஏனென்றால் அதனை ஒரு துணிப்பையாகத்தான் அவர்கள் அனைவரும் காண்கிறார்களேயன்றி, கடவுளாக அல்ல. உண்மையில் இந்து மதம் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் கடவுளை தம் உள்ளத்தினுள்தானே காணச் சொல்கிறது!

அப்படிப் பார்த்தால் கடவுளர்களின் படங்களைத் தாங்கி நிற்கும் பழைய காலண்டர்களையும், ஆன்மீக இதழ்களையும் என்ன செய்வது – அவற்றை கடவுளாகவே பார்ப்பதா, அல்லது வெறும் காகிதமாகக் கருதுவதா!

மனதை விரித்தால் மனித நேயம் வளரும்!

1

சௌந்திரராஜன் தெய்வபக்தி நிரம்பியவர். தினமும் பெருமாள் கோயிலுக்கு சென்று வந்து, பூஜைகளை முடித்தபின் தான் எதையும் உண்பார். எந்நேரமும் தெய்வ சிந்தனைதான். அதுவும் இராமன்தான் அவருடைய இஷ்ட தெய்வம். தியகராஜருடைய கிருதிகளை நெக்குருகப் பாடிக்கொண்டேயிருப்பார். அவர்கள் வீட்டு டிவியில் ஆன்மீக நிகழ்ச்சிகள்தான் ஓடிக்கொண்டிருக்கும். அவருடைய மனைவியும் அதேபோல் கோயில், குளம் என்றுதான் பேசிக்கொண்டிருப்பார். எந்தக் கோயிலில் என்ன விசேஷம் என்று விசாரித்து சென்ற வண்ணம் இருப்பார். விரதம், உபவாசம் என்று உடலை வருத்திக் கொள்வார். இதைத் தவிர அவ்விருவருக்கும் வேறு சிந்தனையே கிடையாது. செயலும் கிடையாது. தவிர, உதவி என்று யார் வந்து கேட்டாலும் தன்னாலியன்றதைச் செய்யத் தயங்கவே மாட்டார்கள். தம் ஜன்மமே பிறருக்குப் பயன்படத்தான் என்ற சித்தாந்தத்தில் பூரண நம்பிக்கை கொண்டவர்களாக அவர்கள் விளங்கினர்.

அவர்களுக்கு ஒரே குழந்தை, அவர்களது மகன். அவனுக்கு இப்போது 33 வயது முடிந்துவிட்டது. ஆனால் அந்தப் புத்திரன் விஷயத்தில் அவர்கள் அனவரதமும் தொழும் அந்த பெருமாள் அவர்களை மிகவும் சோதித்துவிட்டார்!

ஆம். அந்தப் பையன் ஆட்டிஸம் (Autism) எனப்படும் நுண்ணுணர்வு வளர்ச்சி குன்றிய நிலையில் உள்ளான். அது தவிர வேறு சில மூளை தொடர்பான கோளாறுகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கும்போது உட்கொண்ட வீரியமிக்க மருந்துகளின் தாக்கத்தால் பேசும் சக்தியையும் அநேகமாக இழந்துவிட்டான். ஒரு பெரிய உருவம் கொண்ட 1 வயது குழந்தைபோல அவனைக் கருதவேண்டிய நிலை.

அந்தப் பையனின் சில அடிப்படை இயல்புகள்-

  • அவனால் பிறர் பேசுவதை உள்வாங்கி எதிர்வினை புரிய இயலாது
  • அவனுடைய வீட்டில் எல்லாப் பொருட்களும் முன்பிருந்த நிலையிலேயே இருக்கவேண்டும் என்பதில் பிடிவாதமாக இருப்பான். ஒரு நாற்காலி சிறிது இடம் பெயர்ந்திருந்தாலும் உடனே மாற்றி வைத்துவிடுவான்
  • தன் குடும்பத்தினர் மற்றும் நன்கு பழகியவர்களைக் காணும்போது அவர்களின் தலைமுடி சிறிது கலைந்திருந்தால்கூட ஓடிச் சென்று அதனை சரி செய்வான். மோதிரம் சிறிது சுழன்றிருந்தாலும் நுணுக்கமாகக் கவனித்து அதனை நேராக்குவான்
  • அவனுக்குப் பிடித்தமான பழங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் எங்கிருந்தாலும் உடனே எடுத்துச் சாப்பிட்டுவிடுவான். அதனால் பெரும்பாலும் அடுத்தவர் இல்லங்களுக்கோ பொது இடங்களுக்கோ அவனை அழைத்துச் செல்ல மாட்டார்கள்
  • நடந்து செல்லும்போது எதிரே வரும் நபரின்மேல் இடித்துக் கொண்டே செல்வான்

இவையெல்லாம் இந்த நோயின் முக்கிய அறிகுறிகள்.

சௌந்திரராஜன் தம்பதிகளுக்கும் வயதாகி விட்டது. தங்களுக்குப் பிறகு இந்தப் பையனை யார் கவனமாகப் பார்த்துக் கொள்வார்கள் என்னும் கவலை அவர்களை வாட்டிக்கொண்டிருக்கிறது. அவனுக்கு பிறரிடம் பழகுவது எப்ப்படி, பொது இடங்களில் நடந்துகொள்வது எப்படி போன்றவை ஒன்றும் தெரியாது.

இந்தப் பையனுக்கு விமோசனம் என்ன?

அவன் பெயர் ஸ்ரீராம்!

அவர்கள் அன்றாடம் தொழும் ஸ்ரீராமன்தான் வழிகாட்டவேண்டும்!

நாடிய பொருள் கைகூடும்; ஞானமும் புகழும் உண்டாம்;
வீடு இயல் வழிஅது ஆக்கும்; வேரி அம் கமலை நோக்கும்;
நீடிய அரக்கர் சேனை நீறுபட்டு அழிய, வாகை
சூடிய சிலை இராமன் தோள் வலி கூறுவோர்க்கே.

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே;
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே;
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே -
இம்மையே இ'ராம' என்று இரண்டு எழுத்தினால்.

சார்ந்த வகை: மனித மனம் :: நாள்: . 1 மறுமொழி#

0

bagavan-1

bagavan-2

பெரிதாகத் தெரிய படத்தின்மேல் கிள்ளிவிடுங்கள்!

5

மனக் கணினிசாலையோரங்களில் காய்கறிகளை கூறுகட்டி வியாபாரம் செய்பவர்களிடம் நீங்கள் பலவித பொருட்களை பலவித அளவுகளில் வாங்கியிருந்தாலும் தம்படி பிசகாமல் துல்லியமாக கணக்கிட்டு கண்சிமிட்டும் நேரத்தில் நீங்கள் கொடுக்கவேண்டிய துகையை கூட்டிச் சொல்வதைக் காணலாம். ஆனால் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களைக் கேளுங்கள் – உடனே அவர்களின் கைகள் தன்னையறியாமல் பைக்குள் செல்லும், கால்குலேட்டர்களை எடுக்க!

என்னுடன் பணியாற்றும் ஒருவர் சென்னையிலிருந்து புதுடில்லிக்கு படுக்கை வசதி வண்டியில் 6 டிக்கெட், குளிர்சாதன இரண்டாம் வகுப்பில் மூன்றரை டிக்கெட், மூன்றாம் வகுப்பில் 7 டிக்கெட் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே எவ்வளவு கூட்டுத் தொகை என்பதைச் சட்டென்று சொல்லிவிடுவார். அந்த அளவுக்கு இல்லாவிடிலும், சாதாரண பெருக்கல், கூட்டல் கூட மனதால் செய்யமுடியாத சமுதாயமாக நம் இளைஞர்கள் மாறிவிட்டார்கள்.

இதற்குக் காரணம் இதுபோன்ற மனப் பயிற்சி அவர்களின் கல்வித் திட்டத்திலும் இல்லை, பெற்றோர்களும் இத்தகைய மனதாற்றலை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை உணர்ந்தாரில்லை. கணினியும், இணையமும், கூகிளும் கைவசம் இருக்கும்போது மனக்கணக்கென்று ஒன்று எதற்கு என்பது இந்தக் கால கட்டத்தில் எழும் வாதம். ஆனால் மனத்துக்குளேயே இத்தகைய நுன்ணிய செயல்களை இயக்கும் (processing) ஆற்றலை வளர்த்தல், அவர்களின் உணர்வுபூர்வ செயலாற்றல் மற்றும் ஒரு பிரச்னையின் பல கோணங்களையும் தன் மனத்தினுள் ஆராய்ந்து உடனுக்குடன் சரியான முடிவெடுக்கும் திறன் போன்ற திறமைகளை வளர்க்க உதவும் என்பதால் அது ஒரு முக்கிய பயிற்சியாகும். This kind of brain games will help improve cognitive capabilities.

அடுத்த முறை ஒரு இளைஞரை காணும்போது இந்தக் கணக்கைப் போட்டு காகிதம், பேனா இல்லாமல் விடை சொல்லச் சொல்லுங்கள்:-

ஒரு டிஸ்கி: (இதனால் உங்களுக்கு சூட்டப்படப்போகும் பட்டப் பெயர்களுக்கும், உடற் காயங்களுக்கும், உடையப் போகும் கன்னாடிகளுக்கும் நான் பொருப்பல்ல!)

"இரெண்டரையே அரைக்கால் கிலோ வாழைக்காய் மூன்றரையே அரைக்கால் ரூபாய் என்றால், நாலரையே அரைக்கால் கிலோ வாழைக்காய் எவ்வளவு ரூபாய்?"

3

நல்ல உள்ளம்!எங்கு நோக்கினாலும் மனித வெள்ளம். எல்லாமே சுதந்திரக் காற்றை சுவாசிக்க ஏங்கும் துடிப்பான இளம் குருத்துக்கள். அந்த இலட்சக் கணக்கான கண்களில் பயம் சிறிதும் இல்லை. அந்நாட்டு சரித்திரம் அதுவரை கண்டிராத அளவுக்குக் கடல் போல் திரண்டிருந்த கூட்டத்தை நோக்கி நிற்கிறார் ஒரு தனி மனிதன். ஆம், அவரைச் சுற்றி நின்றவை பல லட்சம் தலைகள். ஆனால் அவர் தன்னந் தனியனாகத்தான் அங்கு நின்றார். கண்களில் கண்ணீர் வெள்ளம். கையில் பிடித்திருந்த ஒலி பெருக்கி மூலம் அந்த இளம் உள்ளங்களை நோக்கி வேண்டுகிறார். "இங்கிருந்து கலைந்து சென்றுவிடுங்கள். நான் உங்களுக்கு எந்தவித உதவியும் செய்ய இயலாத நிலையில் உள்ளேன். நான் வெகு தாமதமாக வந்துள்ளேன். நிலைமை கைவிட்டுப் போய்விட்டது. தயவு செய்து விலகிச் செல்லுங்கள். உடனே செல்லுங்கள். இந்த இளந்தளிர்களின் இரத்தம் சிந்துவதை என்னால் தாங்க இயலாது" என்று இறைஞ்சி நிற்கிறார்.

அதுதான் அந்த மனிதர் வெளி உலகத்தைக் கண்ட கடைசி நாள்.

அந்த நாள்: 1989 மே மாதம் 19-ம் தேதி.

அந்த இடம் : டியனன்மென் சதுக்கம், பெயிஜிங், சீனா.

அந்த உயர்ந்த மனிதர் ஸாவோ சியாங் (Zhao Ziyang). அவர் சார்ந்த அமைப்புக்கு ஒவ்வாத நல்ல மனம் படைத்த அவருடைய ஆன்மா கடைசியாக பிரிந்த நாள் ஜனவரி 17, 2005. ஆனால் அவர் 15 வருடங்கள் முன்னமையே ஒருமுறை இறந்து விட்டார்.

சீன நாட்டின் பொருளாதார மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் அவர். கட்சி (கம்யூனிசம்) வேறு, ஆட்சி வேறு என்ற கொள்கையை கொணர முயற்சித்தவர். சீனப் பொருளாதாரத்தில் சீர்திருத்தம் மலர வழிவகுத்தவர். தன் தந்தையை தன் கட்சி அரசியல்வாதிகளே கொன்றபோதும், தான் கொண்ட கொள்கையில் பிடிப்பாக இருந்தவர். சீனத்தின் மக்கட் தொகை மிகுந்த சீசுவான் மாநில ஆளுநராக ஸாவோ பணியாற்றும்போது, மக்களுக்கு அவர்களின் நில உரிமையை வழங்கி உற்பத்தியை 80 சதம் பெருக்கினார். அவர் செய்த சீர்திருத்தத்தின் பயனால் அங்கு பஞ்சம் தீர்ந்தது. அக்காலத்தில் அவரைப் போற்றி "yao chi liang, Zhao Ziyang" (உண்ண உணவு வேண்டுமா, ஸாவோ சியாங்கைக் கேள்!) என்று கோஷமிடுவார்களாம். அந்த அளவுக்கு சீனத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக அவர் திகழ்ந்தார்.

The man!கலாசாரப் புரட்சியெனும் கொடுமைகளுக்குப் பிறகு சீன மக்கள் தனி மனித சுதந்திரத்தை சுவாசிக்க ஆரம்பித்தது இவர் காலத்தில்தான். ஆனால் அவர் அதற்காகக் கொடுத்த விலை மிக அதிகம். பதவி நீக்கம் செய்யப்பட்ட அவர் ஒரு கைதியாக, எந்த தனி மனித உரிமையும் இல்லாமல் 15 வருடங்கள் வீட்டுக் காவலில் வைக்கப் பட்டு, விடுதலை பெறாமலேயெ நேற்று காலமானார் (ஜனவரி. 8 அன்றே இறந்து விட்டார் என்கிறார்கள் சிலர்). அவர் செய்த தவறு, அப்பாவி மக்கள்மீது ராணுவத்தை ஏவக் கூடாது என்று கட்சியில் வாதாடியதுதான்! ஒரு உண்மையான ஜனநாயகவாதியின் சோக முடிவு அது. He was a right man at the wrong place and time!

அந்நாட்டின் கம்யூனிசக் கட்சியின் பொதுச் செயலராக அவர் இருந்தபோதுதான் சீனாவின் அடக்கு முறை அரசியல் அத்தியாயம் முடிந்து மக்கள் உண்மையான ஜனநாயகத்தை நோக்கி அடி எடுத்து வைக்க ஆரம்பித்தனர். ஆனால் அந்த அடிக்குப் பின் விளைவாக மக்களுக்குக் கிடைத்தது மிகப் பெரிய மரண அடி!

The attack
மனித இரத்தத்தினால் எழுதப்பட்ட சீன சரித்திரத்திலேயே ஜூன் 4 (1989) ஒரு மனத்தை உருக்கும் துக்க நாள். அன்றுதான் அந்த நாட்டின் ராணுவம் தன் ராட்சத டாங்க் படையைக் கொண்டு அப்பாவி இளைஞர்களை பல்லாயிரக் கணக்கில் நசுக்கிக் கொன்று கிழட்டு அரசியல்வாதிகளின் ஆதிக்க வெறியைத் தணித்த நாள். அங்கு மக்கள் எப்படி வேட்டையாடப் பட்டார்கள் என்பதை BBC – யின் இந்த வீடியோ படத்தில் காணளாம்:


YouTube - வீடியோவைக் காணுங்கள் Tiananmen Square Massacre

பாவம்

The rescue

The unknown Rebel!தனி மனிதனாக இராணுவ டாங்குகளை எதிர்கொள்ளும் இந்த இளைஞனின் தீரத்தையும் பயமின்மையும் காணுங்கள். இந்த இளைஞனின் பெயர் யாருக்கும் தெரியவில்லை. இவனுக்கு "டாங்க் மனிதன்" மற்றும் "Unknown Rebel" என்ற பட்டப் பெயர்கள் உள்ளன. இவனை சீன ராணுவம் கொன்றுவிட்டது என்கிறார்கள்; இல்லை இல்லை, எங்கோ பதுங்கியிருக்கிறான் என்கிறார்கள் – இது போன்ற பல கதைகள் உலவுகின்றன. ஆனால் மனிதனுக்கு சுதந்திர தாகம் மட்டும் வந்துவிட்டால், எத்தகைய மனத்திட்பம் கொண்டவனாக ஆகிறான் என்பதற்கு இது ஒரு எடுத்துக் காட்டு. அவன் ராட்சத டாங்கு களை எப்படித் தடுக்க முயலுகிறான் என்பதை CNN-ன் குறும்படத்தைக் காண இங்கு கிளிக் செய்யுங்கள். அவன் நின்று கொண்டிருந்த சாலையின் பெயர் "Great Avenue of Everlasting Peace". What an irony! ஆனால் சீனாவில் இந்த டாங்க் மனிதனைப் பற்றி மக்கள் யாரும் கருத்துரைக்கவோ எழுதவோ முயலுவதில்லை. ஏனெனில் அங்கு அரசு இயந்திரத்தின் அடக்கு முறைக்கு எதிராக எதுவும் செய்யமுடியாத நிலை இன்னும் நீடிக்கிறது.

டெங்குஅப்பாவி மக்களின்மேல் இந்த அடக்கு முறையை கட்டவிழ்த்து விட்டது யார் தெரியுமா? மாவோவுக்குப் பின் சீனாவின் விடிவெள்ளியாகக் கருதப்பட்ட டெங் சியாவோ பிங் (Deng Xiaoping) மற்றும் அவர் சீடர் லீ பெங். இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால் இந்த லீபெங், சீன மக்களால் மிகவும் விரும்பப் பட்டவரும் தன்னைவிட மக்கள் மத்தியில் புகழ் பெருகிறார் என்பதற்காக அவருடைய புற்று நோய்க்கு மருத்துவம் செய்வதற்கு மாவோவால் அனுமதிக்கப் படாமல் இறந்துபோனவருமான சூ என் லாயின் வளர்ப்பு மகன்.. இந்த சூ யென் லாய் தான் ஜவஹர்லால் நேரு காலத்தில் இந்தியாவுக்கு வந்தவர். "பஞ்ச சீலம்", "ஹிந்தி-சீனி-பாய் பாய்" போன்ற வாசகங்கள் சிலருக்கு நினைவிருக்கலாம். ஆனால் அதன்பின் எல்லாவற்றிற்கும் "பெப்பே" என்று நம்மீது படையெடுத்து, நேஃபா மற்றும் அக்சாய் சின் பகுதியில் பெரிய நிலப் பரப்பை சீனா தன்வசப்படுத்தியது இன்னொரு சரித்திரம்.

இந்த அடக்கு முறைக்குப் பின் ஸாவோ பதவி நீக்கம் செய்யப் பட்டு சிறையிடப் பட்டார். ஆனால் இறந்த பின்னும் அவர் இன்றைய சீனத்தின் அதிகார வர்க்கத்திற்கு சிம்ம சொப்பனமாக இருக்கிறார் என்று அரசியல் ஆராய்ச்சியாளர்கள் கருத்துத் தெரிவிக்கிறார்கள். ஏனென்றால் இவருக்கு முன்னால் சீர்திருத்தம் செய்ய முற்பட்ட தலைவர் ஹ்யூ யாவொ பெங் இறந்த பின் அவர் நினைவாக மக்கள் கூடியபோது வெடித்ததுதான் டியனன்மென் புரட்சி. அதற்கு முன் சூ யென் லாய் இறந்த போதும் இது போன்ற கிளர்ச்சி எழுந்தது.

இந்த உலகத்தில் நல்லவர்கள் கையில் எந்த அதிகாரமும் நிலைக்காது என்பதற்கு இன்னொரு உதாரணம் ஸாவோ சியாங்!

3-ல் இது-3123