உங்களுக்குத் தெரிந்தால் விடை / விளக்கம் அளியுங்களேன்!
- “ஆரம்பகட்ட சுதந்திரப் போராளிகள் அதனை பேருமே வெள்ளைக்காரங்களை ஆதரித்தவர்கள்தான்” என்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன் குமுதத்திற்கு அளித்துள்ள பேட்டியில். அது நிஜமா?
- இராமாயணத்தில் திருமனத்தின்போது இராமனுக்கு வயது பன்னிரெண்டு. சீதைக்கு ஆறு. இத்தனை சிறுவயதில் “அண்ணலும் நோக்கினாள், அவளும் நோக்கினாள்” என்பதெல்லாம் சாத்தியமா?
- கர்நாடக இசையை ரசிப்பதற்கு அந்த இசையின் இலக்கண டெக்னிகல் நுணுக்கங்கள் பற்றிய அறிவு தேவையில்லை. உண்மையில் அத்தகைய அறிவு இசையை இசையாக ரசிப்பதற்குத் தடையாக இருக்கும் என்று பாடகர் டி.எம்.கிருஷ்ணா ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் கூறியுள்ளார். அவருடைய கூற்று சரியா?
- நேரடியாக கச்செரிகளில் கேட்கும்போது நன்றாக இருந்த பாட்டு ரெகார்டு செய்து கேட்டால் நன்றாக இருப்பதில்லையே, ஏன்? ஒருவேளை நேரில் கேட்கும்போது visual effect தூக்கலாக இருப்பதால் பாடுபவர்களின் குறைகள் நம் மனத்தில் பதிவாவதில்லையோ!
- கர்நாடக இசைக் கச்சேரிகளில் பாடகர்களும் பக்க வாத்தியக்காரர்களும் மைக்செட் – சவுண்டு டெக்னீஷியன்களிடம் மன்றாடிக்கொண்டே இருக்கிறார்களே, ஏன்?
- பி.ஜே.பி தன் தனித்தன்மையை இழந்து காங்கிரஸ் கட்சியின் B Team போல் ஆகிவிட்டது என்று சிலர் அபிப்பிராயப்படுகிறார்களே, இது முற்றிலும் சரியா?
Permalink
1. எழுத்தாளர் ஜெயமோகனுக்கு பாரதியாரைப் பற்றியோ திலகரைப் பற்றியோ, சுப்பிரமணிய சிவாவைப் பற்றியோ தெரியாது போலிருக்கிறது. பாவம் அவர். இப்போதுதன் கீதையைப் படிக்கத் தொடங்கி அவருடைய பிளாக்கில் ஒருவருக்கும் புரியாத தமிழில் நூடில்ஸ் போல் என்னவோ எழுதியிருக்கிறார்!
6. ஆம். பிஜேபி பேசாமல் கடையை மூடிவிடலாம். அதன் தனித்தன்மையை அது முழுதும் இழந்துவிட்டது.