செய்தி: தினமல்ர் 2009-04-04
செங்கல்பட்டு: வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத பெண் சப்-இன்ஸ்பெக்டருக்கு செங்கல்பட்டு கோர்ட் பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டது.
கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினத்தைச் சேர்ந்தவர் வனிதாகுமாரி(24). கடந்த ஆண்டு மே மாதம் 26ம் தேதி தாம்பரத்திலிருந்து கல்பாக்கத்திற்கு அரசு பஸ்சில் சென்றார். பின் சீட்டில் அமர்ந்திருந்த முகையூரைச் சேர்ந்த வக்கீல் அன்பழகன் அவரை உரசியதாகக் கூறப்படுகிறது.
ஆத்திரமடைந்த அவர் அன்பழகனை கண்டித்தார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கண்டக்டருக்கும், வக்கீலுக்கும் வாக்குவாதம் முற்றி தகராறு ஏற்பட்டது. அன்பழகன் மானபங்கப்படுத்தியதாக வனிதாகுமாரியும், சில்லரை கேட்டதால் கண்டக்டர் தாக்கியதாக அன்பழகனும், அன்பழகன் தாக்கியதாக தங்கவேலும் தனித்தனியே சதுரங்கப்பட்டினம் போலீசில் புகார் செய்தனர். பணியிலிருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுகுணா தன்னை தாக்கியதாக வக்கீல் அன்பழகன் செங்கல்பட்டு தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நேற்று விசாரணையின் போது சப்-இன்ஸ்பெக்டர் சுகுணா ஆஜராகவில்லை. ஆஜராக விலக்கு அளிப்பதற்கான மனுவையும் தாக்கல் செய்யவில்லை. எனவே சப்-இன்ஸ்பெக்டர் சுகுணாவிற்கு பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிபதி கணேசன் உத்தரவிட்டார்.