தோலினுள் நுழைந்தது துகள், தொலைந்தது இவ்வுலகம்!

"சிக்"கென்ற "சிப்"! “வெரிசிப்” என்று அழைக்கப்படும் ஒரு சில் துகளை (“VeriChip“, a miniaturised, implantable radio frequency identification device (RFID) about the size of a grain of rice, that has the potential to be used in a variety of personal identification, security, financial, and potential healthcare applications.) மனிதத் தோலினடியில் செலுத்தி அந்த மனிதனின் செயல்பாடுகள், அவனுடைய உடல்நிலை மாறுதல்கள் போன்றவற்றை கணினி மூலம் கண்காணிக்கும் செயல் பாட்டினை அமெரிக்க அரசாங்கம் (America’s Food and Drug Administration) ஏற்பாடு செய்திருக்கிறது.

வெறி பிடிக்காமலிருந்தால் சரி! அந்த நுண்துகளை ($200) ஊசிமூலமாக தோலினடியில் செலுத்தியபின், அது தொடர்ந்து அதன் தனிப்பட்ட முகவரியினை ரேடியோ அலைகளாக வெளிப்படுத்தியபடி இருக்கும். இந்த செய்திகளைப் பெருவதற்காகவே வடிவமைக்கப்பட்ட சிறப்புக் கருவி இந்த அலைகளை உள்வாங்கி கணினி மூலமாக பலவித செயல்பாடுகளுக்கு பயன் படுத்தப் படும் என்கிறார்கள்.

இப்போது மருத்துவ ஆய்வுக்காக மட்டும் இந்த technology பயன்படுத்தப்படும் என்று அரசு அறிவித்திருந்த போதிலும், இந்த சிப் முறையை அமல் படுத்தியபின் தனிமனிதன் இனிமேல் தன்னிச்சையாக செயல்படவே முடியாது, அவனுடைய் சுதந்திரம் பறிபோய்விடும் (privacy-threatening) என்ற எதிர்க்குறலகள் உரக்கவே ஒலிக்க ஆரம்பித்து விட்டன. அந்தச் சில் பொருத்தப்பட்ட மனிதனின் என்ணங்கள், செயல்கள் எல்லாவற்றையும் இன்னொருவர் முழுமையாக கண்டறிவது மட்டுமல்லாமல் அந்த மனிதனைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவும் சாத்தியம் இருப்பதால், இந்த முடிவை பலர் எதிர்க்கிறார்கள்.

இது தவிர பல உடல்நிலைக் கோளாறுகளை இந்தக் கருவி உண்டாக்கக் கூடும் என்றும், இதனைச் செலுத்துவதுதான் சுலபமே தவிர வெளியெடுப்பது மிகவும் கடினம், அதற்காக பெரியதொரு அறுவை சிகிச்சையைச் செய்ய வேண்டியிருக்கும், அதனால் பல பின்விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பது போன்ற கருத்துக்கள் பல விஞ்ஞானிகள் மூலமாக வெளிவந்த வன்ணம் இருக்கின்றன.

ஆனால் இந்தத் துகள் செலுத்தப்பட்ட நபர் எங்கிருந்தாலும் அவரை கண்டுகொள்ள முடியும் (trackability) என்பதால், பிணைக்கைதிகளாக கடத்தப்படுவோமோ என்று அஞ்சும் பலர் இந்தத் துகளை உட்செலுத்திக் கொள்ள மிக ஆவலாக இருக்கிறார்கள் என்று கூறுகிறார்கள். மெக்ஸிகோ நாட்டில் இந்தக் காரணத்திற்காகவே பலர் ஆர்வம் காட்டியுள்ளார்கள் என்று தெரிகிறது. நம் நாட்டிலும் இன்றைய நிலைமையைக் கருத்தில் கொண்டு பீகாரில் பலர் இதனை வரவேற்பார்கள் என்று நினைக்கிறேன்!

பிரச்னை இப்போது வேறு பாதையில் திசை திரும்ப ஆரம்பித்திருக்கிறது. பைபிளில் சொல்லியுள்ளபடி நெற்றியிலோ வலது கையிலோ ஒரு குறி ஏற்படும்போது சைத்தானின் ஆதிக்கம் அதிகமாகி உலகம் அழிந்துவிடும் (Apocalypse) என்கிற நம்பிக்கையில் அதில் குறிப்பிட்டுள்ள “குறி” இந்த வெரிசிப்தான் என்று சொல்கிறார்கள் சிலர். அதனால் இந்த வெரிசிப்பை சைத்தானின் குறியீட்டு என்ணான “666”-உடன் ஒப்பிடுகிறார்கள் (mark of the beast).

தோன்றுவது எல்லாமே ஒரு நாள் அழியவேண்டியவைதானே என்ற கருத்தில், இதற்கெல்லாம் கவலைப் படாமல் வெரிசிப் இப்போது போடு போடென்று போடுகிறது. சீக்கிறத்திலேயே கடைகளுக்குச் சென்று சமான்களை எடுத்துப் போட்டுக் கொண்டு பணம் கொடுக்காமலேயே “ஹாயா”க கையை வீசிக் கொண்டு வீட்டுக்குச் சென்றுவிடலாம் – ஆமாம், கையில் தான் பை இருக்குமே, எப்படி வீசுவது என்று கேட்கலாம் (உங்கள் பெயர் மூர்த்தியா?), சரி பையை தோள்பட்டையில் மாட்டிக் கொள்ளுங்களேன்! அவற்றின் மதிப்பு உங்கள் வங்கிக் கணக்கில் கழிக்கப் படும். அதான் உங்கள் ஜாதகம் முழுவதையும் உங்கள் புறங்கை சில்லு அதன் அண்ணனிடம் ஒப்பித்துவிட்டதே!

1 Comment


  1. Dear SK

    Did you see a movie ‘Enemy of the state’acted by Will Smith. The concept has been used in that movie as a plot by american agency. Interesting movie related to your artcile.

    Regards
    S.Thirumalai

Comments are closed.