எக்ஸ் திரை

வந்தே விட்டது!

xxxஆமாம். இனிமேல் “பலான” சமாசாரங்கள் – “சரோஜாதேவி கதைகள்” தரத்தில் உள்ளவை, நிற்கும் படங்கள், ஓடும் படங்கள், டாக்டர் பிரகாஷ் காட்டிய படங்கள் போன்றவை – “XXX” மார்க் போட்ட வலைத் தளங்களாக தனியாக இனம் பிரித்துக் காட்டப்படும். இதற்காக .xxx (.com, .net, .org போல) என்ற டொமைன் பெயர்கள் (TLD) பதிவு செய்யப்படும். இந்த முடிவை இதற்காக அமைக்கப்பட்டுள்ள ICANN (Internet Corporation for Assigned Names and Numbers) என்ற குழு பலத்த சர்ச்சைக் கிடையே எடுத்துள்ளது. இந்த விஷயம் கடந்த சில வருடங்களாகவே கடுமையாக விவாதிக்கப்பட்டு வந்துள்ளது.

இந்த முறையை அமல்படுத்தினால் பாலியல் பற்றிய தரவுகள், அடக்கங்கள் கொண்ட தளங்கள் ஒரு ஓரமாக .xxx வகைப்படுத்தி ஒதுக்கப்படும். இதனால் அவற்றை சுலபமாக இனம் கண்டு இளஞ்சிறார்கள் கண்களுக்கும் கருத்துக்கும் உட்புகாமல் மறைப்பது சுலபமாகும். இந்தக் காரணத்தைக் காட்டியே இத்தகைய முறை பாவிக்கப்பட வேண்டும் என்று பலர் முயற்சி செய்து வந்தனர்.

ஆனால், வேறு சிலரோ, பாலுணர்வு பற்றிய ஆரோக்கியமான சர்ச்சைகளைக்கூட இந்த வகை தளங்களாக சித்தரிக்கப் பட்டு தடை செய்யப்படும் ஆபத்து இருக்கிறது என்று வாதாடுகிறார்கள். கருச்சிதைவு, ஓரினச் சேர்க்கை முதலியவற்றைப் பற்றிப் பொதுவாக இனிமேல் பேசமுடியாது; அவற்றை மக்கள்முன் விவாதிக்கும் தளங்கள்கூட தடை செய்யப் படலாம் என்பது பல தனி நபர் உரிமைக்காகப் போராடும் குழுக்களுடைய பயம்.

இந்த ஆண்டு கடைசியில் அமுலுக்கு வரப்போகும் இவ்வகை டொமைன் பெயர்களை பதிவு செய்யும் முன்னுரிமை ICM ரெஜிஸ்ட்ரி என்ற அமைப்புக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

ஆகவே நண்பர்களே, “ஆண் குறி” போன்றவற்றைப் பற்றியெல்லாம் ஆசைதீர இப்பவே எழுதித் தள்ளிவிடுங்கள்!

2 Comments


  1. S.K., am not really great at reading/writing tamizh *sheepish* :-)…anyways, u have a great blog out here…hey, btw, how do u manage to maintain two blogs man ? i cant seem to manage with one…*phew* !!


  2. வண்டி நிறைய நன்றி, பரணி!

    நீங்களும் தமிழ் வலைப்பூவைத் தொடங்கலாம். இதுமிகச் சுலபம். உங்களுக்கு விருப்பமிருந்தால் நான் கற்ற வித்தையை உங்களிடமும் பகிர்ந்து கொள்ள சம்மதமே.

    ஆனால் இரணடு பாத்திகளிலும் தொடர்ந்து பயிரிடுவது சிறிது கடினமாகத்தான் உள்ளது. இயல்பாகவே நான் கொஞ்சம் சோம்பேறி (“கொஞ்சமா? வஜ்ர சோம்பேறி, ஒலிம்பிக் சோம்பேறி” – என் மனைவி).

    ஆனால் நீங்கள் செய்யலாம். கனமான விஷயங்களைப் பற்றியெல்லாம்தான் மாங்கு மாங்கென்று எழுதித் தள்ளுகிறீர்களே!

Comments are closed.