பெண்குலத்தின் கோலம்

வயிற்றுப் பிழைப்புக்காகஅயல் நாட்டில் வேலை செய்து நொந்து நூலாகும் இந்தியர்கள் தங்கள் உற்றார் உறவினரால் வெறும் பணம் காய்ச்சி மரமாகத்தான் கருதப்படுகிறார்கள். என்.ஆர்.ஐ என்றாலே இங்குள்ள கடைக்காரர்கள்கூட விலையை ஏற்றிவிடுகிறார்கள். ஆனால் எவ்வளவுதான் பிறருக்காக தங்கள் கைக்காசை சிலவு செய்தாலும், அவர்கள் எதிர்பார்க்கும் உண்மையான உணர்வுபூர்வ உறவுகளை அவர்கள் பெறுவதில்லை.

இந்த அவல நிலை இப்போது இன்னும் மோசமடைந்திருக்கிறது, திருமணம் என்னும் பெயரில். இன்றைய இந்துஸ்தான் டைம்ஸில் வந்துள்ள செய்தியைப் பாருங்கள்:

ஜெயா என்னும் பெண் துவாரகையில் வசிக்கிறார். இவருடைய கணவர் அமேரிக்காவில் இருக்கிறார். கணவர் வெளியூரில் இருப்பதால் அந்த பெண்மணிக்கு ஆணுறவு தேவைபட்டிருக்கிறது. மாட்டியவர் தீபக் குமார் என்னும் டிரைவர். ஆனால் அந்த டிரைவர் இவருடைய தொடர்ந்த கள்ள உறவுக்கு இணங்காமல் இன்னொரு பெண்ணை மணந்துகொள்ள முடிவு செய்கிறார்.

வந்தது கோபம் அந்தப் பெண்குலத்தின் சிகரத்திற்கு!! இரணடு அடியாட்களை அமர்த்தி அந்த தீபக் குமாரின் முகத்தின்மேல் ஆஸிட் ஊற்றச் செய்கிறார். பாவம் அந்த டிரைவர், தன் ஒரு கண்ணையே இழந்து நிற்கிறார்.

காவல்துறை அந்தப் பெண்மணியையும் அவருடைய அடியாட்கள் இருவரையும் கைது செய்துள்ளது.

என்.ஆர்.ஐ இளைஞர்களே, இதுபோன்ற திருமணங்கள் உங்களுக்குத் தேவைதானா? உங்களை நினைத்தால் “ஐயோ பாவம்” என்றுதான் தோன்றுகிறது! 🙁

8 Comments


  1. எஸ். கே ஐயா,

    /// என்.ஆர்.ஐ இளைஞர்களே, இதுபோன்ற திருமணங்கள் உங்களுக்குத் தேவைதானா? ///

    இந்த இளைஞர்கள் வேறு என்ன செய்ய முடியும் ஐயா? அவர்கள் தங்கள் கலாசாரத்திற்கு ஆசைப்பட்டு இங்கு பெண்களை மணம் முடிப்பது ஒரு தவறா ஐயா?

    நீங்கள் மாற்றி “இது போன்ற என்.ஆர்.ஐ திருமணத்திற்கு ஆசைப்பட்டு சீரழிவது தேவையா” என்று பெண்களை அல்லவா கேட்கவேண்டும். அதுவும், இப்போதெல்லாம் இந்த என்.ஆர்.ஐ மோகம் வெகுவாக குறைந்து விட்டது என்று நினைக்கிறேன். பல பெண்கள் இப்போதெல்லாம் உள்ளூர் மாப்பிள்ளைகளாகவே தேர்ந்தெடுக்கிறார்கள். பாவம் என்.ஆர்.ஐ க்கள் என்று நீங்கள் சொல்வது இந்த விதத்தில் உண்மைதான். அவர்களுக்குத்தான் நல்ல பெண்கள் கிடைப்பது கடினமாய் இருக்கிறது.

    இப்படி மணம் முடித்து தனியே தவிக்க விட்டுச்செல்லும் இந்த பிள்ளைகளை நான் குறை சொல்லுவேன்.

    பல வெளிநாட்டு என்.ஆர்.ஐக்கள் அப்பாவிப்பெண்களை ஏமாற்றி அவர்கள் வாழ்க்கையை சீரழித்தும் இருக்கிறார்கள். அதனால், பெண்கள் பக்கமே முழுக்க குறை என்று சொல்ல முடியாது!

    நன்றி

    ஜயராமன்


  2. உண்மையில் சீரழிவது யார் என்பது கேள்விக்குறியது.

    http://www.498a.org/ தளத்திற்குச் சென்றால், அங்கு தென்படும் என்.ஆர்.ஐ இளைஞர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர் படும் அவலங்கள் நம் மனதை நோகச் செய்கின்றன.

    நம் பண்டைய குடும்ப முறையை ஒழுங்கே கட்டுக்கோப்புடன் தக்க வைத்திருந்தது பெண்கள்தன். அவர்களே இப்போது தளையறுத்துப் போகத் தொடங்கியபின் திருமணத்தில் அர்த்தமேயில்லை என்னும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

    வருகைக்கு நன்றி ஜயராமன் அய்யா!!

    எஸ்.கே


  3. திரு எஸ் கே மற்றும் திரு ஜெயராமன்

    பெண் விடுதலை என்ற பெயரில் கட்டவிழ்த்து விடப்பட்ட இந்த கேலிக்கூத்தால் உண்மையில் சீரழிவது இந்திய குடும்பங்களும், இந்திய கலாசாரமும், இந்திய வயோதிகர்களும், சிறு குழந்தைகளும் எம்று நீள் பட்டியலே இருக்கிறது

    பெற்றோர் மற்றும் வயோதிகர் பாடு : பாடுபட்டு, சின்ன வயது முதல் பைய்யனுக்கு படம் சொல்லிக்கொடுத்து, பணத்தை மிச்சப்படுத்தி அவனை பெரிய கல்லூரியில் சேர்த்து, தங்கள் பிள்ளைகளை நன்கு படிக்க வைத்து வேலைக்கும் அனுப்பி ஒரு ஆளாக்கிவிட்டு, பிள்ளைகளின் திருமணத்துக்குப் பின் பிள்ளை வீட்டில் சாப்பிடமுடியாத…. ஒரு வருஷம் கூட பிள்ளையுடன் வாழ முடியாத அவலத்தில் இருக்கும் பெற்றோர்களும் …..

    குழந்தைகள் பாடு : தாய்க்கு தந்தைக்கும் நடுவில் நடக்கும் பூசலில் தந்தையிடம் (அல்லது தாயிடம் ) இருந்து பிரிக்கபடும் குழந்தைளும்…

    ஆக மொத்தம் நம் சமுதாமும் சீரழிந்து வருகிறது

    அன்புடன்
    சுப்பு


  4. ஐயா,

    இந்த பிரச்சினையின் மூன்றாவது கோணத்தில் நிற்கிற தீபக் குமார் செய்தது சரியா, தவறா?

    இயற்கை உணர்வினை, சமூகத்தின் இழிவுக்குட்படாமல் அனுபவிக்க அந்த பெண்ணுக்கு தீப குமார் கிடைத்தார். அவரது இழப்பை அந்தப் பெண்ணால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

    அவளது நிலையில் ஒரு ஆண் இருந்தால், அவன் இந்த உறவை உதறி எறிந்துவிட்டு வேறு உறவை ஏற்படுத்திக்கொண்டிருப்பான். தொடர்ந்து ஏற்படுத்திக்கொள்ளும் புதிய உறவுகளால் அவனது பாதுகாப்பு பாதிக்கப்படாது. ஏனெனில், ஆண்களுக்கு அந்த வசதியை சமூகம் தருகிறது.

    ஆனால், இந்தப் பெண் வேறு ஒருவனை நாடியிருந்தால், அவளுக்கு பாதுகாப்பு, மரியாதை அழிந்துபோய்விடும்.

    அதனால்தான் வள்ளுவரின் திருக்குறள் ஒழுக்கமாய் இரு என்று ஆண்களுக்கு மட்டுமே போதிக்கிறது. அந்தப் போதனையை பெண்களுக்கு வள்ளுவர் வைக்கவில்லை.

    ஏனெனில், பெண்களுக்கு சுதந்திரத்தையும் ஆண்களுக்கு கட்டுப்பாட்டையும் விதித்தது ஹிந்து மரபு. ஆபிரகாமிய மரபுகள் அதை தலைகீழாக்கின. அதனால்தான், இந்த ஆஸிட் வீச்சு.

    ஆபிரகாமிய மரபின் கொடிதாங்கிகளான இன்றைய மீடியாக்களும் அப்படியே செயல்படுகின்றன. “ஆள்வார் பேட்டை ஆண்டவா” போன்ற பாட்டுக்களை புரட்சி பேசும் உலகநாயகர்கள் ஆண்களுக்கு மட்டுமே பாடுகிறார்கள். நீங்களும் அதே பின்பாட்டு பாடலாமா?

    எனது பக்கத்துவீட்டுப் பையன் ஒருவன் திருமணமான பெண்ணோடு உறவு கொண்டு, அதை அவர்கள் வீட்டு வேலைக்காரி மூலம் படம் எடுக்கவைத்து, அவளை ப்ளாக் மெய்ல் செய்தான். அந்தப் பெண் தற்கொலைக்கு முயல, போலீஸ் கேஸாகி அப்போதுதான் அந்தப் பிரச்சினையே கணவருக்கு தெரியவந்தது. ஆனால், தன் மனைவிக்கு ஆதரவாகவே அவர் நின்றார். போலீஸிற்கு ஏகப்பட்ட பணத்தை செலவழித்து தன் மனைவி தற்கொலை கேஸில் இருந்து தப்பிக்க வழிசெய்தார். தனது குடும்பத்தை வேறு ஒரு ஊருக்கும் மாற்றிக்கொண்டார்.

    எனக்குத் தெரிந்த மற்றொரு பெண் தன் கணவரின் நண்பருக்கு ஒரு பிள்ளை பெற்றாள். இந்த விஷயம் அவளது கணவருக்கு இன்றுவரை தெரியாது. இனிமேலும் தெரியாது. ஏனெனில், அவர் இப்போது உயிரோடு இல்லை. சமூகத்தில் நல்ல குடும்பப் பெண்ணாகவே அவள் வலம் வருகிறாள்.

    இப்போது சொல்லுங்கள், இந்த பிரச்சினை என்.ஆர்.ஐகளுக்கு மட்டும் ஏற்படுவதா, இல்லையா என்பதை.

    மனிதர்களில் பெரும்பாலானோருக்கு ஒரு கணவன் அல்லது ஒரு மனைவி போதுமானதாக இல்லை. குடும்பம் என்பது அவர்களின்மேல் திணிக்கப்படும்போது, அவர்கள் வெளியில் சமூகத்தின் மரியாதைக்காக ஒருவராகவும், உண்மையில் வேறு ஒருவராகவும் இருக்கிறார்கள்.

    சமூகமும் இந்த இரட்டைவேடத்தை விரும்புகிறது. ஆதரிக்கிறது. நடைமுறை உலகம் இப்படித்தான் இருக்கிறது. ஆபிரகாமியம் போதிக்கும் பதினோராவது கட்டளைதான் (Never get caught) புழக்கத்தில் சிறப்பானது.

    சற்றே சிந்தித்தால் ஒரு பெண்ணோடோ, ஆணோடோ தங்களது உறவுகளை நிறுத்திக்கொள்ளுபவர்களுக்கும், பலரோடு பாதுகாப்பாக உறவுகொள்பவர்களுக்கும் இடையே எந்த வித்தியாசமும் இல்லை.

    கண்டிக்கப்படவேண்டியது, ஒருவர்/ஒருத்தி தனது ஆசைகளுக்கும், செயல்களுக்கும் ரெஸ்பான்ஸிபிளாக இல்லாமல் இருப்பது மட்டுமே.

    In this case, all the three are guilty.


  5. நன்றி சுப்பு.

    இன்றைய நிலையில் படித்த ஆண் பிள்ளைகள் வெளியுலகுக்குப் பயந்து ஒடுங்குகிறார்கள். பெண்கள் மிகத் தைரியமாக எப்பழிக்கும் அஞ்சாதவர்களாக பொய் வழக்கு போடுகிறார்கள். கணவனையும் அவனது பெற்றோரையும் எப்படியாவது “உள்ளே” தள்ளவேண்டும் என்று வெறிபிடித்து அலையும் மணமான பெண்கள் பலர் உண்டு. Men are mostly on the defensive and merely reactive. As William Congreve observed, “Hell hath no fury like a woman scorned”.

    இதையெல்லாம் பார்க்கும்போது அராபியர்கள் புத்திசாலிகள்தான் என்று தொன்றுகிறது!

    எஸ்.கே


  6. //எனது பக்கத்துவீட்டுப் பையன் ஒருவன் திருமணமான பெண்ணோடு உறவு கொண்டு, அதை அவர்கள் வீட்டு வேலைக்காரி மூலம் படம் எடுக்கவைத்து, அவளை ப்ளாக் மெய்ல் செய்தான். அந்தப் பெண் தற்கொலைக்கு முயல, போலீஸ் கேஸாகி அப்போதுதான் அந்தப் பிரச்சினையே கணவருக்கு தெரியவந்தது. ஆனால், தன் மனைவிக்கு ஆதரவாகவே அவர் நின்றார். …//

    ஆண்கள் இதுபோல் மொண்ணையாகத்தான் இருக்கிறார்கள். வெட்கம்.

    //குடும்பம் என்பது அவர்களின்மேல் திணிக்கப்படும்போது, அவர்கள் வெளியில் சமூகத்தின் மரியாதைக்காக ஒருவராகவும், உண்மையில் வேறு ஒருவராகவும் இருக்கிறார்கள்.//

    திருமணமாகி கட்டுக்கோப்புடன் குடும்பமாக வாழ்வதே இயற்கைக்குப் புறம்பானது என்ன்கிறீர்கள், இல்லையா! இதுபோன்ற சமூகக் கட்டுப்பாடுகளைக் கட்டுடைத்து, மனதைக் கட்டவிழ்த்து விடுவது தொடங்கிவிட்டது.

    We are progressing towards total freedom and license.

    எஸ்.கே


  7. /// We are progressing towards total freedom and license. ////

    No.

    When the demand is more the supplied gets high value.


  8. இன்று குழந்தைகள் இருக்கும் பெண்கள் கள்ளக்காதலனுடன் கொஞ்சமும் தயங்காமல் ஓட தயாராய் இருக்கும் போது தாய்மை எங்கே போயிற்று. அரிப்புக்கு தேவை என்னவோ அது தான் முக்கியம் என்று ஆகிவிட்ட பிறகு பண்பு, பாரம்பரியம், குடும்பம், குலப்பெருமை என பேசி என்ன பயன். அடங்கமுடியாமல் மடங்கியவனோடு ஓடத்தானே செய்வார்கள். இனி அப்படித்தான் என ஒத்துகொள்வதே அறிவு

Leave a Reply

Your email address will not be published.