மெல்ல மறையும் பின்னல் அழகு!

Plaited beauty bedecked with Jasmine!

tossed-up-hairஎங்கே சென்றது நம் பாரம்பரிய பின்னல் முடியலங்காரம்? எங்கள் கிராமத்துப் பெண்மணிகள் முடியை அழுத்தி வாரி சிடுக்கெடுத்து, எண்ணை வார்த்து, தேங்காய் நார், கலர் கலராக சணல், சில்க் ரிப்பன் என்று அவரவர் வசதிக் கேற்றபடி நுணியில் சேர்த்துப் பின்னிப் பூவைத்து அழகாக நடந்து வருவர்! ஆனால் இப்போது? ஹும். “ஆத்தாடி மாரியம்மா!” என்று சிலிர்த்துப் பேயாடிக் கொண்டு பவனி வருகின்றனர். இரவில் பார்த்தால் பயமாக இருக்கிறது!

hairstyle

பள்ளி செல்லும் நாளில் இரட்டைப் பின்னல், பின் ஒத்தை. காலேஜ் நாட்களிலோ, “இதென்ன, கட்டுப் பெட்டியைப் போல் தலை முடியைப் பின்னுவது. அவிழ்த்து விடு. அது நம் விடுதலை மனப்பான்மையை முழுதும் பிரதிபலிக்கட்டும்!”

பிறெகென்ன, தலைவிரி கோலம்தான். மேலை நாட்டைப் பார்த்து சூடு போட்டுக் கொண்டு அவர்கள் மனத்தில் அது அழகு சேர்ப்பதாகவும், அப்டுடேட் நாகரிகமாக இருப்பதாகவும் கனவு காண்கின்றனர். சிக்குப் பிடித்துக் கொண்டு காணச் சகிக்க வில்லை என்பதுதான் உணமை!

பின்னல் போய் வந்தது “போனி டெயில்”. பின் முடி கொட்டி நூடில்ஸானவுடன் பரட்டைத்தலைதான் மிஞ்சும்!

உண்மை நிலை இப்படியிருக்கும் போது கொஞ்சம் கனவாவது காண்போமே!

ப‌டிய‌ வாரிய‌ த‌லை
முத்தில்லா கொலுசு
ஒற்றைப் பின்னல்
கை நிறைய‌ வ‌ளைய‌ல்
க‌ட்டிக் கொள்ள‌ சேலை
சாயம் இல்லா உதடு
மை இல்லா கண்கள்
நகப்பூச்சு இல்லா விரல்கள்
க‌வ‌லை இல்லா சிரிப்பு

Beautiful braided tress

 

நல்லெண்ணெய் தேய்த்து விட்டு
நன்றாக ஊற விட்டு
சிகைக்காய்த் தூளெடுத்து
சிகையெங்கும் பரவ விட்டு
வாசனைப் பொடி போட்டு
வாகாக அலசி விட்டு
சாம்பிராணிப் புகை போட்டு
சந்தனம் போல் மணக்க விட்டு
பாசமுடன் விரல்களினால்
பட்டுப் போல் கோதி விட்டு
அழகாக வகிடெடுத்து
அளவாகப் பிரித்தெடுத்து
அம்மா இடும் பின்னலில்தான்
அம்மம்மா எத்தனை ரகம்!

ஆயிரங் கால் பின்னல்
அழகான ஒற்றைப் பின்னல்
பள்ளிக் கென்றே பக்குவமாய்
மடித்துக் கட்டும் இரட்டைப் பின்னல்
பின்னாலே பாலம் கட்டும்
பாரமில்லா சைக்கிள் பின்னல்
கூட்டமாய்ப் பூக்கள் தைத்த
குஞ்சலம் வைத்த பின்னல்…

நன்றி: கவிநயா

3 Comments


  1. பின்னல் போய் வந்தது “போனி டெயில்”. பின் முடி கொட்டி நூடில்ஸானவுடன் பரட்டைத்தலைதான் மிஞ்சும்!

    /////////////

    பாரம்பரியத்தை மறந்ததால் தான் தமிழன் கஷ்ட படுகிறான் ….
    நல்ல பதிவு ………

    கவிதை அருமை……வாழ்த்துக்கள்


  2. Yes. I miss the sight of neatly combed and plaited beauty. The western styles have totally spoilt our traditional beauty.

    Alas!


  3. mudi alankaram manathai kavarum

Leave a Reply

Your email address will not be published.